Wednesday, July 27, 2022
1995ம் ஆண்டு நான் துறையூர் சிறப்புமுகாமில்
1995ம் ஆண்டு நான் துறையூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்தவேளை அச் செய்தி அறிய கிடைத்தது.
அப்துல் ரவூப் என்ற இளைஞர் தன் 23வயதில் ஈழத் தமிழருக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி.
ராஜீவ் காந்தி கொலைக்கு பின்னர் தமிழகத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவு இல்லை என்று இந்தியஅரசு கட்டமைத்து வைத்திருந்த விம்பத்தை அச் செய்தி சுக்குநூறாக உடைத் தெறிந்தது.
அதைவிட ஆச்சரியம் என்னவெனில் “பணம் தரலாம் உங்கள் மகன் காதல் தோல்வியில் தற்கொலை செய்துகொண்டான் என்று கூறுங்கள்” என்று தமிழக அரசு மிரட்டியும் ரவூப் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை.
அப்தல் ரவூப் உயிருடன் இருந்திருந்தால் இன்று தன் 50வது பிறந்தநாளைக் குடும்பத்துடன் கொண்டாடியிருப்பார்.
அப்துல் ரவூப்பை தொடர்ந்து இதுவரை 17 தமிழக தமிழர்கள் ஈழத் தமிழருக்காக உயிர் துறந்துள்ளார்கள்.
ஆனாலும் தமிழின படுகொலையை அவர்களால் நிறுத்த முடியவில்லை.
ஏனெனில் அரசுக்கு எவ்வித சேதம் தராத தற்கொலைகள் குறித்து அரசு ஒருபோதும் கவலை கொள்வதில்லை.
அதுமட்டுமல்ல முக்கியமாக தமிழக தமிழர்களை ஆள்பவர்கள் தமிழரில்லை அல்லது தமிழின உணர்வு அற்றவர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment