• சதீஸ்ட்;கரில் நக்சலைட் தாக்குதல் - 23 பேர் பலி
இது பயங்கரவாதமா? அல்லது
பாதிக்கப்பட்ட மக்களின் பதிலடியா?
இது கருப்பு தினம் என்கிறார் பிரதமர். இது காங்கிரஸ் மீதான தாக்குதல் அல்ல ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்கிறார் ராகுல் காந்தி. அத்வானி ஓடிச் சென்று பாதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவரை பார்வையிடுகிறார். இவாவாறு அனைத்து ஆளும்வர்க்க தலைவர்களும் சம்பவத்தைக் கண்டிக்கிறார்களேயொழிய சம்பவத்திற்கான காரணம் குறித்து கருத்து எதுவும் கூறாமல் மௌனம் சாதிக்கின்றனர்.
காங்கிரஸ் உருவாக்கிய சல்வாஜீடும் அதன் பிதாமகர் மகேந்திரகர்மாவுமே தாக்குதல் இலக்காக இருந்திருக்கிறது. சல்வாஜீடும் என்பது என்றால் அமைதி வேட்டை என்று பொருள். இவர்களுக்கு அரசே ஆயுதம் கொடுத்தது. டாடா எஸ்ஸார் போன்ற பெருமுதலாளி குழுமங்கள் இந்த படைக்கான செலவை ஏற்றுக்கொண்டனர்.
சல்வா ஜுடும் ஊர் ஊராகச் சென்று மக்களைக் கிராமங்களிலிருந்து விரட்டியடித்தது. எண்ணற்ற கொலையையும் கணக்கிலடங்கா கற்பழிப்பிலும் ஈடுபட்டது. தண்டகாரண்யப் பகுதியில் மட்டும் 660 கிராமங்களுக்கு மேல் காலி செய்யப்பட்டன. 50,000 மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். மூன்றரை இலட்சம் மக்கள் காணாமற் போய் விட்டார்கள். இன்று வரை அவர்களைக் காணவில்லை. இதெல்லாம் அங்கே நடந்த கொடூரத்தில் பாதி தான் முழுமையாக நடந்தது இன்றுவரை யாருக்கும் தெரியாது. 2011 ஆண்டு உச்சநீதிமன்றம் சல்வா ஜுடுமை சட்டம் மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று தீர்ப்பளித்து தடை செய்தது. ஆனால் அதற்குள் அங்கே எல்லாம் நாசமாகிவிட்டது. பல ஆயிரம் உயிர்களும் பல லட்சம் குடும்பங்களும் பல கோடி பெறுமானமுள்ள காடுகளும் நாசமாகிவிட்டன.
இத்தனை கொடுமைகளை செய்த சல்வா ஜுடுமை உருவாகிய மகேந்திர கர்மாவை குறிவைத்து தான் நேற்றைய தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. தங்கள் மக்களின் மிகக்கொடிய அழிவிற்கு காரணமானவர்களை அழித்திருக்கிறார்கள் அம்மண்ணின் மக்கள்.
# காங்கிரஸ் என்ற கட்சி தங்கள் அரசியல் லாபங்களுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யும் என்பதற்கு ஒரு சாட்சி தான் சல்வா ஜுடும்.கீழே உள்ள படத்தைப்பாருங்கள். அம் மக்களின் வலி புரியும். ஏன் இவ்வாறான சம்பவங்கள் நடக்கின்றன என்பதன் நியாயம் தெரியும்.

No comments:
Post a Comment