• வன்னியில் 3 பிள்ளைகளின் தாய் இலங்கை ராணுவத்தால் கற்பழிப்பு!
• தமிழ் பகுதியில் தொடரும் ராணுவ அட்டூழியங்கள்!
• லண்டனில் பல ஆயிரம் பவுண்ஸ் செலவில் தமிழுக்கு மாநாடு!
வன்னியில் பூநகரிப் பிரதேசத்தில் 38 வயதான, மூன்று பிள்ளைகளின் தாயார் இலங்கை ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டுள்ளார். மயங்கிய நிலையில் கிளிநொச்சி மருத்துமனையில் அனுமதிக்கப்ட்டிருக்கும் இத் தமிழ்பெண்ணை பார்வையிடுவதற்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்குகூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த மாதம் வன்னியில் நெடுங்கேணி என்னும் இடத்தில் பள்ளி சிறுமி ஒருவர் இலங்கை ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டார். இதனை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால் அரசு வேறு வழியின்றி ஒரு ராணுவ வீரர் மேல் வழக்கு போட்டிருக்கிறது.
யுத்த காலத்தில் கூட இந்தளவு கற்பழிப்பு ஆபத்துகள் வன்னியில் இருந்ததில்லை என்று சொல்லுமளவிற்கு தற்போது அதிகரித்து வருகிறது. அரசு கடும் நடவடிக்கை எடுக்க தயங்குவதாலே ராணுவம் இந்தளவு தூரம் அக்கிரமாக நடந்து கொள்கிறது.
அரசியல்வாதிகள் எல்லாம் பதவிக்காக ஓட்டுப் பொறுக்கும் இந்த நேரத்தில் கூட ராணுவம் இந்தளவு அராஜகம் செய்கிறது எனில் தேர்தல் முடிய இன்னும் அக்கிரமாக நடந்து கொள்ளும் ஆபத்து இருக்கிறது.
ஜ.நா மனிதவுரிமை செயலர் நவநீதம்பிள்ளை விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய இருக்கிறார். அவர் ஒரு பெண். எனவே இலங்கையில் தமிழ் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பு இன்மை குறித்து அவர் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோருகிறேன். இது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் உணர்வுள்ள அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
வன்னியில் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். குழந்தைகள் சாப்பாட்டுக்கு வழியின்றி கிணற்றில் வீசிக் கொல்லப்படுகிறார்கள். ஆனால் புலத்தில் உள்ள சிலர் அது பற்றி அக்கறையின்றி பல ஆயிரம் பவுண்ஸ் செலவில் தமிழுக்கு மாநாடு நடத்துகிறார்கள். வன்னியில் மக்கள் சாகும்பொது அது பற்றி அக்கறையின்றி கலைஞர் செம்மொழி மாநாடு நடத்துகிறார் என்று விமர்சித்தவர்கள் இன்று தாங்கள் அதே தவறை கொஞ்சம் கூட வெட்கம் இன்றி செய்கிறார்கள்.
வன்னி மக்களே!
இந்த பாவிகளை மன்னிப்பீர்களாக!

No comments:
Post a Comment