• தமிழ்நாட்டை தமிழன் ஆட்சி செய்தால்
தமிழ் மக்களுக்கு விடிவு பிறக்குமா?
கேரளாவை மலையாளியே ஆட்சி செய்கிறான். கர்நாடாவை கன்னடத்தவரே ஆட்சி செய்கின்றனர். ஆந்திராவை தெலுங்கர்களே ஆட்சி செய்கின்றனர். அந்த மாநிலங்கள் தமிழ்நாட்டைவிட எந்த விதத்தில் முன்னேறியிருக்கின்றன?
தமிழகம் முன்னேற்றம் பெறாமைக்கு கலைஞரும் ஜெயா அம்மையாரும் தமிழர் அல்ல என்பது காரணம் என்றால் நாளை 'நாம்தமிழர்' சீமான் ஆட்சி எறினால் இவர்களை விட என்ன செய்து விடமுடியும்?
ஏனென்றால் மாநில முதலமைச்சருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்னும்போது ஒரு தமிழர் முதலமைச்சரானாலும் மத்திய அரசை மீறி என்ன செய்துவிட முடியும்?
இலங்கையில் கொழும்பில் தமிழர்கள் வந்து பிழைக்கிறார்கள் என கூச்சல் போடும் சிங்கள வெறியர்கள் செட்டியார் தெருவில் உள்ள நகைக்கடை முதலாளிகளை எதிர்ப்பதில்லை. கலவரங்களில் சாதாரண அப்பாவி தமிழர்கள் தாக்கப்படும் வேளைகளில் நகைக்கடைகள் தாக்கப்படுவதில்லை. இலங்கை அரசு அவற்றுக்கு பூரண பாதுகாப்பு கொடுத்து வருகிறது.
இலங்கையில் பெரும் முதலாளிகள் ஞானம், மகாராஜா போன்ற தமிழர்கள். யுத்தம் நடந்த காலத்தில்கூட அவர்களால் எப்படி பாதுகாப்பாக கொழும்பில் வியாபாரம் செய்ய முடிந்தது? தமிழ் முதலாளியும் சிங்கள முதலாளியும் ஒற்றுமையாக மக்களை சுரண்டுகின்றனர். ஆனால் தமிழ் தொழிலாளியும் சிங்கள தொழிலாளியும் இந்த முதலாளிகளுக்காக தங்களுக்கள் அடித்துக் கொள்கிறார்கள்.
அதேபோல் 'தமிழ்நாட்டில் மலையாளி வந்து டீ கடை போட்டு பிழைக்கிறான். பீகாரி வந்து கூலி தொழில் செய்து பிழைக்கிறான்' என கூச்சல் போடுபவர்கள் அம்பானி, பிர்லா முதலாளிகள் தமிழகத்தை சுரண்டுவது பற்றி ஏன் பேசுவதில்லை. தமிழக முதலாளி மாறன் மற்ற மாநிலங்களில் சுரண்டுவது குறித்து ஏன் கண்டுகொள்வதில்லை?
சர்வதேச தொழிலார்களே ஒன்று சேருங்கள் என ஒருபுறம் சோசம் எழுப்பிக் கொண்டு மறுபுறத்தில் இனரீதியாக தொழிலாளர்களை பிரித்து அவர்களுக்கிடையே மோதலை உருவாக்குவது என்பது முதலாளித்துவத்திற்கு மறைமுகமாக செய்யும் சேவையாகவே அமையும்.

No comments:
Post a Comment