• நக்சல்பாரிகள் தேசபக்தர்களா? தேசவிரோதிகளா?
“மக்களுக்காக போராடும் நக்சல்பாரிகள் தேச விரோதிகள் அல்லர். அவர்கள் தேசபக்தர்கள்” என்று இந்திய உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. ஆனால் “துக்ளக்” சோ, நக்சல்பாரிகள் தேசவிரோதிகள் என்றும் அவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
சோ அவர்கள் (துக்ளக் 16.07.2014 , பக்-7) தர்மபுரியில் நக்சலைட்டுகள் என்னும் பேரில் கைது செய்யப்பட்ட ஏழு இளைஞர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். உடனே ஜெயா அம்மையாரின் அரசு அந்த இளைஞர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போட்டு சிறையில் அடைத்துள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் செய்த குற்றம் என்ன? அவர்கள்
காஞ்சி சங்கராச்சாரியார் போன்று கூலிக்கு கொலை செய்தவர்களா?
கனிமொழி, ராசா போன்று பல்லாயிரம் கோடி ஊழல் செய்தவர்களா?
ஜெயா அம்மையார் போன்று சொத்து குவிப்பு வழக்கு உள்ளதா?
இத்தனைபேரும் வெளியில் இருக்க அந்த இளைஞர்களை மட்டும் எதற்காக சிறையில் அடைக்க வேண்டும்?
நத்தம் காலனியில் சாதிக் கலவரம் செய்தவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.ஆனால் அந்த சாதிக் கொடுமைக்கு எதிராக திரண்ட இளைஞர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இது என்ன நியாயம்?
கைது செய்யப்பட்ட நக்சலைட்டுகள் சென்னை மெரினா கடற்கரையில் ஆயுதப் பயிற்சி எடுத்தாக பொலிஸ் கூறுகிறது. பொலிஸ் கமிசனர் அலுவலகத்திற்கு முன்பு பயிற்சி எடுப்பதாக கூறுவதை நம்புவதற்கு மக்கள் என்ன முட்டாள்களா?
இதுவரை மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவுவதாக கூறியவர்கள் இப்போது ஜரோப்பாவில் இருந்து உதவி வருவதாக கதை விடுகிறார்கள்.
முன்பு தர்மபுரியில் அப்பாவி இளைஞர்கள் பலரை நக்சலைட்டுகள் என்னும் பேரில் தேவாரம் சுட்டுக்கொன்றார். அதேபோன்றும் இன்றும் பொலிசார் சுட்டுக்கொல்ல வேண்டும் என சோ கேட்கிறார்.
நடப்பது சட்டத்தின் ஆட்சியா அல்லது சோவின் “அவாள்” ஆட்சியா?

No comments:
Post a Comment