• கடந்த ஞாயிற்றுக்கிழமை (13.07.2014)யன்று மாலை 3 மணிக்கு லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் “மக்கள் ஜனநாயக அரங்கு” சார்பில் உரையாடலும் ஆவணத் திரையிடலும் நடைபெற்றது.
முதலாவது அமர்வாக கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரட்ணா அவர்களின் உரை இடம்பெற்றது. அவர் இலங்கையில் ஜனநாயகம், இன உரிமை மற்றும் அதிகாரப் பகிர்வு என்னும் தலைப்பில் உரையாற்றினார். இவ் உரையாடல் அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. உரையாடலின் இறுதியில் பார்வையாளரின் கேள்விகளுக்கு ஜெயம்பதி விக்கிரமரட்ணா பதில் அளித்தார்.
இரண்டாவது அமர்வாக “சியாம் -பர்மா , மரண ரயில்பாதை” என்னும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. பின்னர் திரை விமர்சகர் யமுனா ராஜேந்திரன் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது இப் படத்தின் இயக்குனர் குறிஞ்சி வேந்தன் கலந்துகொண்டு தனது கருத்துக்களை பகிர்ந்தார்.
இந்த ஆவணப்படம் இன்னொரு “பரதேசி” கதையையே எமக்கு நினைவூட்டுகிறது. ரயில்வே பாதை நிர்மானிக்க அழைத்து செல்லப்பட்ட ஆசிய தொழிலாளர்களின் குறிப்பாக எமது தமிழ் மக்களின் சோகக் கதையை இது காட்டுகிறது. வரலாற்றில் மறைக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்ட ஒரு கதையை காட்டியிருக்கும் இந்த இயக்குனர் உண்மையில் மிகவும் பாராட்டப்படவேண்டியவர்.
ஞாயிற்றுக்கிழமை அதுவும் உலகப்பந்தாட்டம் இறுதிப் போட்டி நடைபெற்ற நாளில் மண்டபம் நிறைந்த மக்கள் வந்து பங்குபற்றியது ஆச்சரியமும் ஆறுதலும் தருகிறது. ஒரு நல்ல நிகழ்வு இடம் பெற்றுள்ளமை தொடர்ந்தும் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்த உத்வேகம் தருவதாக அமைகிறது.

No comments:
Post a Comment