ஜெயா அம்மையார் தனது உயிருக்கு ஆபத்து என்று குறிப்பிட்ட புலிகள் இவைதானா?
18 வருடம் வழக்கை இழுத்தடித்த ஜெயா அம்மையார் இறுதி நேரத்தில்கூட தனது உயிருக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து என்று குறிப்பிட்டார். அவர் தனக்கு ஆபத்து என்று குறிப்பிட்டது தான் வளர்த்த புலிக்குட்டிகளைப் போலும். இல்லையேல,அவர் விடுதலைப் புலிகளைக் குறிப்பிட்டிருந்தால்
• விடுதலைப்புலிகளின் தடைக்கு எதிராக வழக்கு நடத்தும் புரட்சிப் புயல் வைகோ அவர்கள் வெகுண்டு எழுந்து எதிர்ப்பு தெரிவித்திருப்பாரே?
• புலிகளுக்காக முள்ளிவாயக்கால் முற்றம் அமைத்த அய்யா நெடுமாறன் கண்டனம் தெரிவிக்காமல் மௌனமாக இருப்பாரா?
• அய்ங்கரனுக்கு படம் எடுக்கும்படி விடுதலைப்புலிகள் தலைவர் தன்னிடம் கூறியதாக தெரிவிக்கும் சீமான் கூட இந் நேரம் பாய்ந்து களமாடியிருப்பாரே?
• எல்லாவற்றுக்கும்மேலாக நாடுகடந்த தமிழீழ அரசுகூட இது குறித்து கண்டனம் தெரிவிக்காமல் அதரவு தெரிவிக்குமா?
ஜெயா அம்மையார் குறிப்பிட்டது விடுதலைப் புலிகளை அல்ல என்பது இந்த தலைவர்களுக்கு புரிந்திருக்கிறது. எனக்கு மட்டும் ஏனோ புரியமாட்டேங்கிறது?
அதுமட்டுமல்ல, விடுதலைப் புலிகள் தற்போது இல்லை என்று கூறி மத்திய அரசு ராஜிவ் காந்தி வழக்கில் இருந்து பிரபாகரனையும், பொட்டம்மானையும் விடுவித்துள்ளது. ஆனால் விடுதலைப் புலிகளால் ஆபத்து என்று ஜெயா அம்மையாருக்கும,கலைஞர் கருணாநிதிக்கும் இன்னமும் கறுப்பு பூனை பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
இல்லாத விடுதலைப்புலிகளால் எப்படி ஜெயா அம்மையாருக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் உயிராபத்து வரும?என்பதும் எனக்கு புரியவில்லை.
அதைவிட இந்த ஊழல் தலைவர்களுக்கு ஏன் மக்களின் வரிப் பணத்தில் கறுப்பு பூனை பாதுகாப்பு? என்பதும் எனக்கு புரியவில்லை.
யாராவது புரிந்தவர்கள் எனக்கு விளக்குவீர்களா?
No comments:
Post a Comment