• கலைஞர் கும்பல் தண்டிக்கப்படுவது எப்போது?
மக்கள் பணத்தை சுருட்டிய ஜெயா அம்மையார் தண்டிக்கப்பட்டதை வரவேற்கிறோம். அதேபோன்று கலைஞர் கருணாநிதி கும்பல் எப்போது தண்டிக்கப்படுவார்கள்? இதுவே இன்று மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியாகும்.
ஜெயா அம்மையார் தன்மீதான வழக்கை 18 வருடம் இழுத்தடித்தார். அதேபோன்று கலைஞர் கும்பலும் வழக்கை இழுத்தடிக்க இடம் கொடுக்காமல் விரைந்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். இதுவே மக்கள் விருப்பமாகும்.
66 கோடி ரூபாவை சுருட்டிய ஜெயா அம்மையாருக்கு 4 வருடம் தண்டனை என்று தீர்ப்பு வழங்கியவுடன் தனக்கு சுகர, கால் மூட்டு வலி என்று பல நோய்களை கூறினார். அதேபோன்று கலைஞர் டிவி ல் 200 கோடி முதலீடு செய்த தயாளு அம்மையார் நீதிமன்ற விசாரணைக்கு வரும்படி அழைத்தவுடன் தனக்கு ஞாபக மறதி நோய் என்கிறார்.
அரசியல்வாதிகளுக்கு மக்களின் பணத்தை சுருட்டும்போது எந்த நோயும் வருவதில்லை. ஆனால் நீதிமன்ற விசாரணைக்கு வரும்படி அழைத்தவுடன் எங்கிருந்தோ திடீரென்று பல நோய்கள் வந்துவிடுகிறது.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். இங்கு விவசாயக் கடன் கட்ட தவறிய விவசாயிகளை உடன் சிறையில் அடைக்கிறார்கள். ஆனால் பல்லாயிரம் கோடி கடன் பெற்ற மல்லையா போன்ற முதலாளிகள் சுதந்திரமாக உலாவுகிறார்கள். இதுதான் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதன் லட்சனமா?
வங்கி கடனை கட்ட தவறிய ஏழை மக்கள் மானத்திற்கு அஞ்சி குடும்பமாக தற்கொலை செய்கிறார்கள். ஆனால் ஊழல் செய்த அரசியல்வாதிகள் தண்டனை பெற்ற பின்பும்கூட கொஞ்சம்கூட வெட்கம் இன்றி பவனி வருகிறார்கள். என்ன கேவலம் இது?
ஜெயா அம்மையார் ஆட்சியில் இருந்து மட்டுமல்ல அரசியலில் இருந்தே விரட்டியடிக்க வேண்டும். இது ஊழல் பேர்வழிகளான கலைஞர் கும்பல்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.
No comments:
Post a Comment