Tuesday, April 12, 2016

•சிங்கப்பூர் பிரதமரும் தமிழக முதலமைச்சரும்

•சிங்கப்பூர் பிரதமரும் தமிழக முதலமைச்சரும்
சிங்கப்பூர் பிரதமர் கியூவில் நின்று உணவு வாங்குகிறார்.
சிங்கப்பூர் பிரதமர் பாதுகாப்பு பந்தா இன்றி திரிகிறார்.
தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றுவோம் என கூறும் தமிழக தலைவர்கள் 
சிங்கப்பூர் பிரதமர் போல் எளிமையாக மக்களுடன் நடமாடுவதில்லை.
ஜெயா அம்மையார் கெலிகெப்டரில் சவாரி செய்கிறார்.
அவருக்காக விவசாய நிலங்களை தார் போட்டு கெலிபேட் அமைக்கின்றனர்.
அதனால் விவசாயிகளுக்கு தேவையற்ற நெருக்கடி கொடுக்கின்றனர்.
ஜந்து வருடத்திற்கு ஒரு முறைதான் மக்களை வந்து சந்திக்கும் ஜெயா அம்மையார்.
அதுவும் சுற்றிவர 8 குளிர்சாதன பெட்டிகளுக்கு நடுவேதான் உட்கார்ந்து பேசுகிறார்.
ஆனால் வறிய மக்களை 5 மணி நேரத்திற்கு மேலாக வெயிலில் காய வைக்கிறார்.
பசி மற்றும் மயக்கத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் இரண்டு பெண்கள் அநியாயமாக இறந்து விட்டார்கள்.
இவர்கள் பதவி பெறவும்
பெற்ற பதவியை வைத்து
பல கோடி ரூபா ஊழல் செய்யவும்
அப்பாவி மக்கள் பலியாக வேண்டுமா?
இந்த கொடுமைக்கு ஒரு முடிவு இல்லையா?
ஜெயா அம்மையார் ஆள் துணையின்றி டாய்லெட் போக முடியவில்லை என்கிறார்கள்.
கலைஞர் வேட்டியிலேயே முத்திரம் போவதுகூட தெரியவில்லை என்கிறார்கள்.
இப்படி முடியாத நிலையில் வீட்டில் ஓய்வெடுப்பதைவிட்டு எதற்காக இவர்கள் அலைகிறார்கள்?
நடிகையாக இருந்த ஜெயா அம்மையார் 30 ஆயிரம் கோடி ரூபா சம்பாதித்துவிட்டார்
மஞ்சள் பையுடன் வந்த கலைஞர் 50 ஆயிரம் கோடி ரூபா சம்பாதித்துவிட்டார்
எப்படி இவ்வளவு பணம் சம்பாதித்தீர்கள் என்று கேட்டால்,
கதை வசனம் எழுதினேன் என்று கலைஞர் கதை விடுகிறார்.
திராட்சை தோட்டத்தில் இருந்து வந்தது என்கிறார் ஜெயா அம்மையார்
ஆனால்,
மாறி மாறி ஆண்ட இவர்களால் தமிழக அரசின் கடன் 1.21லட்சம் கோடி
இதற்கு வட்டியாக 10754 கோடி ரூபா தமிழக அரசு கட்டுகிறது.
ஒவ்வொரு தமிழன் தலையிலும் 13862 ரூபா கடன் சுமத்தப்பட்டுள்ளது.
பிறக்கும் ஒவ்வொரு தமிழ் குழந்தையும் 13862 ரூபா கடனுடனேயே பிறக்கின்றது.
ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு தமிழகத்தில் இருந்து வரியாக பெற்றுக்கொள்வது 85 ஆயிரம் கோடி ருபா.
மழை நிவாரணமாக ஜெயா அம்மையார் கேட்டது 5 ஆயிரம் கோடி ருபா.
ஆனால் மத்திய அரசு கொடுத்ததோ வெறும் ஆயிரம் கோடி ருபா மட்டுமே
கலைஞரும் ஜெயா அம்மையாரும் ஊழல் பேர்வழிகளாக இருப்பதால் மத்திய அரசிடம் உரிமையுடன் பேசி பெற முடியவில்லை
இவர்களை மீண்டும் மீண்டும் பதவியில் அமர்த்துவதால்,
அவர்கள் ஊழல் கோடிக் கணக்கில் அதிகரிக்கிறது.
மக்கள் தலையில் கடன் சுமை அதிகரிக்கிறது.
இதனை தமிழக மக்கள் உணர வேண்டிய தருணம் இது!

No comments:

Post a Comment