•லண்டன் ஈஸ்ட்காம் நகரில் இடம்பெற்ற நூல் அறிமுக நிகழ்வு
லண்டன் ஈஸ்ட்காம் நகரில் நேற்றைய தினம்(02.04.2016) மாலை 5 மணியளவில் "விம்பம்" சார்பாக இரு நூல் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.
ஜோகரட்ணம் தலைமையில் நடைபெற்ற முதலாவது நிகழ்வில் குணாகவியழகன் எழதிய "அப்பால் ஒரு நிலம்" நூல் அறிமுகம் செய்யப்பட்டது.
எஸ்.வாசன், சேனன் , யமுனா ராஜேந்திரன் ஆகியோர் "அப்பால் ஒரு நிலம்" நூல் குறித்த தமது கருத்துகளை தெரிவித்து உரையாற்றினார்கள்.
பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டபோது பார்வையாளராக வந்திருந்த ராகவன் அவர்கள் தெரிவித்த கருத்திற்கு சேனனும் யமுனா ராஜேந்திரனும் பதில் அளித்தார்கள். அத்துடன் முதலாவது நிகழ்வு முடிவு பெற்றது.
சிறிது நேர தேனீர் இடைவெளிக்கு பின்னர் இரண்டாவது நிகழ்வு ஆரம்பமானது. இரண்டாவது நிகழ்வில் செல்வம் அவர்கள் எழுதிய "எழுதித் தீராப் பக்கங்கள்"நூல் அறிமுகம் செய்யப்பட்டது.
பௌசர், புஸ்பராசன், நித்தியானந்தன் ஆகியோர் " எழுதித் தீராப் பக்கங்கள்" நூல் குறித்த தமது கருத்துகளை முன்வைத்து உரையாற்றினார்கள்.
கனடாவில் இருந்து வந்திருந்த நூல் ஆசிரியர் "காலம்" செல்வம் அவர்கள் தமது எற்புரையை வழங்கினார். அத்துடன் நிகழ்வு முடிவு பெற்றது.
குறிப்பு- விம்பம் ராஜா அவர்கள் தொடர்ந்து லண்டனில் நூல் அறிமுக நிகழ்வகளை நடத்தி வருகிறார். அவருடைய இப் பணியானது உண்மையில் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியது ஆகும்.
No comments:
Post a Comment