•காணாமல் போனவர்களுக்காக குரல் கொடுத்து காணாமல் போனவர்கள்!
வடபகுதியில் காணாமல் போனவர்களுக்காக குரல் கொடுத்த லலித் குகன் இருவரும் காணாமல் போயுள்ளனர்.
முன்னிலை சோசலிசக் கட்சியை சேர்ந்த லலித் குகன் இருவரும் கோத்தபாயாவின் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர்.
100 நாளில் காணாமல் போனோரைக் கண்டு பிடிப்பதாக கூறிய நல்லாட்சி அரசு ஒரு வருடம் சென்ற பின்பும் இன்னும் இவர்களைக் கண்டு பிடிக்கவில்லை.
முன்னிலை சோசலிசக் கட்சி தலைவர் குமார் குணரட்னமும் 1 வருடமாக சிறையில் அடைக்கப்ட்டிருக்கிறார்.
இவர் செய்த குற்றம் தமிழ் மக்களுக்கு சமவுரிமை வழங்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தது ஆகும்.
லலித்தை காணாமல் அவரது மூன்று சகோதரிகளும் கண்ணீர் வடிக்கின்றனர்.
குகன் என்றாவது ஒருநாள் தன்னபை; பாhக்க வருவார் என்று அவரது மகள் காத்தக்கொண்டிருக்கிறார்.
சாவதற்குள் தன் மகன் குமார் குணரட்னத்தை காண்பதற்கு 80 வயதான தாயார் ஏக்கத்துடன் இருக்கிறார்.
தமிழர்களுக்காக குரல் கொடுத்த இவர்களுக்காக இதுவரை எந்த தமிழ் தலைவரும் குரல் கொடுக்காதது வெட்ககேடானது மட்டுமல்ல வேதனையுமானது.
தமிழருக்கு சமவுரிமை கொடுக்க வேண்டும் எனக் கோருவது இலங்கை அரசுக்கு விருப்பம் இல்லாமல் இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் சம்பந்தர் சுமந்திரன் போன்றவர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.
இன்று கொழும்பில் இம் மூவர் பற்றிய ஆவணப்படம் “துயரத்திற்கு அப்பால்- இலங்கையின் ஜனநாயகம் தொடபான அனுபவங்கள் மூன்று” திரையிடப்பட்டுள்ளது.
இவ் ஆவணப்படம் இலங்கை முழுவதும் அல்ல புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளிலும் காண்பிக்கப்பட வேண்டும்.
ஆவணப்படம் தயாரித்து வெளியிட்டவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
No comments:
Post a Comment