Tuesday, May 30, 2017

•இந்திய அரசு தடைசெய்த ஈழத் தமிழனின் “கூட்டாளி” படத்திற்கு ஆதரவு வழங்குவோம்!

•இந்திய அரசு தடைசெய்த ஈழத் தமிழனின்
“கூட்டாளி” படத்திற்கு ஆதரவு வழங்குவோம்!
ஈழத் தமிழரான நிரோஜன் அவர்கள் “கூட்டாளி” என்னும் படத்தை இயக்கியுள்ளார். அவரது படத்தை இந்தியாவில் வெளியிடுவதற்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்திய அரசு தடை விதித்துள்ள இப் படம் புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆதரவுடன் வெளிநாடுகளில் திரையிடப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் டென்மார்க்கில் திரையிடப்பட்ட இப் படம் 04.06. 17 யன்று லண்டனில் திரையிடப்படவுள்ளது.
இப் படத்தை தடை செய்ததன் மூலம் ஒரு திரைப்படக் கலைஞனின் கருத்து சுதந்திரத்தை இந்திய அரசு மறுத்துள்ளது.
சாதாரணமாகவே ஈழத்து கலைஞர்கள் தமிழ்நாட்டு சினிமாவில் வளர்வதற்கு அனுமதிப்பதில்லை. இப்போது அரசு இத் தடை மூலம் மேலும் தடுக்கப்படுகிறது.
இந்திய சினிமாவைப் பொறுத்தவரையில் அவர்களின் குப்பை படங்களை சந்தைப் படுத்துவதற்கு புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தேவை. ஆனால் ஒரு ஈழத்து கலைஞன் அங்கு சென்று வளர்வதை அனுமதிப்பதில்லை.
எனவே இந்திய அரசு தடை செய்த படத்தை பார்வையிட்டு ஆதரிக்க வேண்டியது ஒவ்வொரு ஈழத் தமிழனின் கடமையாகும்.
பாகுபலிக்கு பணத்தை அள்ளி கொடுப்பவர்கள் அதில் ஒரு சிறு பகுதியையாவது எமது கலைஞர்களின் படத்திற்கு கொடுத்து அதரிக்க வேண்டியது கடமையாகும்.
அதுமட்டுமன்றி பாகுபலி ஒரு வாரத்தில் சம்பாதித்த 1000 கோடி ரூபாயில் ஒரு ரூபாகூட எமக்கு வரப்போவதில்லை.
ஆனால் இந்த கூட்டாளி படத்தின் மூலம் பெறப்படும் பணம் முழுவதும் தமிழகத்தில் அகதிமுகாம்களில் உள்ள குழந்தைகளின் கல்விக்கு செலவு செய்யப்படும் என அறிவித்துள்ளார்கள்.
எனவே நீங்கள் இந்தப் படத்தை பார்வையிட்டு ஆதரிப்பதன் மூலம்
•இந்திய அரசின் தடைக்கு எதிராக குரல் கொடுக்கிறீர்கள்
•ஒரு கலைஞனின் கருத்து சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கிறீர்கள்.
•ஒரு ஈழத்து கலைஞனின் வளர்ச்சிக்கு உதவுகிறீர்கள்.
•எல்லாவற்றுக்கும் மேலாக அகதி மகாமில் உள்ள குழந்தைகளின் கல்விக்கு உதவுகிறீர்கள்.
என்ன நண்பர்களே! தயாராகி விட்டீர்களா?
மறக்காதீர்கள், லண்டனில் 04.06.17 மாலை 4 மணி
இடம்- Crystal Clubs Ltd Hall,
1 Poppin Building, Southway,
Wembley, Middlesex HA9 0HB.
London.
நுழைவுச்சீட்டு ஒன்று-£5.00 மட்டும்
உணவு வகைகள் பரிமாறப்படும் மேலதிக கட்டணம் இல்லை.
மேலதிக விபரங்களுக்கு:
ராம் - 07501 963481
யோகி - 07929 349302

No comments:

Post a Comment