Saturday, February 27, 2021
இருவரும் பெண்கள். அதுமட்டுமல்ல இருவரும் மாணவிகள்.
இருவரும் பெண்கள். அதுமட்டுமல்ல இருவரும் மாணவிகள்.
ஒருவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சோபியா கோல். மற்றவர் இந்திய நாட்டைச் சேர்ந்த திஷா ரவி.
ஜெர்மனி போரில் இருந்து ஒதுங்க வேண்டும் என்று வெள்ளை ரோஜா என்ற டூல்கிட் மூலம் மாணவி சோபியா கோரினார்.
78 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் (22.02.1943) சோபியா கைது செய்யப்பட்டார். தேசத்துரோக குற்றச்சாட்டில் அவர் தலை வெட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
இறப்பதற்கு முன்னர் சோபியா இறுதியாக பேசிய வரிகள் “எங்கள் நடவடிக்கை மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் ஈடுபடும்போது எமது மரணம் ஒரு பொருட்டல்ல” என்றார்.
இன்று மாணவி திஷா டூல்கிட் மூலம் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக மோடி அரசினால் தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது குற்றம் என்றால் அதற்காக நான் சந்தோசமாக சிறையில் இருப்பேன் என மாணவி திஷா ரவி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நல்லவேளையாக தில்லி நீதிமன்றம் “ விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது தேசத்துரோகம் இல்லை” எனக்கூறி திஷா ரவியை ஜாமீனில் விடுதலை செய்துள்ளது.
மோடி அரசு பொய் வழக்கு போட்டது மட்டுமன்றி ஒரு பெண் கைது செய்யப்படும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளைக்கூட மாணவி திஷா ரவியைக் கைது செய்யும்போது கடைப்பிடிக்கவில்லை.
சர்வாதிகாரி ஹிட்லர் தோற்கடிக்கப்ட்டதுபோன்று சர்வாதிகார மோடியும் நிச்சயம் இந்திய மக்களால் தோற்கடிக்கப்படுவார்.
ஆனானப்பட்ட இந்திரா காந்தியையே தோற்கடித்து திகார் சிறையில் களி தின்ன வைத்தவர்கள் இந்திய மக்கள். இந்த வரலாறு மோடிக்கும் பொருந்தும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment