Saturday, February 27, 2021
இந்தியாவில் தூக்கிலிடப்படும் முதல் பெண்!
•இந்தியாவில் தூக்கிலிடப்படும் முதல் பெண்!
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் இதுவரை எந்தப் பெண்ணும் தூக்கில் இடப்பட்டதில்லை.
இந்தக் காரணத்தை காட்டியே ராஜீவ் கொலை வழக்கில் நளினிக்கு மன்னிப்பு கிடைக்க அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி வழிவகுத்தார் என்று கூறப்படுவதுண்டு.
ஆனால் இப்போது உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷப்னம் அலி என்ற பெண் தூக்கில் இடப்படப்போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன
இரண்டு எம்.ஏ படிப்பை படித்த ஷப்னம் அலி 6ம் வகுப்பு படித்த சலீம் என்ற இளைஞரைக் காதலித்தார். ஆனால் அவரது காதலை குடும்பத்தவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனால் ஷம்னம் அலி 14.04.2008 யன்று தனது காதலனுடன்; சேர்ந்து தன் குடும்பத்தவர்களுக்கு பாலில் மயக்க மருந்து கொடுத்து அவர்களை வெட்டிக் கொன்றுள்ளார்.
இவ்வாறு அவர் தனது குடும்பத்தவர்கள் மொத்தம் ஏழுபேரைக் கொன்றுள்ளார். இதனால் அவருக்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.
உச்சநீதிமன்றமும் மரணதண்டனையை உறுதி செய்துள்ளது. ஜனாதிபதியும் அவரது கருணை மனுவை நிராகரித்துள்ளார்.
இதனால் அவர் எந்நேரமும் தூக்கில் இடப்பட்லாம் என்றும் அதற்குரிய ஆயத்தவேலைகளை செய்துவருவதாக சிறைக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஷப்னம் அலி இதுவரை 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்துள்ளார். அவருக்கு சிறையில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அவரின் பிள்ளைக்கு இப்போது 12வயதாகிவிட்டது. அவரும் தன் தாய்க்கு மன்னிப்பு அளிக்குமாறு கோரியதை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.
மரண தண்டனை ஒருபோதும் தீர்வாகாது. எனவே இந்திய அரசு ஷப்னம் அலியை தூக்கில் இடுவதை நிறுத்த வேண்டும். அவருக்கு மன்னிப்பு அளிக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment