Monday, January 31, 2022
தீர்வு 13 ஐக் கேட்டு இந்திய பிரதமருக்கு
தீர்வு 13 ஐக் கேட்டு இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதிய செல்வம் அடைக்கலநாதன் சிறப்புமுகாம்களை மூடி அதில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்யும்படி ஏன் எழுதவில்லை?
இத்தனைக்கும் செல்வம் அடைக்கலநாதனே புதுக்கோட்டை சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்தவர். அவரும் சிறப்புமுகாம் கொடுமைகளை அனுபவித்தவர்.
எனவே சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப் பட்டிருப்பவர்களை விடுதலை செய்யுமாறு கோரும் தார்மீக கடமை அவருக்கு இருக்கிறதல்லவா?
இதைவிட கடந்த 39 வருடங்களாக இந்தியாவில் இருக்கும் அகதிகள் மிகவும் கஸ்டப்படுகின்றனர்.
அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படவில்லை. வேலைவாய்ப்பு உயர் கல்வி மறுக்கப்படுகிறது.
திரும்பி வர விரும்பும் அகதிகளைக்கூட அனுப்பி வைக்கவில்லை.
சுதந்திரமாக நடமாடக்கூட அனுமதிக்கப்படுவதில்லை.
இதுகுறித்து ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று ஏன் செல்வம் அடைக்கலநாதனுக்கு தோன்றவில்லை?
ஒருவேளை இவை குறித்து கடிதம் எழுதினால் இந்திய தூதருக்கும் இந்திய அரசுக்கும் கோவம் வரும் என அச்சப்படுகிறாரா?
அல்லது, இந்தியாவில் இருக்கும் தனது சொத்துகளுக்கு இடையூறு வந்துவிடும் என தயங்குகிறாரா?;
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment