Monday, January 31, 2022
சம்பந்தர் ஐயாவின் இந்திய விசுவாசம்
•சம்பந்தர் ஐயாவின் இந்திய விசுவாசம்
தமிழர்களின் சொத்தான திருமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு கொடுப்பதற்கு சிங்கள ஜேவிபி கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறது.
ஆனால் தன் சொந்த தொகுதியில் இருக்கும் சொத்துக்களை கொடுப்பது பற்றி சம்பந்தர் ஐயா ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று சிலர் ஆச்சரியப்படுகிறார்கள்.
இதில் அச்சரியப்பட எதுவுமே இல்லை. சில வருடங்களுக்கு முன்னர் இதே சம்பந்தர் ஐயாவின் திருமலை மாவட்டத்தில் சம்பூரில் 500 ஏக்கர் நிலம் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டது.
தமது நிலம் இப்படி கொடுப்பதை எதிர்த்து தமிழ் மக்கள் சென்று சம்பந்தர் ஐயாவிடம் முறையிட்டனர். அதற்கு சம்பந்தர் ஐயா “ இந்தியா எமக்கு தீர்வு தரப் போகிறது. எனவே இந்தியாவுக்கு நிலம் கொடுப்பதை என்னால் எதிர்க்க முடியாது “ என்றார்.
இறுதியாக அந்த மக்கள் நீதிமன்றத்தை நாடி தமது நிலங்களை மீட்டனர். அந்த தமிழ் மக்கள் தம் நிலத்தை பெறுவதற்கு சிங்கள ஜேவிபி கட்சியே உதவி செய்தது.
உலக நாடுகள் நிராகரித்த நிலக்கரி மின்சார நிலையம் சம்பூரில் இந்தியா நிறுவ உள்ளது. அதற்கும் சுற்றுச்சூழல் மாசுபடும் என்பதால் தமிழ் மக்கள் எதிர்க்கின்றனர். ஆனால் சம்பந்தர் ஐயா இன்றுவரை அதனை எதிர்க்கவில்லை.
பலாலி விமானநிலையம், காங்கேசன்துறை துறைமுகம் , மன்னார் பெற்றோல்வளம், புல்மோட்டை கனிவளம் என எல்லா தமிழர் வளமும் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு இத்தனை தமிழர் வளங்களையும் விட்டுக்கொடுத்த சம்பந்தர் ஐயா தமிழ் மக்களுக்கு இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொடுத்த தீர்வு என்ன?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment