Tuesday, September 10, 2013

ஈராக் ,சிரியாவுக்கு ஒரு நீதி! இலங்கைக்கு இன்னொரு நீதி! இதுதான் மேற்குலகின் மனிதாபிமான நீதியா?

சிரியாவில் ரசாயண குண்டு பாவித்தமைக்காக சிரிய அரசை தண்டிக்கும்பொருட்டு போர் தொடுப்போம்- அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா

• ரசாயண குண்டுகள் பாவிக்கப்படக்கூடாது என 100 வருடங்களுக்கு முன்னரே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதனை மீறியமைக்காக சிரியா மீது போர் தொடுக்க எல்லா நியாயங்களும் பிரிட்டனுக்கு உண்டு.- பிரிட்டன் பிரதமர் டேவிட் கமருன்

ஒபாமா மற்றும் கமருன் அவர்களே!

அன்று சதாம் உசேன் ரசாயண குண்டு வைத்திருப்பதாக கூறி ஈராக் மீது போர் தொடுத்தீர்கள். ஆனால் அங்கு ஒரு ரசாயண குண்டையும் இன்னும் கண்டு பிடிக்கவில்லை.

இன்று சிரியா ரசாயண குண்டு போட்டதாக கூறுகிறீர்கள். ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இன்னும் வைக்கவில்லை.

இலங்கையில் பல தமிழர்கள் ரசாயண குண்டால் கொல்லப்பட்டபோது ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை? இலங்கை மீது ஏன் போர் தொடுக்கவில்லை? மாறாக இலங்கையில் நடக்க இருக்கும் மாநாட்டுக்கு எந்த முகத்தோடு செல்ல விருக்கிறீர்கள்? இலங்கை தமிழர்கள் மனிதர்கள் இல்லை என்பதாலா? அல்லது இலங்கையில் பெற்றோல் கிணறு இல்லை என்பதாலா?

ஈராக் ,சிரியாவுக்கு ஒரு நீதி! இலங்கைக்கு இன்னொரு நீதி!
இதுதான் மேற்குலகின் மனிதாபிமான நீதியா?

இதோ கீழே உள்ள படத்தில் ரசாயண குண்டால் கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்கள் ஆதாரமாக உள்ளது. ஆனால் இவை ஏன் அமெரிக்க பிரிட்டன் தலைவர்களின் கண்களுக்கு தெரிவதில்லை?

மக்களோடு சேர்ந்து உழையுங்கள்! • மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள்! • மக்களோடு சேர்ந்து உறங்குங்கள்! -தோழர் மாவோ சேதுங்

• மக்களோடு சேர்ந்து உழையுங்கள்!
• மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள்!
• மக்களோடு சேர்ந்து உறங்குங்கள்!
-தோழர் மாவோ சேதுங்

1984ல் மலையாளப்பட்டியில் அமைந்திருந்த அரசியல் பயிற்சி முகாமில் எமது தோழர்களுக்கு தோழர் தமிழரசன் அவர்கள் மாக்சிய தத்துவங்களை போதித்தார். அப்போது ஒரு நாள் பெரம்பலூருக்கு அருகில் இருந்த மிகவும் வறிய மக்களின் அழைப்பின் பேரில் சில தோழர்களை அழைத்துக்கொண்டு சென்றார். அந்த மக்கள் ஒருவேளை உணவுக்கே மிகவும் கஸ்டப்படுபவர்கள். இருப்பினும் அவர்கள் ஈழப்போராளிகளுக்கு உணவு வழங்கவேண்டும் என்று ஆசைப்பட்டதனால் தோழர் தமிழரசன் எமது தோழர்களை அழைத்து சென்றார்.

உணவு உண்பதற்கு முன்னர் எல்லோரும் குளத்தில் குளிக்கலாம் என்று தமிழரசன் கூறினார். இதைக் கேட்டதும் எமது தோழர்கள் மிகவும் மகிழ்வு கொண்டு குளத்தை நோக்கி ஓடினார்கள். மிகவும் ஆர்வமுடன் குளிப்பதற்காக ஒடியவர்கள் குளிக்காமல் குளக்கரையில் நிற்பதைக் கண்ட தோழர் தமிழரசன் ஆச்சரியத்துடன் ஏன் என்று வினவினார்.

எமது தோழர்கள் என்னதான் பாட்டாளி வர்க்க சிந்தனை கொண்டிருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்தில் இருந்து வந்தவர்கள். எனவே அவர்களின் உணவு உடை பழக்க வழக்கங்களில் அந்த வர்க்க குணாம்சம் இருக்கவே செய்தது.

அந்த குளம் குட்டையாகவே இருந்தது. கால் பாதம் நனையும் அளவிற்கே தண்ணீர் இருந்தது. அதுவும் கலங்கி மஞ்சள் நிறத்தில் இருந்தது. அதில் ஒரு புறத்தில் எருமைகள் கிடந்து புரண்டு கொண்டிருந்தன. பன்றிகள் குட்டிகளுடன் நடமாடிக் கொண்டிருந்தன. இதைப் பார்த்த எமது தோழர்கள் அருவருத்து குளிப்பதற்கு தயங்கினர். இதைப் பரிந்து கொண்ட தோழர் தமிழரசன் “ மக்களோடு சேர்ந்து உழையுங்கள். மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள். மக்களோடு சேர்ந்து உறங்குங்கள் என்று மாவோ கூறினார் “ என்று சொல்லிக்கொண்டு தான் முதலில் தண்ணீரில் இறங்கி குளித்தார். மாவோ வின் வரிகளைக் கேட்தும் அதன் அர்த்தத்தைப் பரிந்து கொண்ட எமது தோழர்கள் “புரட்சி ஓங்குக” என்று உரத்து கோசம் இட்டவாறு ஒவ்வொருவராக குளத்தில் குதித்து விளையாடினர்.

பின்பு சாப்பிடுவதற்காக அந்த மக்களின் வீடுகளுக்கு சென்றபோது அங்கு இலையில் சோறும் சுண்டெலிக் கறியும் வைக்கப்பட்டிருந்தது. எலிக்கறி அதுவும் அதன் தலையுடன் பார்த்ததும் எமது தோழர்களுக்கு வாந்தி வராத குறை. யாருமே சாப்பிட வில்லை. இதைப் புரிந்து கொண்ட தோழர் தமிழரசன் “அந்த மக்கள் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கே சோறு சாப்பிடுவார்கள். அந்தளவுக்கு சோறே அம் மக்களுக்கு மிகவும் உயர்ந்த சாப்பாடு. அதை உங்களுக்கு தந்திருக்கிறார்கள். நீங்கள் சாப்பிடவில்லை என்றால் அவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள” என்றார். தோழர்கள் புரிந்து கொண்டனர். இம்முறை தோழர்களே மாவோ வின் வரிகளை உரத்து கூறிக்கொண்டு சாப்பிட்டார்கள்.

என்ன வேடிக்கை என்றால் முதலில் சாப்பிட தயங்கியவர்கள் சாப்பிட்டு சுவை பிடித்துக்கொள்ள மேலும் மேலும் கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள். அந்த மக்களும் மிக்க மகிழ்வோடு உணவு பரிமாறினார்கள். உணவு முடிந்த பின்பு அவர்களும் எமது தோழர்களும் மாறி மாறி சில பாடல்கள் பாடியும் மற்றும் நடிப்புகள் செய்து காட்டியும் அனைவரையும் மகிழ்வுறச் செய்தார்கள்.

இந்த சம்பவத்திற்கு பின்பு எமது தோழர்கள் எப்போதும் தோழர் தமிழரசனை இந்த மாவோவின் வரிகளை உரத்து உச்சரித்து கிண்டல் செய்வார்கள். அவரும் நன்றாக சிரித்து நகைச்சுவை செய்வார்.

நண்பர் வரதன்

1989களில் தமிழ்நாட்டில் இருந்த தமிழ்நாடு அமைப்பு கமிட்டி தோழர்கள் சிலர் தோழர் சண்முகதாசனை பார்க்க விரும்பினார்கள். அவரை இந்தியா அழைத்து வரும்படி என்னிடம் கேட்டனர். ஆனால் தோழர் சண்முகதாசன் பயணம் செய்யக்கூடிய நிலையில் அவர் உடல் நிலை இல்லாததால் அவரை ஒரு வீடியோ பேட்டி எடுத்து தரும்படி கேட்டனர். அவர்களது விருப்பத்தை நான் நிறைவேற்ற முனைந்த போது அப்போது எனக்கு கொழும்பில் மிகவும் உதவிகரமாக இருந்தவர் எனது நண்பர் வரதன் என்ற வரதராஜன். அவர் தனது நண்பர் சீவகனையும் இன்னொருவரையும் அழைத்து வந்து சுமார் இரண்டு மணிநேர மதிப்புடைய ஒரு சிறந்த வீடியோவை எடுத்துக் கொடுத்தார்.

உண்மையில் அப்போது கொழும்பு மிகவும் பாதுகாப்பற்ற நெருக்கடியான காலகட்டம். அந்த நிலையில் வரதனும் அவரது நண்பர் சீவகனும் செய்த உதவிகள் மறக்க முடியாதவை. அவர்களது உணர்வுகளை பாராட்டுகிறேன். பின்பு லண்டனில் சீவகன் அவர்களின் நட்பு எனக்கு கிடைத்தது. அவர் தோழர் சண்முகதாசன் குறித்த ஒரு ஆவணப்படத்தை செய்து தந்திருக்கிறார்.மறக்க முடியாத பங்களிப்பு அது.

தற்போது நண்பர் வரதன் நியூசிலாந்தில் இருக்கிறார். அவர் லண்டனில் இருந்து வெளியாகும் புதினம் இதழில் தனது அனுபவங்களை தொடராக எழுதிவருகிறார். அவருடைய சிறந்த அனுபவங்கள் எழுத்து வடிவத்தில் வருவதை வரவேற்கிறேன்.

தோழர் தமிழரசனுக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பி அவரது தாயாரின் ஆசையை யாராவது நிறைவேற்றுவார்களா?

• தோழர் தமிழரசனுக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பி அவரது தாயாரின் ஆசையை யாராவது நிறைவேற்றுவார்களா?

தோழர் தமிழரசனைப் பெற்றnடுத்த தாய். மிகவும் வறிய நிலையிலும் தன் மகனை பொறியல்துறையில் படிக்க வைத்தார். தான் பெற்று வளர்த்த மகன் தன்னைப் பார்க்கவில்லை என்றாலும் தமிழ்நாட்டு விடுதலைக்காக அவர் போராடியது குறித்து அவர் என்றுமே மகனிடம் கடிந்து கொண்டதில்லை. தன் மகனுக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் என்பது அவரது ஆசையாக உள்ளது. அதற்காக தனது நிலத்தில் ஒரு பகுதியையும் ஒதுக்கி வைத்திருக்கிறார் என்று அறிந்தேன். அவரது ஆசையை நிறைவேற்ற புலவர் கலியபெருமாள் முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் அவர் மரணமடைந்துவிட்டார். பின்பு தோழர் பொழிலன் முயற்சி செய்தார். அவரும் அதனை நிறைவேற்றுவதற்கள் சிறை செல்ல வேண்டியதாயிற்று. தோழர் முகிலன் தான் முயற்சி செய்யப்போவதாக 4றினார். அவராலும் இன்னும் முடியவில்லை. அய்யா நெடுமாறன் , சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் போன்றோர் தோழர் தமிழரசன் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர்கள். அவர்கள் முயற்சி செய்தால் இந்த தாயின் ஆசையை நிறைவேற்ற முடியும். செய்வார்களா?

• லண்டனில் விநாயக சதுர்த்தி

• லண்டனில் விநாயக சதுர்த்தி

லண்டனில் பிள்ளையாருக்கு அரோகரா!

பிள்ளையாரை விற்பனை செய்யும் கடைக்காரருக்கு அரோகரா!

பிள்ளையாரை வாங்கி வீட்டு பாத்ரூமில் கரைக்கும் அப்பாவி தமிழருக்கு அரோகரா!

லண்டனில் குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படும் ஈஸட்காம் நகரில் என்றுமில்லாதவாறு இம் முறை விநாயக சதுர்த்தி களைகட்டியுள்ளது. பக்தர்களால் நிரம்பி வழிகிறது. இம்முறை கடவுள் பிள்ளையார் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறார். கடைவியாபாரிகள் பிள்ளiயாரை விற்று நல்லாய் காசு சம்பாதிக்கிறார்கள்.

இந்தப் பிள்ளையாரை எங்கு கரைப்பார்கள் என்று கடைக்காரரிடம் கேட்டேன். “வீட்டில்தான் கரைப்பார்கள்” என்று சர்வசாரதாரணமாக சொல்லிவிட்டு அவர் வியாபாரத்தை மும்முரமாக கவனித்தார். லண்டனில் தேம்ஸ் நதி ஓடுகிறது. அதில் இந்தியாபோல் சும்மா எல்லாம் போய் கரைக்க முடியாது. கவுன்சில் அனுமதி எல்லாம் வாங்க வேண்டும். அது இலகுவில் கிடைக்காது. எனவே வீட்டில்தான் பிள்ளiயாரை கரைக்க வேண்டும். வேறு வழியில்லை. பெரும்பாலான வீட்டில் கக்கூசும் குளியல் தொட்டியும் ஒரு அறையில்தான் இருக்கிறது. அப்படி என்றால் கக்கூஸ் அறையில் கடவுளைக் கரைக்கிறார்களா? பிள்ளiயார் இதை பொறுத்துக் கொள்வாரா? அது சரி, கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றால் கக்கூஸ் தொட்டியில் இருக்கமாட்டாரா என்ன?

இந்த அப்பாவி பக்தர்கள் எங்கு வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கரைத்தவிட்டு போகட்டும். அது அவர்களது முட்டாள்தனம். ஆனால் அவர்கள் கூறவது போல் இந்த பிள்ளiயார் யார்? அவரை கரைத்தால் பலன் கிடைக்குமா? என்பது பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

தமிழரின் (இந்து) சைவ மதத்தில் விநாயகரே கிடையாது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தளகர்த்தன் என்ற பார்ப்பனன் தான் முதன் முதலில் பிள்ளையார் வழிபாட்டை, வாதாபியிலிருந்து இறக்குமதி செய்து தமிழர்கள் தமிழ் நாட்டில் புகுத்தினான். இந்தப் பிள்ளையார் பிறப்புக்கு பல கதைகள் உண்டு.

விநாயகன், விக்னேசுவரன், கணபதி, கணேசன் என்றெல்லாம் சொல்லப்படும் பிள்ளையாரின் பிறந்தநாள் பிள்ளையார் சதுர்த்தி ஆகும். எப்படி இந்த பிறந்த நாளைக் கண்டறிந்தார்கள் என்பதே விளங்கவில்லை (யாரும் கேள்வி கேட்கவும் கூடாது).
முதலில் பிள்ளையார் எப்படி பிறந்தார் என்பதை அவர்கள் சொல்வதை வைத்தே காண்போம் !

சிவ மகாபுராணத்தில் கூறப்பட்ட கதைச் சுருக்கம் இது:

பார்வதியுடன் (சிவனின் மனைவி) பேசிக் கொண்டிருந்த அவள் தோழி விஜயை என்பவள் உங்கள் கணவருக்கு மட்டும் ஏராளமான வேலைக்காரர்கள் (கணங்கள்) இருக்கும்போது - உங்களுக்கு யாருமே இல்லையே என்று கேட்டாளாம் ! அவள் தன் உடலிலிருந்து அழுக்கைத் திரட்டி எடுத்து மூன்று கண்களும் உடைய உருவத்தை உண்டாக்கிக் காவலுக்கு வைத்துவிட்டுக் குளிக்கப் போனாராம்.

பார்வதி குளிப்பதை பார்த்து காமமுற்ற வந்த சிவன் உள்ளே போக முயல, அழுக்கு உண்ண்டைக் கணபதி தடுத்ததாம். நான்தான் சிவன் எனக் கூறிக் கொண்டே உள்ளே போக முயல, கோவம் கொண்ட அழுக்கு உருண்டை தன் தண்டாயுதத்தால் சிவனை அடித்துவிட்டது. பதிலுக்கு சிவன் அடியாட்களை அனுப்ப அவர்களையும் அடித்து விரட்டிவிட்டது. சிவனுக்கு ஈகோ கிளம்பி, சூலாயுதத்தால் அழுக்குருண்டையின் (பிள்ளையாரின்) தலையை வெட்டிவிட்டார். இதை கண்டு பார்வதி அழுதுபுரளவே, வடக்கே தலை வைத்து படுத்திருந்த ஒரு கொம்பு உள்ள யானைக் குட்டியின் தலையைவெட்டி வந்து வந்து பிள்ளையாரின் உடலோடு ஒட்டியவுடன் அந்த உடலுக்கு உயிர் வந்து விட்டது. அவர்தான் இந்தப் பிள்ளையார் என்கிறது சிவபுராணம்.

ஒருகட்டத்தில் தன் தாயின் (பார்வதி) அழகில் மயங்கி அவரையே மனைவியாகக் கேட்டாராம் பிள்ளையார். இதனால் இவருக்கு பெண்கிடைக்க வில்லையாம். இவரின் இந்த விநாயகன் பிரம்மச்சாரி என்று ஒரு கதை. சித்தி, புத்தி என்று இரு மனைவிகள் உண்டு என்று இன்னொரு கதை. எதை நம்புவது? பிறப்பு -இறப்பு இல்லாதவன் கடவுள் என்று சொல்லுவார்கள். ஆனால் பிள்ளையாருக்கு ?

உண்மையிலே இப்படி ஒரு கடவுள் இருந்தது என்றால், ஏன் இப்படி முரண்பாடான கதைகளைச் சொல்கின்றன புராணங்கள்? உண்மையில் ஏழை எளிய மக்களை பக்தி என்னும் பெயரில் புராண புரட்டுகளை இட்டு கட்டி காசுபார்க்க பார்ப்பனர்கள் திரித்த கட்டுக் கதையே பிள்ளையார்.

இந்தப் பிள்ளையாரின் பெயரால் களிமண் சிலை செய்து தெருவுக்கு தெரு பிரமாண்ட சிலைவைத்து , அபிஷேகம் என்னும் பெயரில் பால், நெய் போன்றவற்றை குடம் குடமாக ஊற்றி படையலிட்டு மூன்றாம் நாள் தூக்கிப் போய் கடலிலே உடைத்து வீசுவதற்கு ஒரு விழா..

ஆபாசம், திருட்டு, கொலை, ஏமாற்று போன்றவை நிரம்பி வழியும் புராணக் கதைகளை நம்பி புத்தியை இழப்பது அறியாமை செயல்தானே! இது போன்ற புரட்டுகளின் பின்னால் கோஷம் போட்டு குதிப்பது அறிவுடையவர்கள் ஏற்கக் கூடிய செயல் தானா !

மனிதனின் அறிவு , ஆற்றல், நேரம் அனைத்தும் நம்முடைய சமுதாய வளர்ச்சிக்காகவே செலவிடப்பட வேண்டும். மக்களின் மனக்கஷ்டத்தையும், அறியாமையையும் பயன்படுத்திக் கொண்டு மத வெறியை கிளப்பி பணம், பொருள், நேரம், சுற்றுச் சூழல் ஆகியவற்றை விரையமாக்கி கொண்டாடப்படும் போலி விழாக்களை புறக்கணிப்போம்!

தம்பிராசா அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

• மனநலம் என்னும் வலைப் பூவை ஆரம்பித்து தனது அனுபவங்களை பகிரும் மருத்துவர் தம்பிராசா அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

இவர் இலங்கை கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் காலம் சென்ற தோழர் சண்முகதாசன் அவர்களின் மருமகன். இவரும் கம்யுனிஸ்ட் கட்சியில் செயற்பட்டுள்ளார். இவர் தற்போது இங்கிலாந்தில் பேர்மிங்காம் என்னும் இடத்தில் வசிக்கிறார்.

இவர் மனநோய்கள் குறித்து ஆங்கிலத்தில் நான்கு புத்தகங்கள் எழுதியுள்ளார். அவை பல்கலைக்கழகங்களில் பாட நூல்களாக பயன்படுத்தப்படுகின்றன. தற்போது தமிழிலும் ஒரு புத்தகம் எழுதி வருகிறார். இவருடைய அனுபவங்கள் நிச்சயம் தமிழ்வாசகர் பரப்பில் பயனுள்ளதாக அமையும் என நம்பகிறோம்.

முன்னர் டாக்டர் கோவூர் அவர்கள் “கோர இரவுகள்” “மனக் கோலம்” என இரு புத்தகங்கள் வெளியிட்டிருந்தார். அவை அப்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. தற்போது தோழர் தம்பிராசா அவர்களின் பதிவுகள் அத்தகைய ஒரு தாக்கத்தை தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தும் என நம்புகிறோம்.

அவருடைய வலைப் பூ பக்கத்தை பார்வையிட விரும்புவோர் கீழ்வரும் லிங்கை கிளிக் செய்யவும்.

http://manaulakam.blogspot.co.uk/?spref=fb

மாபெரும் ஆசான் தோழர் மாஓசேதுங் நினைவு தினம்.

 மாபெரும் ஆசான் தோழர் மாஓசேதுங் நினைவு தினம்.

செப்-9 இன்று தோழர் மாவோ சேதுங் நினைவு தினமாகும்.
மாக்சிய லெனிய மாசேதுங் சிந்தனைகளின் வழிகாட்டலில்
புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்.

” ஒரு புரட்சி என்பது மாலை நேர விருந்தோ, ஒரு கட்டுரை எழுதுவதோ, ஓவியம் தீட்டுவதோ, பூத்தையல் வேலைப்பாடோ அல்ல……….. ஒரு புரட்சி நிதானமுள்ளதாகவும் பொறுமை, கருணை, பெருந்தன்மையுள்ளதாக இருக்க முடியாது. புரட்சி என்பது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தினை பலாத்காரமாக தூக்கி எறிவதாகும் "

- மாவோ