Tuesday, April 29, 2014

கதை ஒளி – ஓர் அறிமுகம்

கதை ஒளி – ஓர் அறிமுகம்

“கதை சொல்லடா தமிழா” என்னும் குறூப் முகநூலில் கண்ணதாஸ் காசிநாதர் மற்றும் அவரது நண்பர்களால் இயக்கப்படுகிறது. அதில் நானும் ஒரு அங்கத்தவராக இருப்பது மகிழ்வு தருகிறது. அதில் கதைகளை எழுதி வந்த அவர்கள் தற்போது “கதை ஒளி” மூலம் கதை சொல்ல ஆரம்பித்துள்ளனர். இதுவரை சுமார் 100 க்கு மேற்பட்ட கதைகளை சொல்லியுள்ளனர்.

கதை சொல்வதும் ஒரு கலை. அது மக்களுக்கான கலையாக இருக்க வேண்டும். முன்னாள் போராளியும், புரட்சிகர சிந்தனையும் கொண்ட கண்ணதாஸ் காசிநாதர் இந்த “கதை ஒளி” யில் மக்களுக்கு பயன் உள்ள படைப்புகளை கொடுப்பார் என நம்புவோம்.

“மலைகளை அகற்றிய மூடக் கிழவன்” கதையைக் கூறியே படிப்பறிவற்ற கோடிக் கணக்கான பரந்துபட்ட சீன மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் தோழர் மாசேதுங் பெற்றார். இன்றும்கூட அந்த மக்கள் மத்தியில் இருந்து மாசேதுங் புகழை யாராலும் அழிக்க முடியவில்லை. அதேபோல் தமிழகத்தில் ஜெயா அம்மையார் மற்றும் கலைஞர் கருணாநிதி போன்றோர் சிறிய கதைகளை சொல்லியே தங்கள் தொண்டர்களை வழி நடத்தி வருவதை நாம் காணலாம்.

“ஒரு பூங்காவில் தனித்து இருந்த அந்த தொழிலாளி பெரு மூச்சு விட்டான். அவனை ஸ்டாலினின் உளவுப்படை கைது செய்தது. அவர் அரசியல் பேசினான் என குற்றம் சுமத்தப்பட்டது.” இது ரஸ்சியாவில் ஸ்டாலின் இரும்புத்திரை ஆட்சி என்பதற்கு அந்தக் காலத்தில் முதலாளித்துவ கட்சிகளால் பரப்பப்பட்ட பிரபல்யமான ஒரு கதை.

இந்த கதையே பின்னர் புலிகள் காலத்திலும் மாற்றிக் கூறப்பட்டது. அதாவது கிளிநொச்சியில் ஒரு இளைஞன் கைது செய்யப்பட்டான். அவனை பொட்டரின் புலனாய்வு துறை கைது செய்தது. அவன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு சாப்பிடும் நேரம் தவிர வாய் திறந்து விட்டான் என்பது. இது புலிகளின் பிரதேசத்தில் பலிகளுக்கு எதிராக பே முடியாது என்பதற்கு கிண்டலாக கூறப்பட்ட ஒரு பகிடி.

இப்படி சிறிய கதைகள் மிகப் பெரிய அரசியலை கூறுவதற்கு பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால் இங்கு கதை ஒளியில் கூறப்படும் கதைகள் அந்தளவுக்கு அரசியலை கொண்டிருக்காவிடினும் கதை சொல்லலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது என்றளவில் நிச்சயம் பாராட்டலாம்.

“கதை சொல்வது படிப்பறிவற்ற பாமர மக்களுக்கும் குழந்தைகளுக்கும் மட்டுமே. எனவே முகநூலிலும், யுரியுப்பிலும் கதை சொல்வதால் என்ன பயன்? இது பாமர மக்களுக்கு சென்றடையுமா?” என்ற கேள்விகளும் விமர்சனங்களும் எழலாம். ஆனால் இது நாளடைவில் நல்ல கதைகள் உருவாகுவதற்கும், அது பரந்து பட்ட மக்களுக்கு சென்றவடைதற்கும் நிச்சயம் வழி கோலும் என நம்பலாம்.

கதை ஒளி ஸ்தாபகர் கண்ணதாஸ் காசிநாதருக்கும் அவரது நண்பர்களுக்கும் எமது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு.

அன்பான தமிழ் மக்களே!

சித்திரையல்ல தமிழர் புத்தாண்டு.
தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு.
இதையே இனி வழக்கமாக்கி கொள்வோம்.

அமெரிக்காவில் கறுப்பர்களை மட்டுமல்ல அவர்களது கருப்பு நாய்களையும் சுடுவதற்கு சட்டத்தில் இடம் உண்டு?

• அமெரிக்காவில் கறுப்பர்களை மட்டுமல்ல
அவர்களது கருப்பு நாய்களையும்
சுடுவதற்கு சட்டத்தில் இடம் உண்டு?

அமெரிக்க நீதி மட்டுமல்ல
உலக நீதியும் இதுதானோ?

நம்புங்கள்!
அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு
அமெரிக்கா ஒரு சுதந்திர நாடு
அமெரிக்கா ஒரு மனிதாபிமான நாடு
அங்கு ஒரு நாயைச் சுடுவதாக இருந்தாலும்
நன்கு விசாரித்தே சட்டப்படியே சுடுவார்கள்!

https://www.facebook.com/photo.php?v=808757975820572&set=vb.109191125777264&type=2&theater
Wrażliwe osoby niech nie oglądają tego filmu. Policjant w USA zastrzelił psa. W tej sytuacji wszystko jest bez sensu - właściciel psa drażniący policję ostentacyjnym filmowaniem ich pracy, aresztowanie (wszystko na to wskazuje, że bezprawne...See more

காங்கிரசைவிட எந்தக் கட்சி இலங்கை தமிழர்களுக்கு அதிக நன்மை செய்துள்ளது? – சோனியா காந்தி கேள்வி.

காங்கிரசைவிட எந்தக் கட்சி இலங்கை தமிழர்களுக்கு அதிக நன்மை செய்துள்ளது? – சோனியா காந்தி கேள்வி.

அமைதிப்படையை அனுப்பி

ஆயிரக் கணக்கான தமிழர்களை கொன்றது

பல தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தது

கோடிக் கணக்கான சொத்துகளை சேதப் படுத்தியது

இலங்கை இனவெறி அரசுக்கு தொடர்ந்து உதவி வருவது

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு துணை நின்றது

இவ்வாறு தமிழ் இன அழிப்பை மேற்கொள்வது “நன்மை” என்றால்

அதிக நன்மை செய்தது காங்கிரசு என்பதில் சந்தேகம் இல்லை.

அதனால் தமிழக மக்களே!

காங்கிரசுக்கு நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும்
இலங்கை தமிழர்களை அழிப்பதற்கு வழங்கும் அங்கீகாரம் என்பது மட்டுமல்ல
தமிழக மீனவரைக் கொல்வதற்கு வழங்கும் ஆதரவு என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

இந்த தேர்தலில் யார் வெல்ல வேண்டும் என்பதை விட
காங்கிரசு தோற்க வேண்டும் என்பதை மறந்து விடாதிர்கள்.
நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் தீர்ப்பை எதிர்பார்த்து இலங்கை தமிழ் மக்கள் காத்து இருக்கிறார்கள்.

விஜய் ஸ்டார் நைட் நிகழ்ச்சி இலங்கையில் நடத்தக் கூடாது. ஆனால் இலண்டனில் நடத்தலாம். இது என்ன நியாயம்?

• விஜய் ஸ்டார் நைட் நிகழ்ச்சி
இலங்கையில் நடத்தக் கூடாது. ஆனால்
இலண்டனில் நடத்தலாம்.
இது என்ன நியாயம்?

புரட்சிப் புயல் வைகோ அவர்களே!

புலத்தில் கச்சேரிகள் நடக்கலாம்.
குத்தாட்டம் நடக்கலாம். ஆனால்
தாயகத்தில் நடந்தால் துரோகம் என்கிறீர்கள்.
புலத்து தமிழனுக்கு ஒரு நியாயம்
தாயக தமிழனுக்கு இன்னொரு நியாயமா?


அன்று இலங்கையில் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டபோது அதனைக் காட்டாத தமிழக தொலைக்காட்சிகள்,

அன்று இலங்கையில் தமிழ் இனம் அமிக்கப்பட்டபோது அதற்கு எதிராக வாய் திறக்காத தென்னிந்திய கலைஞர்கள்,

இன்று கலை நிகழ்ச்சி என்ற பெயரில் வந்து புலத்தில் தமிழனிடம் பணம் பறிக்க முயலுகின்றனர்.

புலத்து தமிழர்களே!

என்ன நிகழ்ச்சி பார்க்க வேண்டும்?
எங்கு சென்று பார்க்க வேண்டும்?
எவ்வளவு பணம் செலவு செய்ய வேண்டும்?
என்பதெல்லாம் உங்கள் தனிப்பட்ட விடயங்களாக இருக்கலாம.
அதில் தலையிட எமக்கு உரிமை இல்லாமல் இருக்கலாம.

ஆனால் உங்களுக்கு சொல்ல ஒரு விடயம் எம்மிடம் இருக்கிறது.

இந்த நிகழ்ச்சி டிக்கட் ஆகக் குறைந்த விலை இலங்கை ருபாயில் சுமார் 5000.

இந்த 5000 ரூபா இருந்திருந்தால்,

வன்னியில் இரண்டு சிறுவர் பரீட்சைக் கட்டணம் கட்டுவதற்காக திருடியிருக்க மாட்டார்கள்!

வன்னியில் ஒரு தாய் பசிக் கொடுமையால் தன் 3 குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்றிருக்கமாட்டார்!

இப்படி பல உதாரணங்களை உங்களுக்கு காட்ட முடியும்.
இனி முடிவு உங்கள் கையில்

இப்படியான குப்பை நிகழ்ச்சிகளை பகிஸ்கரித்து அந்த பணத்தை தாயகத்தில் உள்ள உறவுகளுக்கு கொடுத்து உதவப் போகிறீர்களா? அல்லது

தாயகத்தில் உள்ள உறவுகள் எக் கேடு கெட்டாலும் பரவாயில்லை, இந்த தென் இந்திய குப்பைகளுக்கே அள்ளிக் கொடுக்கப்போகிறீர்களா?

சிந்திப்பீர்!
நல்ல முடிவு எடுப்பீர்!
தாயக உறவுகளுக்கு நம்பிக்கை கொடுப்பீர்!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே!

• நீங்கள் உங்கள் மாளிகையில் வளர்த்த கிளிகள் பறந்து விட்டதே என்று கவலை கொண்டீர்களாம். ஆனால் மக்களோ சமாதனாப் புறா வராமல் போய் விட்டதே என்று கவலை கொள்வதை தாங்கள் அறிவீர்களா?

• பறந்து சென்ற உங்கள் கிளிகளை அதிகாரிகள் தேடிக் கண்டு பிடித்துவிட்டார்களாம் என அறிந்து நிம்மதி பெரு மூச்சு விட்டோம். ஏனென்றால் உங்கள் கிளிகளும் காணாமற் போனதற்கு லண்டனில் உள்ள புலிகள் காரணம் என்று கூறிவிடுவீர்களோ என பயந்துவிட்டோம். ஆனால் மக்கள் விரும்பும் சமாதானப் புறவை யாராவது தேடிக் கொடுப்பார்களா என மக்கள ஆவலுடன் காத்து இருப்பதை தாங்கள் அறிவீர்களா?

• நீங்கள் முதன் முதலில் பதவியேற்ற போது லண்டனில் உங்களை சந்த்தித்த தமிழர்கள் சிலரிடம் “தமிழீழம் தவிர அனைத்தையும் கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் புலிகள் எனக்கு அவசாசம் தருகிறார்கள் இல்லையே” எனக் கூறினீர்கள். ஆனால் இப்போது புலிகள் அற்ற ஜந்து ஆண்டுகள் உங்கள் முன் இருந்தும் எந்த ஒரு தீர்வையும் நீங்கள் முன்வைக்கவில்லையே? அது ஏன் என்று கூறுவீர்களா?

• தமிழ்மக்கள் புலி ஆதரவாளர்களை தவிர்த்து, தமிழீழத்தைக் கைவிட்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பை தேர்தல் மூலம் தெரிவு செய்து உங்களிடம் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் நீங்களோ மீண்டும் புலிகள் என கோசம் எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்?

• “ஆனையிறவில் இருக்கும் இராணுவ முகாம் ஒரு நாள் அம்பாந்தோட்டைக்கு மாறும். அன்று இதே ராணுவம் சிங்கள மக்களைக் கொல்லும்” என்று டெலோ இயக்க தலைவர் தங்கத்துரை அன்று கூறினார். அதேபோல் இன்று உங்கள் குண்டர் படை அம்பாந்தோட்டைக்கு வந்த ஜ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களையே அடித்து விரட்டியதையை நாம் கண்டு கொண்டோம்.

• நீர்கொழும்பில் குடிதண்ணீரில் நஞ்சு கலக்க காரணமான இந்திய கம்பெனிக்கு எதிராக சிங்கள மக்கள் போராடியபோது இந்தியாவுக்காக உங்கள் ராணுவம் சிங்கள மக்களைக் கொன்றதை கண்டோம்.

• நீங்கள் பயங்கரவாதத்தில் இருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றியதாக கூறுகிறீர்கள். ஆனால் உண்மை என்னவெனில் முன் எப்போதும் விட இப்போதுதான் இலங்கை ஏகாதிபத்தியத்திற்கு அதிக அளவில் விற்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவுக்கு விற்கப்பட்டுவிட்டது.

• 1983க்கு முன்னர் இலங்கையில் இந்திய முதலீடு என்பது வெறும் 12 வீதமே. ஆனால் இன்று இந்திய முதலீடு என்பது 90 வீதம். அதாவது உள்ள மொத்தம் 700 வெளிநாட்டு கம்பனிகளில் 652 இந்திய கம்பனிகள் இலங்கையை கொள்ளையடிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. யுத்தத்தினால் அதிக இலாபம் அடைந்திருப்பது இலங்கை மக்கள் அல்ல இந்தியா மட்டுமே என்பது இதில் இருந்து தெரியவில்லையா?

• பிரபாகரன்களும் புலிகளும் தானாக உருவாவதில்லை. இலங்கை அரசின் தவறுகளே அவைகள் உருவாகுவதற்கு காரணம் என்று உங்கள் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா குமாரதுங்கா கூறினார். அப்படியென்றால் இன்று மீண்டும் புலிகள் உருவாகிறார்கள் என்று நீங்கள் கூறுவது உண்மையானால் அதற்கும் உங்கள் அரசுதானே காரணமாகும். அப்படியிருக்க எதற்காக அப்பாவி மக்கள் மீது அடக்குமுறைகளை ஏவி விடுகிறீர்கள்?

• அடக்கு முறைக்கு எதிராக தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடியதன் நியாயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அடக்குமறை மூலம் ஒரு இனத்தின் சுதந்திர உணர்வை அழித்துவிட முடியாது என்பதை உலக வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.

“தூசிகள் துடைக்காமல் அகலாது. இறுதிவரை போராடாமல் வெற்றி கிடைக்காது” என்று தோழர் சண் கூறியிருக்கிறார்.

இன்றைய இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் எதிரானதே.

இலங்கை அரசின் அடக்கு முறைக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றினைந்து போராடுவோம்.

இறுதி வெற்றி உறுதி எமக்கு

சிவசேனை தாமதமான ஆனால் தவிர்க்க முடியாத ஒரு விமர்சனம்!

சிவசேனை
தாமதமான ஆனால் தவிர்க்க முடியாத ஒரு விமர்சனம்!

இது
ஈழத் தமிழர்களால் தயாரிக்கப்பட்ட
ஈழத் தமிழர்களால் நடிக்கப்பட்ட
ஈழத் தமிழரால் இயக்கப்பட்ட
இலண்டனில் எடுக்கப்பட்ட
ஒரு இந்தியப் படம்.

தென் இந்தியப் படங்களுக்கு நிகராக எடுக்க வேண்டும் என்ற ஆவலில்
இன்னொரு தென்னிந்திய படமாகவே எடுக்கப்பட்டிருப்பது பெருத்த ஏமாற்றமே!

கதை என்று பார்த்தால்
அன்றைய எம்.ஜி. ஆர் படங்கள் போல
பின்பு வந்த ரஜனி படங்கள் போல
இன்றைய விஜய் படங்கள் போல
தாயைக் கொன்றவனை மகன் பழிவாங்கும் கதை.

ஆனால் இந்தக் கதையை லண்டனில் தமிழர் வீடுகளில் நடக்கும் திருட்டு சம்பவங்களுடன் இணைத்து சொல்லியிருப்பது கொஞ்சம் வித்தியாசம் மட்டுமல்ல சற்று “திரில்”லிங்காவும் உள்ளது. பாராட்டுகள்.

தமிழ்நாட்டு சந்தையை எதிர்பார்த்து கதாபாத்திரங்கள் தமிழக தமிழ் பேச வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் என்னதான் தமிழக தமிழ் பேசினாலும் சரி, அல்லது தமிழக படம் போல் எடுத்தாலும்கூட ஈழத் தமிழர் படங்களை “கோடம்பாக்கம்” வரவேற்றக்போவதில்லை என்பதே கசப்பான உண்மை.

“கோடம்பாக்கம்” சினிமா இந்தியன் என்ற ரீதியில் தெலுங்கனை வரவேற்கும். மலையாளிகளை வரவேற்கும். ஏன் கன்னடனைக் கூட வரவேற்கும். ஆனால் ஈழத் தமிழனை ஒருபோதும் வரவேற்காது. இதுதான் இத்தனை கால வரலாறு. இதனை உடைப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல.

தென்னிந்திய சினிமா மட்டுமல்ல தென்னிந்திய தொலைக்காட்சிகளும் அதே அணுகுமுறையையே கடைப்பிடிக்கின்றன. உலகத் தமிழர்களின் தொலைக்காட்சி என்று சன் டிவி சொல்லும். ஆனால்; அதன் உலகத் தமிழர் என்பது இந்திய தமிழர் மட்டுமே. கலைஞர் டிவி க்கு அருகில் ஈழத் தமிழன் படைப்பு மட்டுமல்ல ஈழத் தமிழனே கூட நெருங்க முடியாது. ஈழத் தமிழர்களின் குரல் என வேடம் போடும் விஜய் டிவி கூட இதுவரை ஒரு ஈழத் திரைப்படத்தை ஒளிபரப்பியதில்லை. ஏன் என்று கேட்டால் தரம் நன்றாக இல்லையாம்.

எனவே ஈழத் தமிழர்கள் தென்னிந்திய சந்தையை நம்பி அவர்களுக்காக படம் பண்ணி அவர்களின் ஆங்கீகாரத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்காமல் அவர்கள் எம்மை திரும்பிப் பார்க்கும் வண்ணம் தனித்துவமான படங்களை எடுப்பதே பொருத்தமாகும்.

அமெரிக்க கொலிவூட் படங்களுக்கு நிகராக ஈரானிய படங்கள் அமைவது போல்
உலக கவனத்தைத் திருப்பும் பாலஸ்தீன படங்களைப் போல்
ஈழத் திரைப்படங்களும் அமைய வேண்டும்.

ஈழத் தமிழர்கள் அதனைக் குறிக்கோளாகக் கொண்டு படங்களை தயாரிக்க வேண்டும்.

ஆம். ஈழத் தமிழர்களால் முடியும்.
அந்த நம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு.