Sunday, August 31, 2014

சுதந்திரதின வாழ்த்து தெரிவிப்போரின் சிந்தனைக்கு!

• சுதந்திரதின வாழ்த்து தெரிவிப்போரின் சிந்தனைக்கு!

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம். இங்கு கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எல்லாம் இருக்கிறது என்று நம்புவர்களின் சிந்தனைக்கு சில வினாக்கள்.

(1) தெலுங்கானாவும் காஸ்மீரும் இந்தியாவில் பலவந்தமாக இணைக்கப்பட்டது என்ற உண்மையைக் கூறிய பாராளுமன்ற உறுப்பினருக்கு ஜாமீனில் வெளிவராத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதான் பேச்சு சுதந்திரமா?

(2) அரசுக்கு எதிராக முகநூல் மற்றும் இணையங்களில் எழுதுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்கிறார்கள். இதுதான் எழுத்து சுதந்திரமா?

(3) தர்மபுரியில் சாதி தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டு நக்சலைட்டுகள் என முத்திரை குத்தி தேசியபாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைத்திருக்கிறார்களே, இததான் கருத்து சுதந்திரமா?

இந்தியாவில் யாருக்கு இருக்கிறது சுதந்திரம்?

• தாங்கள் வாழும் காட்டை அழிக்க வேண்டாம் எனக் கோரிய மலைவாழ் மக்களை எந்தவித விசாரணையும் இன்றி சுட்டுக்கொல்வதற்கு பொலிசாருக்கு சுதந்திரம் உண்டு.

• கருப்பு சட்டத்தை நீக்கு எனக் கோரும் மணிப்பூர் பெண்களை கற்பழிக்க இந்திய ராணுவத்திற்கு சுதந்திரம் உண்டு.

• காஸ்மீரில் அப்பாவி முஸ்லிம்களை கொல்வதற்கு இந்தியபடையினருக்கு சுதந்திரம் உண்டு.

• தமிழக மீனவர்களைக் கொல்வதற்கு இலங்கை கடற்படையினருக்கு சுதந்திரம் உண்டு. அந்த கடற்படையினருக்கு பயிற்சி வழங்க இந்திய ஆட்சியாளர்களுக்கு சுதந்திரம் உண்டு.

• தமிழர்களுக்கு எதிராக குரல் கொடுக்க சுப்பிரமணியசுவாமிக்கு சுதந்திரம் உண்டு. அவருக்கு பொலிஸ் காவலும் உண்டு. ஆனால் அவருக்கு எதிராக இளைஞர்கள் குரல் கொடுத்தால் அவர்களை பிடித்து அடைக்க தமிழக பொலிசுக்கு சுதந்திரம் உண்டு.

• கூலிப்படையை ஏவி கொலை செய்ய காஞ்சி சங்கராச்சாரிக்கு சுதந்திரம் உண்டு. அவரை விடுதலை செய்யவும், அப்பாவி பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதிக்கவும் இந்திய நீதிதுறைக்கு சுதந்திரம் உண்டு.

• கோடிக்கணக்கில் ஊழல் செய்யவும் வெளியில் சுதந்திரமாக திரியவும் ராசா, கனிமொழி வகையறாக்களுக்கு சுதந்திரம் உண்டு. ஆனால் பல வருடங்களாக சிறையில் வாடும் அப்பாவிகளுக்கு விடுதலை இல்லை.

• தீபெத் அகதிகள் சுதந்திரமாக இந்தியாவில் நடமாடலாம். ஆனால் தமிழ் அகதிகளை மட்டும் கொடிய சிறப்பு முகாமில் அடைத்து வைக்க தமிழக அரசுக்கு முழு சுதந்திரம் உண்டு.

தமிழா!
நீ அடிமையாக இருக்கிறாயா? சுதந்திரமாக இருக்கிறாயா?

Photo: • சுதந்திரதின வாழ்த்து தெரிவிப்போரின் சிந்தனைக்கு!

• மாணவ சமுதாயம் பொங்கியெழுந்தால்......?

• மாணவ சமுதாயம் பொங்கியெழுந்தால்......?

புலிப்பார்வை படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களை தாக்கியுள்ளமை மிகவும் கண்டனத்திற்குரியது.

“புலிப்பார்வை” தயாரிக்க தயாரிப்பாளருக்கு உரிமை உண்டென்றால்
“புலிப்பார்வை”யை ஆதரிக்க சீமானுக்கு உரிமை உண்டென்றால்
“புலிப்பார்வை”யை எதிர்க்க மாணவர்களுக்கு உரிமை இல்லையா?

ஜனநாயக வழியில் எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களை
உருட்டுக்கட்டைகளை கொண்டு தாக்கியது கண்டனத்திற்கரியது.

மாணவர்களை தாக்கியது யாராக இருந்தாலும்
அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவெனில்
மாணவ சமுதாயம் ஒன்று திரண்டு பொங்கியெழுந்தால்
அதை உங்களால் தாங்க முடியாது.
அப்புறம் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது.

ஈரானில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை விரட்டியது மாணவர் போராட்டமே!

ஈழத்தில் ஆயுதப்போராட்டத்திற்கு வழிசமைத்தது மாணவர் போராட்டமே!

மாணவர் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறட்டும்.

Photo: • மாணவ சமுதாயம் பொங்கியெழுந்தால்......?

மாணவர் பணம் கேட்டு மிரட்டியது உண்மையா?

• “கத்தி” தயாரிப்பாளரிடம் மாணவர் பணம் கேட்டு மிரட்டியது உண்மையா?

“கத்தி” படத் தயாரிப்பாளர் சுந்தரமுர்த்தி என்பவரிடம் மாணவர் சிலர் பணம் கேட்டு மிரட்டியதாக பொலிசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையா என்பதை சம்பந்தப்பட்ட மாணவர்கள் தெரிவிக்க வேண்டும்.

தயாரிப்பாளரிடம் பணம் கேட்டு மிரட்டியது உண்மை என்றால் அது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மாணவர்களை தாக்கியது எந்தளவு கண்டிக்கத்தக்கதோ அதேபோல் மாணவர்கள் பணம் கேட்டு மிரட்டியதும் கண்டிக்கத்தக்கதே!

சுந்தரமுர்த்தி என்பவரின் பேட்டியைக் கேட்க கீழ்வரும் லிங்கை பயன்படுத்தவும்.
https://www.youtube.com/watch?v=38stlq3wlJo&feature=youtu.be

திரைப்படங்களை தடை செய்தல் பற்றி

• திரைப்படங்களை தடை செய்தல் பற்றி

“ஓவ்வொரு வார்த்தைக்கு பின்பும் ஒரு வர்க்கப் பண்பு உள்ளது. ஒரு வர்க்க நலன் உள்ளது”- தோழர் மாவோ சேதுங்

போராட்டத்தை எதிர்த்தும், போராளிகளை பழித்தும்
சிலர் கவிதை எழுதுகின்றனர்.
சிலர் கதை எழுதுகின்றனர்
சிலர் பேசுகின்றனர்
சிலர் சஞ்சிகை வெளியிடுகின்றனர்.
சிலர் திரைப்படம் எடுக்கின்றனர்
கதை எழுதுபவர்கள,சஞ்சிகை வெளியிடுபவர்கள, பேசுபவர்கள்
இவர்களை எல்லாம் தடை செய்யாமல்
திரைப்படங்களை மட்டும் தடை செய்வது என்ன போராட்டம்?

“ஆயிரம் மலர்கள் மலரட்டும். நூறு கருத்துகள் முட்டி மோதட்டும்” என்றார் மாவோ.

எனவே கருத்துகளை தடை செய்யாது அவற்றை நேரில் எதிர்கொள்வோம்
அவற்றின் வர்க்க குணாம்சத்தை அம்பலப்படுத்துவோம்.

மக்கள் மீது நம்பிக்கை வையுங்கள்
மக்கள் விரோத படங்களை
யார் நடித்தாலும், எத்தனை கோடி செலவழித்தாலும்
மக்களே அதனை முற்றாக நிராகரிப்பார்கள்.

Photo: • திரைப்படங்களை தடை செய்தல் பற்றி

13 வருடம் உண்ணாவிரதம் இருந்த இரோம் சார்மிளா இந்திய நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டார்!

• 13 வருடம் உண்ணாவிரதம் இருந்த இரோம் சார்மிளா
இந்திய நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டார்!

மணிப்பூரில் பல அப்பாவிகளின் உயிரிழப்பிற்கு காரணமான
பல பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுக்கு காரணமான
பாதுகாப்பு படைக்கு வழங்கப்பட்ட கருப்பு சட்டத்தை நீக்க கோரி
கடந்த 13 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வரும்
இரோம் சார்மிளா நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

• இந்தியாவில் உண்ணாவிரதம் இருப்பது சட்டப்படி குற்றமா?

• அதுவும் கருப்பு சட்டத்தை நீக்குமாறு கோருவது தவறா?

• அறவழியில் போராடுவது இந்தியாவில் குற்றமா?

• தற்கொலைக்கு முயன்றார் என சிறையில் அடைப்பது நியாயமா?

• இதுதான் காந்தி தேசத்தின் இலட்சனமா?

இன்று இரோம் சார்மிளா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீதான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அவரது கோரிக்கையான கருப்பு சட்டம் நீக்கவில்லை.
அதனால் அவரது உண்ணாவிரதமும் நிறுத்தப்படவில்லை.

என்ன கொடுமை இது? வெட்கம்!
இந்த லட்சனத்தில் 2020ல் இந்தியா வல்லரசாமே?

Photo: • 13 வருடம் உண்ணாவிரதம் இருந்த இரோம் சார்மிளா 

இது தான் மகிந்த சிந்தனையா?

இது தான் மகிந்த சிந்தனையா?

செய்தி- பாலஸ்தீனத்திற்கு இலங்கை அரசு ஒரு மில்லியன் டாலர் அன்பளிப்பு

இலங்கை முழுவதும் வறட்சி காணப்படுகிறது. குறிப்பாக என்றுமில்லாதவாறு யாழ் குடாநாட்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அந்த மக்களுக்கு குடிதண்ணீர் வழங்க பணம் இல்லையாம். ஆனால் பாலஸ்தீனத்திற்கு ஒரு மில்லியன் டாலர் பணம் வழங்குகிறார்கள். இலங்கை அரசு ஏன் இப்படி செய்கிறது?

இலங்கையில் முஸ்லிம் மக்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களுடைய வழிபாட்டு தலங்கள் இடிக்கப்படுகிறது. அண்மையில் அழுத்கமவில் கோடிக்கணக்கணக்கான சொத்துகள் நாசமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை அரசு அவர்களுக்கு நட்ட ஈடு வழங்காமல் பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு உதவி வழங்குவது எதற்காக? உலக முஸ்லிம் நாடுகளை ஏமாற்றுவதற்காகவா?

காரைநகரில் ஒரு சிறுமி ராணுவத்தால் நாசமாக்கப்பட்டாள். அதற்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் அதேவேளை மன்னாரில் ஒரு மாணவி ராணுவத்தால் சீரழிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத மகிந்த அரசு மன்னார் ஆயர் புலியாம், அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

அண்மையில் பல்கலைக்கழக தமிழ் மாணவன் ஒருவன் அரச ரவுடிகளால் தாக்கப்பட்டிருக்கிறான். ஆனால் அவன் தன்னைத்தானே தாக்கி காயப்டுத்திக் கொண்டதாக மகிந்தவின் பொலிஸ் கண்டு பிடித்துள்ளது.

இதே ரேஞ்சில் போனால் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் தாங்களாவே வந்து சிறையில் குந்தி இருப்பதாக மகிந்த கூறுவாரோ என்று அச்சமாக இருக்கிறது.

இதைக்கூட தாங்கிக் கொள்ளலாம். ஆனால் முள்ளிவாயக்காலில் கொல்லப்பட்ட 40 அயிரம் தமிழர்களும் தாங்களே தங்களை சுட்டு இறந்தார்கள் என்று மட்டும் தயவு சொல்லிவிடாதீர்கள் மகிந்த அவர்களே! ஏனெனில் இதை தாங்கும் சக்தி எமக்கு மட்டுமல்ல உலகில் யாருக்குமே இல்லை.

குறிப்பு- தயவு செய்து இந்த பதிவை சிரிக்காமல் படிக்கவும். இதுதான் இலங்கை மக்களின் இன்றைய நிலை.

Photo: • இது தான் மகிந்த சிந்தனையா?

டீல்லிக்கு காவடி தூக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர்

• டீல்லிக்கு காவடி தூக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர்
இதுவரை சாதித்தது என்ன? இனி சாதிக்க போவது என்ன?

தலைவர் சம்பந்தன் அவர்கள் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை
டில்லிக்கு காவடி தூக்கியே கழித்துள்ளார்.

இந்தியாவுக்கு பூரண விசுவாசியாக இருந்துள்ளாரேயொழிய
தனக்கு ஓட்டு போட்ட தமிழ் மக்களுக்கு விசுவாசமாக இருந்ததில்லை.

இன்று யாழ் குடாநாட்டில் என்றுமில்லாதவாறு வரட்சி.
குடாநாட்டு மக்களுக்கு குடி நீர்ப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்த தலைவர்களால் இரணைமடு குளத்தில் நீர் பெற்று கொடுக்க முடியவில்லை.
அது குறித்தும் அவர்களுக்கு ஒருவித அக்கறையும் இல்லை.

சிறையில் உள்ளவர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களை பார்வையிட பெற்றோர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
அவர்களை இறந்த பின்பு ஆஸ்பத்திரியில் வந்து பார்கலாம் என்று அரசு பெற்றேர்களுக்கு ஆணவமாக பதில் கொடுக்கிறது. இதற்காக குரல் கொடுக்க இந்த தலைவர்களுக்கு தோன்றவில்லை

ராணுவம் சிறுமிகளைக்கூட பாலியல் வல்லுறவு செய்கிறது. பாதுகாப்பு இன்றி மக்கள் அல்லல்படுகின்றனர். இதற்காக சாதாரண மக்களே ராணுவத்தை எதிர்த்து போராடுகின்றனர். ஆனால் அதில் பங்கெடுக்கக்கூட இந்த தலைவர்களுக்கு விரும்பம் வரவில்லை.

ஆனால் எப்போது பார்த்தாலும் டில்லிக்கு விஜயம் செய்வதும், இந்தியாவை தொடர்ந்தும் நம்பிக்கை நட்சத்திரமாக காட்டுவதுமென மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கின்றனர்.

தமது குடும்பத்தை இந்தியாவில் தங்கவைப்பதற்கும்
அந்த குடும்பத்தை வாரம்தோறும் சென்று பார்ப்பதற்கு விசா பெறுவதற்காகவும்
தங்கள் பிள்ளைகளுக்கு இந்திய பல்கலைக்கழகத்தில் சீட்டு பெறவும்
இந்திய அரசிமிருந்து இரகசியமாக பணம் பெறுவதற்காகவும்
தொடர்ந்து சொந்த மக்களுக்கு துரோகம் இழைத்து வரும்
கூட்டமைப்பினரை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

இவர்களது இந்திய விசுவாசம்
இலங்கை தமிழர்களுக்கு
இதுவரை எதையும் சாதிக்கவில்லை.
இனியும் எதையும் சாதிக்கப் போவதில்லை.

இவர்களால் தமக்கு சில சலுகைகளைப் பெறுவதை தவிர
தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை.

Photo: • டீல்லிக்கு காவடி தூக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் 