Wednesday, December 31, 2014

நல்லாய் இருக்கடா நீங்களும் உங்கட நியாயம்!

 நல்லாய் இருக்கடா நீங்களும் உங்கட நியாயம்!
செய்தி- காந்தியைக் கொன்ற கொட்சே சிறந்த தேச பகத்தர்- பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர் மாகாராஜ் தெரிவிப்பு
மாகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே தேச பக்தராம்.
ஆனால் பல அப்பாவி தமிழர்களை கொல்வதற்கும்
பல பெண்களை பாலியல் வல்லுறவு செய்வதற்கும்
காரணமான ராஜீவ் காந்தியைக் கொன்ற தனு பயங்கரவாதியாம்.
நல்லாய் இருக்கடா நீங்களும் உங்கட நியாயமும்?
பகத் சிங் வெடி குண்டு வீசினால் அது சுதந்திர போராட்டம்
ஆனால் ஈழப் போராளிகள் குண்டுவைத்தால் அது பயங்கரவாதம்
நல்லாய் இருக்கடா நீங்களும் உங்கட நியாயமும்?
40 அயிரம் அப்பாவி தமிழர்களைக் கொன்ற
600 தமிழக மீனவர்களைக் கொன்ற
மகிந்த ராஜபக்சேவுக்கு செங்கம்பள வரவேற்பு
ஆனால் நம்பி வந்த அகதிகள் சிறப்புமுகாமில் அடைப்பு
நல்லாய் இருக்கடா நீங்களும் உங்கட நியாயமும்?

அப்துல் ரவூப் தியாகத்தை போற்றுபவர்கள் தோழர் மாறன் தியாகத்தை போற்றுவதற்கு தயங்குவது ஏன்?

 அப்துல் ரவூப் தியாகத்தை போற்றுபவர்கள்
தோழர் மாறன் தியாகத்தை போற்றுவதற்கு தயங்குவது ஏன்?
1995ம் ஆண்டு ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டவர் அப்துல் ரவூப் அவர்கள்.
1988ம் ஆண்டு ஈழத்தில் இந்திய படைகள் செய்த கொடுமைகளுக்கு எதிராக கொடைக்கானல் டிவி டவருக்கு குண்டு வைத்து வீர மரணம் அடைந்தவர் தோழர் மாறன்.
அப்துல் ரவூப் போலவே தோழர் மாறனும் ஈழத் தமிழர்களுக்காகவே தனது உயிரை தியாகம் செய்தவர். இருவருடைய தியாகங்களும் போற்றப்படவேண்டியவை. ஆனால்,
• அப்துல் ரவூப் இன் தியாகத்தை போற்றுவோர் தோழர் மாறன் தியாகத்தை போற்றுவதற்கு தயங்குவது ஏன்?
• அப்துல் ரவூப் நினைவாக மாணவர் பாசறை அமைத்துள்ள “நாம்தமிழர்” சீமான் அவர்கள் தோழர் மாறன் பெயரைக்கூட உச்சரிக்க தயங்குவது ஏன்?
• அப்துல் ரவூப் ற்கு அஞ்சலி செலுத்திய வைகோ அவர்கள் இதுவரை தோழர் மாறனுக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்?
• முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அப்துல் ரவூப்க்கு நினைவுச் சின்னம் வைத்த அய்யா நெடுமாறன் அவர்கள் தோழர் மாறனுக்கு நினைவு சின்னம் வைக்க மறுப்பது ஏன்?
• அப்துல் ரவூப் தியாகத்தை மதிப்பளித்த புலிகள் இயக்கம்கூட தோழர் மாறன் தியாகத்தை மதிப்பளிக்க தவறியது ஏன்?
இனியாவது
தோழர் மாறனை நினைவு கூருவோம்.
தோழர் மாறன் தியாகத்தை போற்றுவோம்
தோழர் மாறனுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்!

• ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே!

• ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே!
பாகிஸ்தான் குழந்தைகளுக்கு ஒரு நியாயம்!
செஞ்சோலை குழந்தைகளுக்கு இன்னொரு நியாயம்?
இது என்ன நியாயம் ஜனாதிபதி அவர்களே?
செஞ்சோலையில் குழந்தைகளை கொன்ற நீங்கள்
பாகிஸ்தான் குழந்தைகள் கொலையை கண்டிப்பது
கசாப்பு கடைகாரன் காருண்ய மாநாடு நடத்துவது போல் இருக்கிறது!
செஞ்சோலையில் இருந்த குழந்தைகளை குண்டு வீசிக் கொன்ற உங்களால் எப்படி கொஞ்சம்கூட கூச்சமின்றி பாகிஸ்தானில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்காக கண்டனம் செய்ய முடிகிறது?
இதைவிட “இலங்கை ராணுவம் எந்த பொது மகனையும் கொல்லவில்லை” என்று வேறு அண்மையில் கூறியுள்ளீர்கள்.
அப்படியென்றால் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட 40ஆயிரம் அப்பாவி தமிழர்களும் தங்களைத் தாங்களே சுட்டு இறந்தார்களா?
1989ல் 60 ஆயிரம் சிங்கள மக்களை கொன்றது ராணுவம் என்றும் அதற்கு எதிராக ஜ.நா வரை சென்று மனுக் கொடுத்தீர்களே! அதை மறந்துவிட்டீர்களா?
அல்லது அத்தனை பேரும் முள்ளிவாய்க்கால் தமிழர்கள்போல் தங்களைத் தாங்களே சுட்டு இறந்தவர்கள் என இப்போது கண்டு பிடித்திருக்கிறீர்களா?
1971ல் 4ஆயிரம் ஜே.வி.பி இளைஞர்களை கொன்றது யார்? அவர்களும் தாங்களாகவே இறந்தவர்களா?
கதிர்காமத்தில் மன்னம்பெரி என்ற யுவதியை பாலியல் வல்லுறவு செய்து பெண் உறுப்பில் குண்டை வெடிக்கவைத்து கொலை செய்தவர் யார்?
அவரே தன்னை பாலியல் வல்லுறவு செய்து அவரே தன் உறுப்பில் குண்டை வெடிக்கவைத்தாரா?
வரவர உங்கள் நகைச்சுவைக்கு அளவேயில்லாமற் போய்விட்டது ஜனதிபதி அவர்களே!
இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவையாக உங்களின் இந்த பேச்சு அமைந்துவிட்டது.
இதற்குரிய பரிசை மக்கள் உங்களுக்கு ஜனவரி 8ம் திகதி கண்டிப்பாக தருவார்கள்.

செய்தி- நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் குறித்த உண்மைகளை மத்திய அரசு வெளியிட வேண்டும்- வைகோ வேண்டுகோள்.

செய்தி- நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் குறித்த உண்மைகளை மத்திய அரசு வெளியிட வேண்டும்- வைகோ வேண்டுகோள்.
வைகோ அவர்களே!
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் மரணம் தொடர்பான உண்மைகள் வெளியிடப்பட வேண்டும் என்ற உங்கள் கோரிக்கை நியாயமானதே. அதேபோல் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பற்றிய உண்மைகளையும் தாங்கள் நியாயமாக வெளியிட வேண்டும் அல்லவா!
பிரபாகரன் இருக்கிறார். அவர் மீண்டும் வந்து தமிழீழம் பெற்று தருவார் என்று எப்படி உங்களால் தொடர்ந்து கூறமுடிகிறது?
பிரபாகரன் இருக்கிறார் என்று தாங்கள் கூறுவதன் மூலம் அவர் மரணத்தில் இந்திய அரசின் பங்களிப்பை தமிழக மக்கள் உணர்ந்து கொள்வதை தடுக்கிறது அல்லவா?
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பது அவர் தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் ஆயிரக் கணக்கான மக்களை எல்லாம் பலி கொடுத்துவிட்டு அவர் மட்டும் தப்பியோடிய ஒருவர் என்ற அவமானத்தை கொடுக்கிறது அல்லவா?
இறுதி கணம்வரை உங்களை நம்பிய பிரபாகரனுக்கு துரோகம் செய்ய எப்படி உங்களுக்கு மனம் இடங்கொடுக்கிறது?
தயவு செய்து இனியாவது மக்கள் முன் பிரபாகரன் பற்றிய உண்மைகளை கூறிவிடுங்கள். தொடர்ந்து பொய் கூறி மக்களை ஏமாற்றாதீர்கள்.

இயேசு பிரானே!

இயேசு பிரானே!
இவர்கள் தெரிந்தே தவறு செய்கிறார்கள்.
இவர்கள் பாவங்களை மன்னிக்காதீர்கள்!
முள்ளிவாய்க்காலில் 40 அயிரம் அப்பாவி மக்களை கொன்ற மகிந்தவின் இரத்தம் தோய்ந்த கைகளை கொஞ்சம்கூட கூச்சமின்றி குலுக்கிறார் பாப்பரசர்.
அதுமட்டுமன்றி இலங்கைக்கு விஜயம் செய்து மகிந்தவின் தேர்தல் வெற்றிக்கு உதவவும் விரும்புகிறார்.
ஜ.நா மனிதவுரிமைக் கமிசனே மகிந்தவை போர்க்குற்றவாளி என்று விசாரிக்க விரும்புகிறது. ஆனால் பாப்பரசர் மகிந்தவுக்கு உதவுகிறார் எனில் என்ன அர்த்தம்?
மகிந்த ராஜபக்ச கிருத்தவ தந்தை கருணாகரன் அடிகளாரைக் கொன்றார்.
பல கிருத்தவ தேவாலயங்கள் மீது குண்டு வீசினார்.
இன்றும்கூட ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட தமிழ் பெண்ணுக்காக நியாயம் கேட்ட மன்னார் ஆயர் மிரட்டப்படுகிறார்.
இத்தனைக்கும் பிறகும் மகிந்தவுக்கு பாப்பரசர் உதவ விரும்புகிறார் எனில் அவரும் அறிந்தே பாவம் செய்கிறார் அல்லவா?

டிசெம்பர் 26, தோழர் மாசேதுங் பிறந்தநாள்

• டிசெம்பர் 26, தோழர் மாசேதுங் பிறந்தநாள்
இலங்கையில் மாசேதுங் சிந்தனைகளை அறிமுகப்படுத்தி வளர்த்தெடுத்தவர் தோழர் சணமுகதாசன் அவர்களும் அவரது தலைமையில் இயங்கிய கம்யுனிஸ்ட் கட்சியுமே.
இலங்கையில் தேர்தல் பாதையை நிராகரித்து ஆயுதப் போராட்டப் பாதையை முன்வைத்தது மகத்தான மாசேதுங் சிந்தனைகளே.
தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தவும் ஆயுதப் போராட்ட பாதையை தெரிவு செய்யவும் பெரும் பங்கு வகித்தது மாசேதுங் சிந்தனைகளே.
ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்களை இலங்கைஅரசு “பயங்கரவாதிகள்” என்றழைத்தது. தமிழர்விடுதலைக்கூட்டணி “பொடியன்கள்” என்றழைத்தது. ஆனால் மாவோயிஸ்ட் தலைவரான தோழர் சண்முகதாசனே தமிழ் இளைஞர்களை முதன் முதலாக “போராளிகள்” என்று அழைத்தவர்.
அதுமட்டுமல்ல அவர் இதை ஜந்து கட்சி கூட்டத்தில் சிங்கள தலைவர்கள் மத்தியில் சிங்கள மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக கூறியிருந்தார்.
யாழ்குடாநாட்டில் இருந்த சாதீய தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியவர்கள் மாவோயிச சிந்தனைவாதிகளே.
இலங்கையில் மாவோயிஸ்ட்டுகள் எதுவும் செய்யவில்லை என்று இன்று பேசுவோர் இவ் வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆயுத எழுத்து (நாவல்)

• ஆயுத எழுத்து (நாவல்)
ஒரு புலிப் போராளியின் ஒப்புதல் வாக்குமூலம்?
புலிகள் அமைப்பில் பல வருடங்களாக முன்னணி செயற்பாட்டாளராக விளங்கிய சாத்திரி என்பவர் எழுதி வெளிவந்திருக்கும் நாவல் “ஆயுத எழுத்து”
இதுவரை ஈழப் போராட்டம் குறித்து சில நாவல்கள் வந்திருக்கின்றன. இதுவும் ஈழப் போராட்டம் பற்றிய நாவலாகவே வந்துள்ளது. ஈழப் போராட்டத்தில் அக்கறையுள்ளவர்கள் படிக்க வேண்டிய நாவல்களில் இதுவும் ஒன்று.
இதுவரை மாற்று கருத்தாளர்களால் புலிகள் அமைப்பு மீது முன்வைக்கப்பட்ட கருத்துகள் பல புலிகள் அமைப்பில் இருக்கும் சாத்திரி என்பவரால் இந் நாவலில் கூறப்பட்டிருக்கிறது. எனவே இது ஒரு ஒப்புதல் வாக்குமூலமாக கருத இடம் அளிக்கிறது.
உண்மை பெயர்களுடன் உண்மை சம்பவங்களை எழுதிவிட்டு எதற்காக நாவல் என குறிப்பிடுகிறார்; என்று புரியவில்லை? ஒருவேளை ஏதாவது சட்ட சிக்கல் வருமா என அஞ்சினாரா தெரியவில்லை?
• புலிகள் அமைப்பே துர்க்கை அம்மன் கோவிலில் கொள்ளையடித்தது.
• புலிகள் அமைப்பே பிரான்சில் கஜன், நாதன் ஆகியோரைக் கொன்றது.
• புலிகள் அமைப்பு ஆயுதங்களுக்காக போதைப் பொருள் கடத்தியது.
• புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார்.
இவ்வாறு பல செய்திகள் எழுதப்பட்டிருப்பது புலிகள் புனிதமானவர்கள் என நம்புவோருக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால் சாத்திரி அவர்கள் இவற்றிற்கு தேவையான ஆதாரங்களுடன் விபரமாக எழுதியுள்ளார்.
புலிகள் பலமாக இருக்கும்போது ஏன் இவற்றை தெரிவித்து நாவல் எழுதவில்லை என சிலர் கேட்கலாம். ஆனால் அப்போது எழுதவில்லை என்பதற்காக இப்போது எழுதக்கூடாது என்றோ அல்லது எப்போதும் எழுதக்கூடாது என்று அர்த்தம் இல்லையல்லவா!
புலிகளின் தவறுகள் தொடர்பாக உரையாடுவதற்கும் இனங் கண்டு கொள்வதற்கும் இந் நாவல் மூலம் சாத்திரி அவர்கள் பங்களித்துள்ளார். அந்த வகையில் அவரது பங்களிப்பு பாராட்டப்பட வேண்டியதே.
ஈழப் போராட்டம் குறித்து நிறைய எழுத்துக்கள் வரவேண்டும். அவை ஆக்கபூர்வமான உரையாடலுக்கு வழி சமைக்க வேண்டும்.