Saturday, May 26, 2018

ஏய் கார்ல் மார்க்ஸ்!

ஏய் கார்ல் மார்க்ஸ்!
நீ பிரித்தானியாவை விட்டு வெளியேற வேண்டும்!
நீ அகதியாக வந்தது பிரித்தானியாவுக்கு
நீ குடும்பமாக வாழ்ந்தது பிரித்தானியாவில்
நீ மருத்துவ வசதி பெற்றது பிரித்தானியாவில்
நீ பியர் குடித்தது பிரித்தானியா பப்பில்
நீ ஆராய்ச்சிக்கு நூலகம் பாவித்தது பிரித்தானியாவில்
ஆனால் இதையெல்லாம் தந்த மகாராணியின் குடும்பத்தை மறந்து
நன்றி கெட்டத்தனமாக புரட்சி பற்றி பேசலாமா?
பிரித்தானிய அரசையும் அதன் கொடியையும் எதிர்க்கலாமா?
முதலாளித்துவத்திற்கு எதிரான மூலதனம் புத்தகத்தை எழுதலாமா?
நீ உடனடியாக பிரித்தானியாவை விட்டு வெளியேற வேண்டும்!
இப்படிக்கு
பிரித்தானிய மகாராணியின் விசுவாசமிக்க
தமிழ் குஞ்சுகள்
குறிப்பு-
முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கு ஆயுதம் கொடுத்து உதவிய நாடுகளில் பிரிட்டனும் ஒன்று.
எனவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பிரித்தானிய கொடி தேவையில்லை என தமிழ்சொலிராறிற்றி அமைப்பு கோரியது.
உடனே மகாராணியின் விசுவாசமிக்க தமிழர் சிலர் அவர்களை பிரித்தானியாவை விட்டு வெளியேறும்படி எழுதுகின்றனர்.
நல்லவேளை இவர்கள் காலத்தில் கார்ல்மாக்ஸ் இல்லை. இருந்திருந்தால் அவரையும் வெளியேறும்படி எழுதியிருப்பார்கள்.

மக்கள் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு

•மக்கள் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு
நெஞ்சில் குண்டு பாய்ந்து ஒருவர் பலி
ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி போராடிய மக்கள் மீது பொலிஸ் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
பொலிசார் சுட்டதில் நெஞ்சில் குண்டு பாய்ந்து ஒருவர் பலியாகியுள்ளார்.
மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டுள்ளது.
பொலிசாரின் இந்த அத்து மீறலுக்கு தமிழக அரசே பொறுப்பாகும்.
காப்ரேட் கம்பனிக்காக சொந்த மக்களையே சுட்டுக் கொன்றுள்ளது தமிழக அரசு.
பொலிசார் மீது தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறிய பரட்டை ரஜனி இப்போது என்ன கூறப்போகிறார்?
மக்களை சுட்ட பொலிசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவாரா?
பொலிசார் மக்களின் நண்பன் இல்லை. அவர்கள் எப்போதும் அரசின் ஏவல் நாய்களே.
தூத்துக்குடி மக்களோடு ஒன்றிணைவோம். ஸ்டெர்லைட்டை மூடும்படி ஒருமித்து குரல் கொடுப்போம்.

பொலிஸ் அராஜகத்தின் உச்சம்!

•பொலிஸ் அராஜகத்தின் உச்சம்!
13 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலி!!
தமிழக அரசு தமிழ் மக்களின் அரசா? அல்லது காப்ரேட் கம்பனிகளின் அரசா?
ஸ்டெர்லைட் கம்பனிக்காக 13 பேரை தமிழக பொலிஸ் சுட்டுக்கொன்றுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி கோரி தூத்துக்குடி மக்கள் அறவழியில் போராடி வருகின்றனர்.
ஒரு ஜனநாயக நாட்டில் அறவழியில் போராட்டம் நடத்துவது மக்களின் உரிமை.
ஆனால் அந்த அரசோ அந்த அப்பாவி மக்கள் மீது பொலிஸ் வன்முறையை ஏவிவிட்டுள்ளது.
பொலிஸ் வன்முறையில் இதுவரையில் 13 மக்கள் பலியாகியுள்ளனர்.
மக்கள் மீது தப்பாக்கி சூடு நடத்துவது தவறு. அப்படி சுடுவதாக இருந்தாலும் வானில் சுட வேண்டும். இல்லையேல் காலில் சுட வேண்டும்.
ஆனால் பொலிஸ் ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் சுட்டுக் கொன்றுள்ளது. அதுவும் நெஞ்சில் சுட்டுக் கொன்றுள்ளது.
ஸ்டெர்லைட்; ஆலையை மூடு என்று கோஷம் போட்ட இளம் பெண் வாயுக்குள் சுட்டு கொன்றிருக்கிறார்கள்.
இதன் அர்த்தம் என்ன?
இனி காப்ரேட் கம்பனிகளுக்கு எதிராக மக்கள் யாரும் வீதியில் இறங்கி போராடக்கூடாது என்று மிரட்டுவதற்காகவே தமிழக அரசு இப்படி செய்துள்ளது.
ஆனால் மக்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டால் அதே வன்முறை மூலம் பதில் அளிக்க தயங்கமாட்டார்கள் என்ற வரலாற்று உண்மையை தமிழக அரசு கவனிக்கத் தவறிவிட்டது.
வெகுவிரைவில் தமிழக அரசு மட்டுமல்ல இந்திய அரசும் உணர்ந்து கொள்ளும் வண்ணம் தமிழக மக்கள் பதில் அளிப்பார்கள்.
eye-crossed-out
This photo may show violent or graphic content.

கோடியாய் நாமிருந்தும்

கோடியாய் நாமிருந்தும்
கேட்பார் யாருமில்லை - இந்திக்கு
இனியும் தமிழ் அடிமை எனில் - இனி
என்றுமே உயிர்த் தமிழுக்கு விடிவுமில்லை!
17 வயது மாணவி வெனிஸ்டா படுகொலை!
சுட்டது ஸ்டெர்லைட் கம்பனிக்காக!
சுடச் சொன்னது டெல்லி இந்தி அரசு!
சுட்டுக் கொன்றது தமிழக எடுபிடி அரசு!
குரல் கொடுத்தமையினால்
வாயில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்
அந்த மாணவி உச்சரித்த இறுதி வார்த்தை
“ஸ்டெர்லைட்டை மூடுங்கள்”!
தமிழா!
என்ன செய்யப்போகிறோம்?
eye-crossed-out
This photo may show violent or graphic content.

இது உயிரிழந்த 13 பேர் சிந்திய ரத்தம்

இது உயிரிழந்த 13 பேர் சிந்திய ரத்தம்
இது ஆபத்தான நிலையில் இருக்கும் 20 பேர் சிந்திய ரத்தம்
இது காயம்பட்ட நூற்றுக்கணக்கானவர் சிந்திய ரத்தம்
மக்கள் சிந்திய இந்த ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும்
தமிழக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்!
நடந்தது கலவரமும் இல்லை
நடந்தது வன்முறையும் இல்லை
நடந்தது திட்டமிட்ட படுகொலை
படுகொலை செய்தவர்கள் மக்களுக்கு பதில்
சொல்லியே ஆக வேண்டும்!

பரட்டை! உயிரோடு இருக்கிறாயா? இருந்தால் பிளீஸ் செத்துவிடு!

•பரட்டை!
உயிரோடு இருக்கிறாயா?
இருந்தால் பிளீஸ் செத்துவிடு!
சிஸ்டம் சரியில்லை என்றாய்
பொலிஸ் சரியில்லை என்று சொல்வாயா?
எஸ்.வி. சேகரை பிடிக்க முடியாத பொலிசுக்கு
மக்களை சுட என்ன அருகதை என்று கேட்பாயா?
போர் வந்தால் சொல்லியனுப்புங்கள் வருகிறேன் என்றாய்
13 பேர் செத்துள்ளார்கள் நீ எப்போது வரப் போகிறாய்?
இளம் பெண்ணை வாய்க்குள் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்
மருத்தவமனைக்கள்கூட புகுந்து இரக்கமின்றி தாக்கியுள்ளார்கள்
இப்போது என்ன சொல்லப் போகிறாய்?

செத்தது மாடாக இருந்திருந்தால்

செத்தது மாடாக இருந்திருந்தால்
அம்புலன்சும் வந்திருக்கும்
மோடி ஆரசும் ஓடி வந்திருக்கும்.
ஆனால் செத்தது தமிழனாயிற்றே
மோடி அரசில் தமிழன் உயிர்
மாட்டை விடக் கேவலமாயிற்றே!
செத்தவன் பார்ப்பாணாயிருந்தால்
உச்சநீதிமன்றம் தானாகவே தலையிட்டிருக்கும்
தேசிய மனிதவுரிமைக் கமிஷன் கேள்வி மேல் கேள்வி கேட்டிருக்கும்
ஆனால் செத்தது தமிழனாயிற்றே
தமிழன் ஈழத்தில் செத்தாலும் சரி
இந்தியாவில் செத்தாலும் சரி
கேட்பதற்கு நாதியற்ற இனமாகவே இருக்கிறான்.
100 நாட்கள் அறவழியில் போராடிய மக்களுக்கு
வன்முறையால் பதில் அளித்துள்ளது இந்திய அரசு
காஸ்மீரில்கூட சினைப்பர் பிரிவு இல்லை
ஆனால் தூத்துக்குடியில் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை
திட்டமிட்டு சினைப்பர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளது அரசு.
அதுவும் சிவில் உடையில் வந்து கொன்று குவித்துள்ளனர்.
நடந்தது கலவரம் என்றால் வானில் சுட்டிருப்பார்கள்
நடந்தது வன்முறை என்றால் காலில் சுட்டிருப்பார்கள்
நடந்தது திட்டமிட்ட படுகொலை. அதனால்தான் சினைப்பர் துப்பாக்கியால் நெஞ்சில் சுட்டிருக்கிறார்கள்.
சுட்டுவிட்டு யூஸ் கொடுத்தால் அது இலங்கை அரசு
சுட்டுவிட்டு காசு கொடுத்தால் அது இந்திய அரசு
தமிழா!
இன்னும் எத்தனை நாளைக்கு இதனை சகித்துக்கொண்டிருப்பது?