Wednesday, January 30, 2019

2009ல் தமிழின அழிப்பை செய்த இலங்கை அரசுக்கு

2009ல் தமிழின அழிப்பை செய்த இலங்கை அரசுக்கு இந்திய அரசு செய்த உதவி அனைவரும் அறிவார்கள்
2009ற்கு பின்னரும் இலங்கை அரசை ஜ.நா வில் காப்பாற்றி வருவதோடு அதற்கு பல ராணுவ உதவிகளையும் இந்திய அரசு வழங்கி வருவதும் அனைவரும் அறிந்த விடயம்.
ஆனால் அண்மையில் காலமான பிறைசூடி அவர்கள் இந்திய அரசின் துணையோடு மரணம் அடையும்வரை போராடியவர் என்று காசிஆனந்தன் அய்யா கூறியுள்ளார்.
இந்திய அரசின் துணையோடு பிறைசூடி அவர்கள் என்ன போராட்டத்தை இறுதிவரை நடத்தினார் என்பதை காசி அனந்தன் அய்யா கூறவேண்டும்.
இவர் இப்படித்தான் பாலு மகேந்திரா மறைந்தபோதும் தானும் பாலு மகெந்திராவும் சயிக்கிளில் சென்று மட்டக்களப்பு கல்லூரிக்கு வெடி குண்டு வீசியதாக கூறியிருந்தார்.
எப்போது எந்த பாடசாலைக்கு குண்டு எறிந்தீர்கள் என்று கேட்டதற்கு காசி ஆனந்தன் அய்யா இதுவரை பதில் அளிக்கவில்லை.
இப்போது மறைந்த பிறைசூடி அவர்களை இந்திய அரசின் துணையுடன் சேர்ந்து செயற்பட்டவர் என்று கூறியதன் மூலம் அவருக்கு களங்கம் விளைவித்துள்ளார்.
எனவே காசி அனந்தன் அய்யா தான் கூறியதற்கு ஆதாரம் காட்ட வேண்டும் இல்லையேல் கூறியதை வாபஸ் பெற வேண்டும்.
அற்ப சலுகைகளுக்காக காசி ஆனந்தன் அய்யா தேவையானால் இந்திய அரசுக்கு வாலாட்டட்டும்.
ஆனால் இந்திய அரசுக்கு தமிழினத்தை காட்டிக் கொடுக்கும் வேலையை செய்ய வேண்டாம்.

• தமிழின விடுதலைக்கான பாதை எது?

• தமிழின விடுதலைக்கான பாதை எது?
1948ல் இருந்து தமிழ் மக்கள் பாராளுமன்ற பாதையில்தான் பயணிக்கின்றனர். ஆனால் இதுவரை எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
1948ல் இருந்து இதுவரை பல தடவைகள் இனக்கலவரம் நடந்துள்ளது. இந்த கலவரங்கள் யாவும் இலங்கை அரசின் ஆதரவினூடே நடைபெற்றது.
1948ல் இருந்து தமிழ் மக்கள் நடத்திய அத்தனை அகிம்சைப் போராட்டமும் இலங்கை அரசினால் ஆயுத முனையில் நசுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்தான் தமிழ் இளைஞர்கள் வேறு வழியின்றி ஆயுதப் பாதையை தேர்தெடுத்தார்கள்.
இந்நிலையில் 2009ல் மாபெரும் தமிழின அழிப்புடன் ஆயுதப் போராட்டத்தை இலங்கை அரசு நசுக்கியுள்ளது.
இனி தமிழ் மக்கள் என்ன வழியை தேர்ந்தெடுப்பது?
ஏனெனில் தமிழ் இளைஞர்கள் என்ன காரணத்திற்காக ஆயுதம் ஏந்தினார்களோ அதில் ஒன்றுகூட இன்னும் தீர்க்கப்படவில்லை.
எனவே மீண்டும் போராடுவதா அல்லது அடிமையாக கிடந்து அழிந்து போவதா என்பதே தமிழ் மக்கள் முன் உள்ள கேள்வி.
தமிழ் மக்கள் நீண்ட போராட்ட வரலாற்றின் சொந்தக்காரர்கள். அவர்கள் போராடி மடிந்துபோவர்களேயொழிய ஒருபோதும் அடிமைத்தனத்திற்கு இடம் கொடுக்க மாட்டார்கள்.
சரி. போராடுவதான் என்று முடிவெடுத்துவிட்டால் இனி எந்த வழியில் போராடுவது என்ற மிகப்பெரிய கேள்விக்கு விடை காண வேண்டியுள்ளது.
சிலர் மீண்டும் பாராளுமன்ற பாதையில் சென்று தமிழின விடுதலை பெற முடியும் என்கிறார்கள்.
அப்படியென்றால் 2009ல் இருந்து பாராளுமன்ற பாதையில் சென்று பெற்ற தீர்வு என்னவென்று கேட்டால் இவர்களிடம் பதில் இல்லை.
சரி இனியாவது இந்த வழியில் தீர்வு கிடைக்கும் என்று எந்த நம்பிக்கையில் பயணிப்பது என்று கேட்டாலும் இவர்களிடம் பதில் இல்லை.
அடுத்து இன்னும் சிலர் ராஜதந்திர ரீதியில் பயணித்து விடுதலை பெறலாம் என்கிறார்கள்.
பாராளுமன்ற பாதையாக இருந்தாலும் சரி அல்லது ஆயுதவழிப் பாதையாக இருந்தாலும் சரி அவற்றில் ராஜதந்திரங்கள் உண்டு. எனவே ராஜதந்திரபாதை என்று தனியாக ஒரு பாதை இல்லை. அவ் வழியில் அடையலாம் என்பதும் தவறு.
வேறு சிலர் இந்தியா மூலம் தமிழின விடுதலை பெறலாம் என கூறகிறார்கள். இதில் மூன்று வகையினர் இரக்கிறார்கள்.
முதலாவது வகையினர்- இந்தியா அருகில் இருக்கும் பெரிய நாடு. எனவே எந்தவொரு தீர்வை பெறுவதாக இருந்தாலும் இந்தியாவின் தயவு இன்றி பெறமுடியாது என்று கூறுபவர்கள்.
இரண்டாவது வகையினர் - இந்து தமிழீழம் கேட்டால் தற்போது ஆட்சியில் இருக்கும் மோடி அரசு நிச்சயம் உதவி செய்யும் என்று கூறுபவர்கள்.
மூன்றாவது வகையினர் - இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. எனவே இந்திய அரசு தனது நலனுக்காக தமிழீழத்தை ஆதரிக்கும் என்று கூறுபவர்கள்.
இவர்கள் மூன்று வகையாக பிரிந்து இருந்தாலும் இந்திய அரசை பயன்படுத்த வேண்டும் என்ற ஒரே வகையைச் சேர்ந்தவர்களே.
1983ல் இருந்து இந்தியாவைப் பயன்படுத்த வேண்டும் என நினைத்து இந்தியாவுக்கு பயன்பட்டதே இவர்கள் வரலாறு.
ஈழத் தமிழர் பிரச்சனையைப் பயன்படுத்தி இந்திய அரசு இலங்கையை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.
நடந்து முடிந்த யுத்தத்தில் இலங்கை அரசும் பயன்பெறவில்லை. தமிழ் மக்களும் பயன்பெறவில்லை. இந்திய அரசே அதிகளவு பயன் பெற்றுள்ளது.
1983க்கு முன்னர் எமது கையில் இருந்த,
• பலாலி விமான நிலையம் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது
• காங்கேசன் சீமெந்து தொழிற்சாலை மற்றும் துறைமுகம் கொடுக்கப்பட்டுள்ளது.
• மன்னார் எண்ணெய்வளம் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
• சம்பூரில் மின்சார நிலையம் மற்றும் 650 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டுள்ளது.
• புல்மோட்டை கனிமவளம் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
• திருகோணமலை துறைமுகம் மற்றும் எண்ணெய்குதங்கள் கொடுக்கப்ட்டுள்ளன.
தமிழர்களின் இத்தனை வளங்களையும் பெற்றுக்கொண்ட இந்தியா தமிழ் மக்களுக்கு தந்தது என்ன?
தமிழ் மக்களை மேலும் அடக்கி ஒடுக்குவதற்கு இலங்கை அரசுக்கு இரண்டு யுத்தக்கப்பல்கள், மற்றும் பயிற்சிகள்.
தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு தொடர்ந்து உதவி வரும் இந்திய அரசு தமிழ் மக்களின் விடுதலைக்கு உதவும் என்று தொடர்ந்து நம்பும் முட்டாள்களை என்னவென்று அழைப்பது?
இறுதியாக ஒன்றை மட்டுமே கூறவிரும்புகிறோம்.
நாம் யுத்தத்தை விரும்பவில்லை. ஆனால் இலங்கை அரசு வன்முறை மொழியில் பேசினால் அதே மொழியில் பதில் அளிப்பது எமக்கு தவிர்க்க முடியாததாகிறது.
மாவோ கூறியதுபோல் எம்மீது யுத்தம் திணிக்கப்பட்டால் யுத்தத்தை தவிர்ப்பதற்கான யுத்தத்தை செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம்.
தமிழின விடுதலைக்கான ஆயுதப் பாதை என்பது நாம் விரும்பி தேர்தெடுத்த பாதை அல்ல. மாறாக எம்மீது திணிக்கப்பட்டபாதை. எனவே அப் பாதையில் பயணிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை

தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை
அவர் விதைக்கப்பட்டார்
தமிழரசன்கள் முளைக்கத் தொடங்கிவிட்டார்கள்
ஒரு தமிழரசனை கொன்றுவிட்டு இறுமாப்பாய் இருந்தவர்கள்
ஆயிரமாயிரமாய் தமிழரசன்கள் வருவதை பார்த்து மிரள தொடங்கிவிட்டார்கள்.
இனி தமிரசன் காலம்.
அவர் விரும்பிய தமிழ்தேசியம் மலர தொடங்கிவிட்டது.
அவர் முன்னெடுத்த போராட்டம் வெடிப்பதை இனி யாராலும் தடுத்தவிட முடியாது.
கரை புரண்டு வரும் காட்டாற்று வெள்ளம் இந்திய அரசை தூக்கியெறியப் போகிறது.
தமிழ்நாட்டில் போராட்டம் அதுவும் தமிழரசன் விரும்பிய ஆயுதப் போராட்டம் ஒருபோதும் வராது என்று சிலர் கூறிக்கொண்டு திரிகின்றனர்.
இதுபோலத்தான் யாழ்ப்பாணத்தில் காடு இல்லை. எனவே கொரில்லா போராட்டம் ஒருபோதும் வராது என்று 1983க்கு முன்னர் சிலர் கூறிக்கொண்டிருந்தனர்.
ஆனால் அதே யாழ்ப்பாணத்தில்தான் உலகம் வியந்த ஆயுதப் போராட்டம் அதுவும் கொரில்லா போராட்ட வடிவில் நடைபெற்றதை வரலாறு பதிவு செய்துள்ளது.
தமிழக மக்களுக்கு விடுதலை உணர்வு வந்திடக்கூடாது என்பதற்காகவே ஈழ விடுதலையை இந்திய அரசு நசுக்கிறது.
ஆனால் இவ்வாறு ஈழ தமிழர்களை நசுக்குவதே இறுதியாக தமிழக விடுதலைக்கு வித்திடப்போகிறது
என்பதை இந்திய அரசு விரைவில் கண்டுகொள்ளும்.
ஈழ தமிழர்களின் போராட்டம் தமிழக மக்களின் விடுதலைக்கு வழிவகுக்கப் போகிறது. தமிழக மக்களின் போராட்டம் இந்திய சிறுபான்மை இன மக்களின் விடுதலைக்கு வழி வகுக்கப் போகிறது
.
இந்தியா சுக்கு நூறாய் உடையப் போகிறது. எப்படி ரஸ்சிய சமூக ஏகாதிபத்தியம் உடைந்ததோ அதுபோல் இந்திய ஏகாதிபத்தியமும் உடையப் போகிறது.
ஆசியாவில் இந்த அதிசய வரலாற்றின் சொந்தக்காரர்களாக இருக்கப்போவது ஈழத் தமிழ் மக்களின் போராட்டமே

கறிவேப்பிலை தமிழர்கள்!

•கறிவேப்பிலை தமிழர்கள்!
சம்பந்தர் அய்யா - வணககம் ஆளுநர் அவர்களே!
நாங்க எல்லாம் கறிவேப்பிலை மாதிரி
தேவைக்கு பயன்படுத்திவிட்டு எறிந்து விடுவாங்க
எனக்கு பதவி தந்து பயன்படுத்திய மாதிரி
உமக்கும் இப்ப பதவி தந்து பயன்படுத்த பார்க்கிறாங்க.
தங்கட காரியம் முடிந்ததும் என்னை தூக்கி எறிஞ்சமாதிரி
உம்மையும் விரைவில் தூக்கியெறிவாங்க. கவனம்.
நாங்க எந்தளவு விசுவாசமாக இருந்தாலும் அவங்க ஒரு தமிழனையும் அதிகாரத்தில் அமர விடமாட்டாங்க.
நீங்க என்ன பண்ணினாலும் பரவாயில்லை
ஆனால் பொங்கலுக்கும் தீபாவளிக்கும் நான் அறிக்கை விடும்போது தயவு செய்து அதை குழப்பி போடாதையுங்கோ!

இது போதாது என்று இப்போது 10% கேட்கிறார்கள்.


ஐ.ஏ.எஸ்---------------------------------------------------------70%,
ஐ.பி.எஸ்--------------------------------------------------------.61%
உச்சநீதிமன்ற நீதிபதிகள்-------------------------------- 56%,
மாநிலத்தலைமைசெயலாளர்------------------------ 54%,
ஆளுநர்கள்----------------------------------------------------- 54%,
மாநிலங்களவை உறுப்பினர்கள்----------------------- 41%,
மக்களவை உறுப்பினர்கள்------------------------------- 48%,
மத்தியஅமைச்சர் ------------------------------------------ 36%
இத்தனைக்கும் மக்கள் தொகையில் பார்ப்பணர்கள் வெறும் 3 % மட்டுமே.
(ஆதாரம்: லோக்சந்தா - மராட்டிய ஏடு - 8.8.2016)
இது போதாது என்று இப்போது 10% கேட்கிறார்கள்.
சரி 10% ஜ எடுத்துக்கொண்டு மீதி உள்ளவர்கள் விலகிவிடுங்கள்.
தயாரா?

தமிழாராய்ச்சி மாநாடும் துரோகி துரையப்பாவும்!

•தமிழாராய்ச்சி மாநாடும் துரோகி துரையப்பாவும்!
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டில் இறந்தவர்களின் நினைவு தினம் இன்று ஆகும்.
யாழ்ப்பாணத்தில் 1974ம் ஆண்டு ஜனவரி 10ம் திகதி நடைபெற்ற இறுதி நிகழ்வில் 11 அப்பாவி தமிழர்கள் பொலிசாரினால் கொல்லப்பட்டனர்.
இந்த 11 பேரின் கொலைக்கும் காரணமாக இருந்தவர் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் கைக்கூலியாக செயற்பட்ட மேயர் துரையப்பாவே.
இச் சம்பவம் பல தமிழ் இளைஞர்கள் துரையப்பா மீது ஆத்திரம் கொள்ள வைத்தது. அவரை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று விரும்பினார்கள்.
இந்நிலையில் துரையப்பாவை “துரோகி” என்று முத்திரை குத்தி அவரை இளைஞர்கள் மூலம் கொல்ல வைத்தவர்கள் தமிழர்விடுதலைக் கூட்டணியினரே.
ஆனால் இன்று அவர்களே துரையப்பாவை கொன்றது தவறு என்கிறார்கள்.
அதுமட்டுமல்ல துரையப்பாவை துரோகி என்றும் கூறக்கூடாது என்கிறார்கள்.
சரி பரவாயில்லை, என்னவாவது சொல்லிவிட்டு போங்கள். ஏனென்றால் இது துரோகிகள் தியாகிகளாகவும் தியாகிகள் துரோகிகளாகவும் மாறும் காலம்.
ஆனால் தயவு செய்து 11 பேரையும் துரையப்பா கொன்றது சரி என்றுமட்டும் சொல்லிவிடாதீர்கள். அதை தாங்கும் சக்தி தமிழனுக்கு இல்லை.
குறிப்பு- துரையப்பாவை துரோகி என்று சொல்வது தவறு என்பவர்களை கொஞ்சம் பாருங்கள். இவர்கள் இலங்கை அரசின் இன்றைய ஆதரவாளர்களாக இருப்பார்கள்

•அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

•அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
உழைக்கும் மக்களின் உரிமைநாளாம்
உழவர் மக்களின் பெரு நாளாம்
தமிழ் மக்களின் புத்தாண்டு நாளாம் 
அனைவருக்கும் பொங்கல் மற்றும்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
லண்டனில் மாபெரும் பொங்கல் விழா!
லண்டனில் ஹவுன்சிலோ என்னும் இடத்தில்
அகேனம் அறக்கட்டளையினால் நடத்தப்படும்
பொங்கல் விழாவில் தோழர் மணியரசன்
சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
இயலுமான தமிழர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்மணம் பரப்பும் அகேனம் அறக்கட்டளையின் பணி பாராட்டுக்குரியது.