2009ல் தமிழின அழிப்பை செய்த இலங்கை அரசுக்கு இந்திய அரசு செய்த உதவி அனைவரும் அறிவார்கள்
2009ற்கு பின்னரும் இலங்கை அரசை ஜ.நா வில் காப்பாற்றி வருவதோடு அதற்கு பல ராணுவ உதவிகளையும் இந்திய அரசு வழங்கி வருவதும் அனைவரும் அறிந்த விடயம்.
ஆனால் அண்மையில் காலமான பிறைசூடி அவர்கள் இந்திய அரசின் துணையோடு மரணம் அடையும்வரை போராடியவர் என்று காசிஆனந்தன் அய்யா கூறியுள்ளார்.
இந்திய அரசின் துணையோடு பிறைசூடி அவர்கள் என்ன போராட்டத்தை இறுதிவரை நடத்தினார் என்பதை காசி அனந்தன் அய்யா கூறவேண்டும்.
இவர் இப்படித்தான் பாலு மகேந்திரா மறைந்தபோதும் தானும் பாலு மகெந்திராவும் சயிக்கிளில் சென்று மட்டக்களப்பு கல்லூரிக்கு வெடி குண்டு வீசியதாக கூறியிருந்தார்.
எப்போது எந்த பாடசாலைக்கு குண்டு எறிந்தீர்கள் என்று கேட்டதற்கு காசி ஆனந்தன் அய்யா இதுவரை பதில் அளிக்கவில்லை.
இப்போது மறைந்த பிறைசூடி அவர்களை இந்திய அரசின் துணையுடன் சேர்ந்து செயற்பட்டவர் என்று கூறியதன் மூலம் அவருக்கு களங்கம் விளைவித்துள்ளார்.
எனவே காசி அனந்தன் அய்யா தான் கூறியதற்கு ஆதாரம் காட்ட வேண்டும் இல்லையேல் கூறியதை வாபஸ் பெற வேண்டும்.
அற்ப சலுகைகளுக்காக காசி ஆனந்தன் அய்யா தேவையானால் இந்திய அரசுக்கு வாலாட்டட்டும்.
ஆனால் இந்திய அரசுக்கு தமிழினத்தை காட்டிக் கொடுக்கும் வேலையை செய்ய வேண்டாம்.
No comments:
Post a Comment