•சிவா சின்னபொடியின் “ நினைவழியா வடுக்கள்”
கலை இலக்கியத்தின் பணி சதா சர்வகாலமும் அம்பலப்படுத்தும் வேலையை செய்து கொண்டிருப்பதுதான்.- தோழர் மாவோ சேதுங்
சிவா சின்னபொடி அவர்கள் ஏழதிய “ நினைவழியா வடுக்கள்” நூல் 1960 களில் இடம்பெற்ற சாதீய தீண்டாமைக் கொடுமைகளை நன்கு அம்பலப்படுத்தியுள்ளது.
அவர் அதனை தன் சொந்த அனுபவங்களினூடாக விபரித்துள்ளமை சிறப்பாக அமைந்துள்ளது. பாராட்டுக்கள்.
சிவா சின்னபொடி அவர்களை நான் 1985ல் தஞ்சாவூரில் சந்தித்தேன். அப்போது அவர் புளட் இயக்கத்தில் இருந்தார். ஆனாலும் அவர் புரட்சிகர அமைப்புகளுடன் உறவுகளை கொண்டிருந்தார்.
என்னை கேரளாவுக்கு அழைத்தச் சென்று அங்குள்ள நக்சலைட்டுகளுடன் தொடர்பு ஏற்படுத்தித் தந்த சிவா சின்னபொடி அவர்களின் பங்களிப்பை என்னால் மற்க்க முடியாது.
நானும் சிவா சின்னபொடி அவர்கள் நூலில் குறிப்பிட்ட வடமராட்சிப் பிரதேசத்தை சேர்ந்தவன் என்பதால் அவர் எழுதிய தீண்டாமைக் கொடுமைகளை நன்கு அறிந்திருக்கிறேன்.
ஆனால் அக் கொடுமைகளை சிவா சின்னப்பொடி அனுபவித்திருக்கிறார் என்பதை அவரது இந்த நூலின் மூலமே அறிகிறேன்.
1960 களில் இடம்பெற்ற சாதீய தீண்டாமைக் கொடுமைகளும் அவற்றுக்கு எதிரான போராட்டங்களும் டானியல் போன்றவர்களினால் எற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக 1980 களுக்கு பின்னர் இளைஞர்களின் ஆயதப் போராட்டங்களின் போதும் அதன் பின்னரும் சாதீய மற்றும் தீண்டாமை கொடுமைகள் எந்தளவில் உள்ளன என்பது பற்றி போதிய பதிவுகள் இல்லை.
எனவே சிவா சின்னப்பொடி போன்றவர்கள் அவை குறித்து எழுத வேண்டும் என்பது என் போன்றவர்களின் விரும்பமும் வேண்டுகோளும் ஆகும்.
தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் பெற்றிருக்கும் உரிமைகள் யாவும் போராடிப் பெற்றவை என்பதையும் இனியும் போராட வேண்டும் என்பதையும் இந் நூலில் சிவா சின்னபொடி அவர்கள் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
No comments:
Post a Comment