•அனைவருக்கும் பொங்கல் மற்றும்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழரின் நம்பிக்கை.
இந்த தை யிலாவது சிறையில் வைக்கப்பட்டிருப்பவர்கள் விடுதலை பெறட்டும்.
எழுவர் விடுதலைக்காக மாணவர்கள் போராடப்போவதாக அறிவித்துள்ளனர்.
அதேபோல் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி அகதிகளின் விடுதலைக்கும் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.
இலங்கையில் ஒரு தமிழ் அரசியல் கைதி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
10 வருடங்களாக சிறையில் இருக்கும் அவர் மீதான விசாரணைகள் முடிவுற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில் ராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் சமூகமளிக்காதபடியால் வழக்கு முடியாமல் இழுத்தடிக்கப்படுகிறது.
இன்னொரு தமிழருக்கு 145 வருடங்கள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நல்லாட்சி அரசில் தமிழரைக் கொன்ற எந்தவொரு ராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரியும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு இழைக்கப்படும் இவ் அநீதிகள் குறித்து சுமந்திரன் எந்த அக்கறையும் கொள்ளவில்லை.
அவர் ரணிலுக்கு இழைக்கப்படும் ஜனநாயக மீறல் குறித்து மட்டுமே அக்கறை கொள்கிறார்.
மென்வலு மூலம் தீர்வு பெறப்போவதாக சுமந்திரன் தொடர்ந்து கூறி வருகிறார்.
அவர் ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். இந்தியாவில் இந்தி பேசும் மக்கள் வெறும் 25 % மட்டுமே. ஆனால் அவர்கள் தாங்கள் பெருபான்மை இனம் என்று உணர்கிறார்கள்.
ஆனால் இலங்கையில் சிங்களவர்கள் 80% மாக இருந்தும் அவர்கள் தங்களை சிறுபான்மை இனத்தவராகவே உணர்கிறார்கள்.
இதுவே இந்தியாவில் இந்தி மக்கள் எந்த இனக்கலவரத்திலும் ஈடுபடாமல் இருப்பதும் சிங்கள மக்கள் தொடர்ந்து கலவரத்தில் ஈடுபடுவதற்கும் காரணம் ஆகும்.
தமிழ்நாட்டில் 7 கோடி தமிழர்கள் இருப்பதும் கடந்த காலங்களில் மன்னர்கள் படை எடுத்ததும் மகாவம்சத்தை சிறுவயதில் இருந்து போதிப்பதும் ஒவ்வொரு சிங்களவர்கள் மனதிலும் தமிழர்கள் குறித்த அச்ச உணர்வு இருக்கிறது.
இந்த நிலை இருக்கும்வரை சுமந்திரனால் அவரின் மென்வலுவால் எந்த தீர்வையும் சிங்களவரிடமிருந்து பெற முடியாது. இதை சுமந்திரன் புரிந்துகொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment