கேட்பவன் கேனையன் என்டா
காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்பாங்கள்
அதுபோல் கனடா தமிழர்களுக்கு
காட்டெருமைக் கதை சொன்ன ஜபிசி தலைவர்!
காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்பாங்கள்
அதுபோல் கனடா தமிழர்களுக்கு
காட்டெருமைக் கதை சொன்ன ஜபிசி தலைவர்!
பேர் அன் லவ்லி போட்டால் எருமையும் வெள்ளையாகும் என்று வியாபாரத்திற்காக விளம்பரம் செய்யலாம்.
அதுபோல ஜபிசி ஒரு வியாபார தமிழ் ஊடகம். அதன் விளம்பரத்திற்காக எதுவும் சொல்லாம் என அதன் முதலாளி நினைக்கிறார்.
2009ல் ஜபிசி தன் கையில் இருந்திருந்தால் குறைந்தது பத்தாயிரம் பேரையாவது காப்பாற்றியிருப்பாராம்.
எதிர்காலத்தில் சிஎன்என் போன்று ஒரு ஆங்கில் ஊடகத்தை உருவாக்கி தமிழ் மக்களின் இலக்கை அடைவோம் என்கிறார்.
சிங்கள மக்களுக்கு சந்தேகம் வராமல் நடந்துகொண்டால் இலக்கை அடைய முடியும் என்று சுமந்திரன் ஒரு பக்கத்தில் கூறுகிறார்.
ஆங்கில ஊடகத்தின் மூலம் இலக்கை அடைய முடியும் என லிபரா முன்னாள் முதலாளி இன்னொரு பக்கத்தில் கூறுகிறார்.
இனி அடுத்து லைக்கா முதலாளி என்னத்தை கூறித் தொலைக்கப் போகிறாரோ தெரியவில்லை.
பூனை இளைத்தால் எலி கேமுக்கு கேட்குமாம். அதுபோல தமிழ் மக்களுக்கு ஒரு பலமான கட்சி இல்லை என்றவுடன் முதலாளிமார் எல்லாம் தங்கள் வியாபாரத்திற்கு மக்களை விளம்பரமாக்க பார்க்கிறாங்க.
முதலில் உங்கள் கம்பனியில் வேலை செய்யிற தமிழனுக்கு ஒழுங்கா சம்பளத்தைக் கொடுங்கடா!
No comments:
Post a Comment