•இலங்கை மக்களுக்கு சுதந்திரம்
போராடிப் பெற்றதா? அல்லது
தானாக கிடைத்ததா?
போராடிப் பெற்றதா? அல்லது
தானாக கிடைத்ததா?
இலங்கை மக்களுக்கு ஆங்கிலேயரிடமிருந்து 04.02.1948 யன்று சுதந்திரம் கிடைத்தது.
இந்த சுதந்திரம் போராடிப் பெற்றதில்லை என்றும் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும்போது கொசுறாக இலங்கைக்கும் சுதந்திரத்தை ஆங்கிலேயர்கள் கொடுத்துவிட்டு சென்றதாக பிபிசி யில் பணிபுரிந்த சிவராமகிருஸ்ணன் என்பவர் “ஆதவன்” வானொலியில் கூறியுள்ளார்.
இந்த சிவராமகிருஸ்ணன் உண்மையில் இலங்கை வரலாறு அறியாமல் கூறுகிறாரா அல்லது வேண்டுமென்றே பொய் வரலாற்றை கூறுகின்றாரா என்று தெரியவில்லை.
காந்தியின் அகிம்சை போராட்டத்தால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்று கூறுபவர்கள் இலங்கை மக்கள் போராடி சுதந்திரம் பெற்றனர் என்று கூறுவார்கள் என எதிர்பார்க்க முடியாதுதான்.
சிவராமகிருஸ்ணனுக்கு சில கேள்விகள் கேட்க விரும்புகிறோம்
(1) இலங்கை மக்கள் போராடாமலே ஆங்கிலேயர்கள் சுதந்திரம் கொடுத்தனர் என்றால் அதற்கு முன்னர் போர்த்தக்கேயரும் ஒல்லாந்தரும் எப்படி இலங்கையை விட்டு வெளியேறினார்கள்?
(2) இந்தியாவில் கோவாவை 300 வருடம் ஆண்ட போர்த்தக்கேயர் இலங்கையில் நூறு வருடத்தில் எப்படி வெளியேற்றப்பட்டார்கள்?
(3) போர்த்தக்கேயரும் ஒல்லாந்தரும் ஏன் முழு இலங்கையையும் கைப்பற்ற முடியவில்லை?
(4) ஆங்கிலேயர்கூட இறுதியாகத்தானே கண்டி ராஜ்ஜியத்தை கைப்பற்ற முடிந்தது. அதற்கு என்ன காரணம்?
(5) இந்தியாவில் இருந்து 265 மைல் தொலைவில் உள்ள லட்சதீவுகளையும் 740 மைல் தொலைவில் உள்ள அந்தமான் தீவையும் இந்தியாவுடன் இணைத்த ஆங்கிலேயர்கள் வெறும் 20 மைல் தொலைவில் உள்ள இலங்கையை ஏன் இந்தியாவுடன் இணைக்கவில்லை?
(6) மன்னர் காலத்தில்கூட இலங்கை தமிழக மன்னர்களின் பிடியில் நீண்டகாலம் இருக்கவில்லையே. அது ஏன்?
மேற்கண்ட வினாக்களுக்கு விடை தெரிந்து கொண்டால் இலங்கை மக்களின் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பு- இலங்கை சுதந்திரம் என்பது காலனி நாடாக இருந்தது நவகாலனி நாடாக மாறியுள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இன்னொரு சுதந்திரப் போராட்டத்தை நடத்த வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment