•தமது நிலத்தை கேட்டு
தொடரும் கேப்பாப்புலவு மக்கள் போராட்டம்!
தொடரும் கேப்பாப்புலவு மக்கள் போராட்டம்!
இவர்கள் தமக்கு வேலை தா என்று கேட்கவில்லை
இவர்கள் தமக்கு 1000 ரூபா சம்பளம் தா என்று கேட்கவில்லை
இவர்கள் கேட்பதெல்லாம் தமது நிலத்தை திருப்பி தா என்பதே.
யுத்தம் முடிந்து 10 வருடமாகிவிட்டது. ஆனால் இன்னமும் இவர்களின் நிலம் ஒப்படைக்கப்படவில்லை.
ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவேன் என்று கூறிய சம்பந்தர் அய்யா இவர்களின் நிலத்தை கூட இன்னும் பெற்றுக்கொடுக்கவில்லை.
தமக்கு பங்களா சொகுசு வாகனம் கேட்டு பெற்ற எமது தமிழ் தலைவர்களால் இந்த மக்களின் நிலத்தை கேட்டுப் பெறவில்லை.
பிரதமர் ரணிலுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு கொடுத்ததின் விளைவு கேப்பாப்புலவு மக்கள் வீதியில் படுத்துக்கிடக்கின்றனர். நாயாறில் பிள்ளையார் கோவில் அகற்றப்பட்டு புத்தர் சிலை வருகிறது.
மக்களின் நிலத்தைக்கூட திருப்பி கொடுக்காதவர்கள் தமிழ் மக்களுக்கு சமஷ்டி தரப்போகிறார்கள் என்று எப்படி நம்புவது?
யாராவது சுமந்திரனைக் கண்டால் இதைக் கேட்டு சொல்லுங்களேன்!
No comments:
Post a Comment