முதலில் நீதிமன்றம் விடுதலை செய்யச் சொன்னால் விடுதலை செய்வதாக கூறினார்கள்.
பல ஆண்டுகள் தாமதத்தின் பின்னர் தமிழ்நாடு அரசு விடுதலை செய்யலாம் என நீதிமன்றம் கூறியது.
தமிழ்நாடு அரசு விடுதலை செய்ய முன்வந்தபோது அதற்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு தடுத்தது.
மீண்டும் தமிழ்நாடு அரசு விடுதலை செய்யலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதன்படி தமிழ்நாடு விடுதலைசெய்யும் தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளது.
ஆளுநரோ எந்த முடிவும் எடுக்காமல் வேண்டுமென்றே தாமதம் செய்கிறார்.
ஆளுநர் இவ்வாறு தாமதம் செய்வது நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்று பொருள் ஆகும்.
ஆளுநர் இவ்வாறு தாமதம் செய்வது தமிழ்நாடு அரசை மதிக்கவில்லை என்று பொருள் ஆகும்.
ஆளுநர் இவ்வாறு தாமதம் செய்வது தமிழ்நாட்டு மக்களை மதிக்கவில்லை என்று பொருள் ஆகும்.
ஒரு ஆளுநரே சட்டத்தை, நீதியை, நீதிமன்ற உத்தரவை, எல்லாவற்றுக்கும் மேலாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசை மதிக்கவில்லை என்றால் அப்புறம் சாதாரண மக்கள் மதிக்க வேண்டும் என்று இவர்கள் எப்படி கோர முடியும்?
இந்தியா ஒரு ஜனநாயகநாடு. இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் ஒரு ஆளுநர் தான் எல்லாவற்றுக்கும் மேலானவர் போல் நடந்து கொண்டால் அதன் அர்த்தம்தான் என்ன?
இந்தியாவுக்குள் தமிழ்நாடு இருக்கும்வரை தமிழர்களுக்கு நியாயம் கிடைக்காது. தமிழ்நாடு தனிநாடானால் உரிய மதிப்பு தானாகவே கிடைக்கும்.
ஏழு தமிழர் விடுதலையை இனத்தின் விடுதலையாக மன்னெடுக்க வேண்டும். இனி அதுதான் ஒரே வழி.
No comments:
Post a Comment