•அமீர்கானின் “ரூபரு ரோசினி”யும்
ஏழு தமிழர் விடுதலையும்
ஏழு தமிழர் விடுதலையும்
நடிகர் அமீர்கான் “ரூபரு ரோசினி” என்னும் நிகழ்ச்சியை தயாரித்து ஸ்டார் ரிவி யில் குடியரசு தினத்தன்று ஒளிபரப்பியுள்ளார்.
இந் நிகழ்ச்சியை ஏழு மொழிகளில் வெளியிட்டுள்ளார். அதில் தமிழ் மொழியும் ஒன்று.
டில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்ஏ கொலை, பாக்கிஸ்தானில் இருந்து வந்து மும்பையில் நடந்தப்பட்ட கொலைகள் மற்றும் மத்திய பிரதேசத்தில் நடந்த கேரள கன்னியாஸ்திரியின் கொலை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நிகழ்ச்சி இது.
இந்திராகாந்தி கொலையை அடுத்து இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான அப்பாவி சீக்கிய மக்கள் கொலை செய்யப்பட்டனர். இதில் சம்பந்தப்பட்ட டில்லி காங்கிரஸ் எம்.எல்.ஏ சீக்கிய இளைஞர் இருவரால் கொல்லப்படுகிறார்.
அதில் ஒருவர் 18 வருட சிறை வாழ்க்கையின் பின் கொலை செய்யப்பட்ட எம்.எல்.ஏவின் மகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்திய அரசால் விடுதலை செய்யப்படுகிறார்.
அதேபோன்று மத்தியபிரதேசத்தில் கொல்லப்பட்ட கன்னியாஸ்திரியின் சகோதரி கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஆயள்தண்டனையை அனுபவித்த கொலைகாரன் இந்திய அரசால் விடுதலை செய்யப்படுகின்றார்.
“வன்முறை தீர்வு இல்லை” என்று போதிப்பதற்காக இவ் நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டிருந்தாலும் இதில் சில கேள்விகள் எமக்கு எழுகின்றன.
(1) ராஜீவ் காந்தி கொலையை ஏன் அமீர்கான் இதில் சேர்க்கவில்லை?
(2) ராஜீவ் குடும்பத்தினர் ஏழு தமிழரை விடுதலை செய்யலாம் என்று கூறிய பின்பும் இந்திய அரசு ஏன் விடுதலை செய்ய மறுக்கிறது?
(3) உச்சநீதிமன்றமும் தமிழக அரசும் ஏழு தமிழரை விடுதலை செய்யலாம் என்று கூறிய பின்பும் ஏழு தமிழர் விடுதலை செய்யப்படாமல் வைத்திருக்கும் அநீதியை சொல்ல வேண்டி வருமே என்பதாலா அமீர்கான் இதை சேர்க்கவில்லை?
(4) சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யும் விடயத்தில் கூட இந்திய அரசு மற்றவர்களுக்கு ஒரு நியாயமும் ஏழு தமிழருக்கு இன்னொரு நியாயமும் கடைப்பிடிக்கிறது?
No comments:
Post a Comment