Thursday, February 28, 2019

•திருச்சி சிறப்பு முகாமில் ஈழ அகதி தற்கொலை முயற்சி!

•திருச்சி சிறப்பு முகாமில் ஈழ அகதி தற்கொலை முயற்சி!
இலங்கையின் 71 வது சுதந்திரம் நேற்று இலங்கையில் கோலாகமாக கொண்டாடப்பட்டது.
ஆனால் அதேவேளை திருச்சி சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஈழ அகதிகள் தமது விடுதலை கோரி போராடியுள்னர்.
அப்போது ஒரு அகதி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் கொடுமை என்னவென்றால் முகாமிற்கு பொறுப்பான அதிகாரி இவர்களை வந்து பார்க்கவுமில்லை. இவர்களின் கோரிக்கையை கேட்கவும்கூட இல்லை.
இலங்கையில் காணாமல் போனவர்களின் உறவுகள் 700 நாட்களாக போராடுகின்றனர்.
இலங்கையில் சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காகவும்கூட குரல் எழுப்பப்படுகிறது.
ஆனால் இந்தியாவில் சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருப்பவர்களின் விடுதலைக்கு இலங்கையிலும் யாரும் குரல் கொடுப்பதில்லை. இந்தியாவிலும் குரல் எழுப்புவதில்லை.
தமிழ்தேசிய ஊடகம் என்று பீற்றித்திரியும் ஐபிசி கூட இவர்கள் பற்றிய செய்திகளை பிரசுரிப்பதில்லை.
இவர்கள் செய்த தவறு ஈழத் தமிழராக பிறந்தது மட்டுமல்ல அகதியாக தமிழ்நாட்டை நம்பி சென்றதே.
இவர்கள் தமிழ்நாட்டை தவிர வேறு எந்த நாட்டிற்கு சென்றிருந்தாலும் நிச்சயம் சட்டரீதியாக நடத்தப்பட்டிருப்பார்கள். இப்படி சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.
“யாரும் ஏன் என்று கேட்க நாதியற்ற அகதி நாய்கள்” என்று தமிழக பொலிஸ் அதிகாரிகள் இவர்களை பாhத்து ஏசுவார்கள். அது உண்மைதான். யாராவது ஒருவர் இருந்திருந்தால்கூட இவர்களுக்கு இந்த நிலை இருக்காதே!
ஈழ அகதி தற்கொலைக்கு முயன்ற வீடியோ கீழே தரப்பட்டுள்ளது.

தோழர் சண் அவர்களை நினைவில் கொள்வோம்!

தோழர் சண் அவர்களை நினைவில் கொள்வோம்!
08.02.2019 யன்று தோழர் சண் அவர்களின் 26 வது நினைவு தினம் ஆகும்.
•நாம் ஏன் தோழர் சண் அவர்களை நினைவு கூர வேண்டும்?
அவர் ஒரு தமிழர் என்பதாலா நினைவு கூர வேண்டும்?
இல்லை. அப்படியென்றால்
அவர் ஒரு புரட்சியாளர் என்பதால் நினைவு கூர வேண்டுமா?
இல்லை. அப்படியென்றால்
தமிழர் ,சிங்களவர், முஸ்லிம்கள் என மூவின மக்களாலும் மதிக்கப்பட்ட ஒரு தமிழ் தலைவர் என்பதாலா நினைவு கூர வேண்டும்?
இல்லை. அப்படியென்றால்
மாசேதுங் உட்பட சர்வதேச புரட்சியாளர்களால் மதிக்கப்பட்ட ஒரு இலங்கை தலைவர் என்பதாலா நினைவு கூர வேண்டும்?
இல்லை. அப்படியென்றால்
எந்தவித மந்திரிப்பதவி, எம்.பி பதவிகளுக்கும் சோரம் போகாமல் இறுதிவரை கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்ததாலா?
இல்லை. இல்லை.
அப்படியென்றால் நினைவு கூர வேண்டிய அளவுக்கு அவர் செய்த சாதனைதான் என்ன?
இலங்கையில் மாவோயிசத்தை அறிமுகப்படுத்தி வளர்த்தமைக்காக அவரை நினைவுகூரத்தான் வேண்டும்.
இலங்கையில் பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதம் ஏந்திய மக்கள்யுத்தப்பாதையை முன்வைத்தமைக்காக நினைவு கூர வேண்டும்.
“அடிக்கு அடியே” சாதீய கொடுமையில் இருந்து விடுபட வழி வகுக்கும் என கூறி தீண்டாமைக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை அளித்தமைக்காக நினைவு கூர வேண்டும்.
இலங்கையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த ஒரு கம்யுனிஸ்ட் தலைவர் என்பது மட்டுமன்றி இனப்பிரச்சனைக்கு தீர்வாக பிரதேச சுயாட்சியை முன்வைத்தவர் என்பதால் நினைவு கூர வேண்டும்.
மேலும் அவர் பற்றிய சில குறிப்புகள்.
•வறிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் நன்கு படித்து பட்டதாரியானவர். தமிழ் சிங்களம் ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் சிறந்த புலமை மிக்கவர்.
•அவர் விரும்பியிருந்தால் ஒரு நல்ல உத்தியோகம் பெற்று வசதியான வாழ்வு வாழ்ந்திருக்கலாம்
•அல்லது பின்னரும்கூட பல கம்யுனிஸ் தலைவர்கள் தேர்தல் பாதையில் சென்று அமைச்சு பதவிகள் பெற்றதுபோல் இவரும் பெற்றிருக்கலாம்.
•ஆனால் அவர் இறுதிவரை உறுதியான புரட்சியாளராக வாழ்ந்து மறைந்தார்.
•அவரது திருமணம்கூட கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஒரு விதவையையே திருமணம் செய்;தார்.
•சீனாவின் உதவி கிடைக்காமல் போய்விடும் என்று தெரிந்தும் சீனாவின் தவறுகளை விமர்சித்தவர்.
•மாசேதுங் உயிருடன் இருக்கும்போதே சீனா இலங்கை அரசுக்கு செய்த ஆயுத உதவிகளை கண்டித்தவர். சீனா முதலாளித்தவ பாதைக்கு திரும்புகிறது என்று கூறி அதனுடனான உறவுகளை கைவிட்டவர்.
•தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியபோது இலங்கை அரசு அவர்களை “பயங்கரவாதிகள்” என்று அழைத்தது. அமிர்தலிங்கம் உட்பட தமிழர்விடுதலைக்கூட்டணியினர் “பொடியன்கள்” என்று அழைத்தனர். ஆனால் தோழர் சண்தான் முதன் முதலில் அவர்களை “போராளிகள்” என்று அழைத்தார். (அதுவும் சிறிமாவோ பண்டாரநாயக்கா, கொல்வின் ஆர்டி சில்வா, என்எம் பெரராரோ பீட்டர் கெனமன் அமிர்தலிங்கம் இருந்த மேடையில் கொழும்பில் சிங்கள மக்கள் மத்தியில் தைரியமாக கூறினார்.)
•தமிழ் சிங்கள மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்காக பல தொழிற்சங்கங்களை நிறுவி அவர்களுக்காக இலவசமாக வழக்குகள் பேசி வென்று கொடுத்தவர்.
(1)ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்கள் இந்திய ஆதரவுடன் அடுத்த பொங்கலுக்கு தமிழீழம் மலரும் என்று கூறியபோது “இந்தியாவை நம்ப வேண்டாம். இந்தியா ஒரு போதும் தமிழீழம் பெற்று தராது. மாறாக போராளிகளை அழிக்கும்” என்று கூறியவர்.
(2)இலங்கையில் சமசமாஜக்கட்சி டிராட்சியவாதிகளுக்கும் , தேர்தல் பாதையில் பயணிக்கும் திரிபுவாத கம்யுனிஸ்டுகளுக்கும் தோழர் சண் கொடுத்த தத்துவார்த்த அடி இன்னும் அவர்களால் எழும்ப முடியாத அடியாக இருக்கிறது.
(3)இலங்கையில் இனி யார் புரட்சியை செய்தாலும் அவர் முன்னெடுத்த புதிய ஜனநாயகப்புரட்சியில் இருந்தே தொடர வேண்டும்.. தோழர் சண் அவர்களை மறுத்து விட்டு யாராலும் புரட்சி செய்ய முடியாது.
ஆம். தோழர் சண் இலங்கையில் ஒரு மாபெரும் தலைவர் மட்டுமல்ல மகத்தான தலைவரும்கூட.
அவரை நினைவு கூர்வது எமது கடமையாகும்.
குறிப்பு - இத்தகைய மகத்தான ஒரு தலைவரின் இறுதி நாட்களில் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தமை என்னால் மறக்க முடியாதது. அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரது “ ஒரு கம்யுனிச போராளியின் அரசியல் நினைவுகள்” நூலை 1990ல் சென்னையில் அச்சடித்து வெளியிட்டிருந்தேன்.

செய்தி – வேலூர் சிறையில் முருகன் நாலாவது நாளாக உண்ணாவிரதம்.

செய்தி – வேலூர் சிறையில் முருகன் நாலாவது நாளாக உண்ணாவிரதம்.
நீயும் இந்து நானும் இந்து என்டாங்களே
அப்படியென்றால் முருகனும் இந்து தானே
ஏன் முருகனுக்காக இந்த இந்துக்கள் இரங்கவில்லை?
தமிழக ஆளுநரும் இந்து பிரதமர் மோடியும் இந்து
இவர்கள் இந்துக்களுக்காக பாடுபடுவது உண்மை என்றால்
இந்து சாமியாராகவே மாறியிருக்கும் முருகனுக்கு ஏன் இரங்கவில்லை?
முருகன் மட்டுமல்ல அவரது மனைவி நளினி மற்றும் மகள் கூட இந்துதான்.
ஆனால் லண்டனில் இருக்கும் அவர் மகள் தாய் தந்தையரை பார்க்ககூட விசா வழங்க இந்த இந்து அரசு ஏன் மறுக்கிறது?
இந்தியாவில் சிறையில் பிறந்த முருகன் மகளுக்கு சட்டப்படி இந்திய குடியுரிமை கோர முடியும். ஆனால் இந்த இந்து அரசு மனிதாபிமானமாய்கூட விசா வழங்க மறுக்கிறதே?
முருகன் கோருவது கருணை அல்ல. சட்டப்படியான உரிமை. அவர் ஆளநரிடம் கோருவது தமிழக அரசின் மனுமீதான முடிவை தரும்படியே!
தமிழக அரசு அனுப்பிய மனுவின்படி சேலம் பஸ் எரிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்த அளுநர் அதே தமிழக அரசு அனுப்பிய இந்த ஏழு தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்காமல் வேண்டுமென்றே தாமதம் செய்கிறார்.
இதில் இன்னும் வேடிக்கை என்னவெனில் இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருக்கும் பொதுபலசேனா புத்த பிக்குவை விடுதலை செய்யும்படி குரல் கொடுத்துள்ள இலங்கை இந்து மகாசபையானது இந்த முருகனை விடுதலை செய்யுமாறு குரல் கொடுக்கவில்லை.
இப்போது புரிகிறதா?
நீ இந்துவானாலும் தமிழன் என்றால் ஒரு மயிரும் கிடைக்காது.
முருகன் இனிமேலாவது இதனை புரிந்து கொள்ளட்டும்.

•மன்னிக்கவும் சுமந்திரனை வாழ்த்த முடியவில்லை

•மன்னிக்கவும்
சுமந்திரனை வாழ்த்த முடியவில்லை
சில வருடங்டகளுக்கு முன்னர் லண்டனில் சுமந்திரனின் கூட்டம் ஒன்று இடம் பெற்றது. அக் கூட்டம் 5 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 5 மணிக்கு இருவர் மட்டுமே வந்திருந்தனர். ஒருவர் உரையாற்றும் சுமந்திரன். இன்னொருவர் உரையை கேட்க சென்ற நான். அப்போது அவர் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதை கண்டு கொண்டேன். இது அவருடைய வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
அடுத்து எம்.பி மாருக்கு ஒதுக்கிய சொகுசு வாகனத்தை பெற்றுக்கொள்ளாத ஒரு சிலரில் அவரும் ஒருவர் என்பதை அறிந்து கொண்டேன். அவர் விரும்பியிருந்தால் அந்த சொகுசு வாகனத்தை பெற்று 5 கோடி ரூபா சம்பாதித்திருக்க முடியும்.
அதைவிட அவர் அரசியலுக்கு வர முன்னர் தனது வழக்கறிஞர் தொழில் மூலம் பல லட்சம் ரூபாய்க்களை சம்பாதித்துக்கொண்டிருந்தார். உண்மையில் அவர் தன் வருமானத்தை இழந்தே அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.
பல தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மீது லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனால் சுமந்திரன் மீது இதுவரை யாரும் இத் தகைய குற்றச்சாட்டுகளை சுமத்தவில்லை.
முக்கியமாக மற்ற அரசியல்வாதிகள் போல் கொழும்பில் ஒன்றும் யாழ்ப்பாணத்தில் இன்னொன்றும் அவர் பேசுவதில்லை. தனது கருத்துகளை தைரியமாக வெளிப்படையாக கூறி வருகிறார்.
இத்தகைய சிறப்பு அம்சங்களை அவர் கொண்டிருந்தாலும் அவரை மனதார பாராட்ட முடியவில்லை. ஏனெனில் அவர் தனது திறமை எல்லாவற்றையும் தமிழ் இனத்திற்கு எதிராகவே பயன்படுத்தி வருகிறார்.
ஒருசிலர் அவரை பாராட்டி வாழ்த்துகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் அவரிடம் உதவி பெற்றவர்கள் அல்லது உதவி கிடைக்கும் என எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்கள்.
அவர்,
நடந்தது இனப் படுகொலை அல்ல போர்க்குற்றம் மட்டுமே என்றது
சர்வதேச விசாரணை தேவையில்லை. உள்ளக விசாரணை போதும் என்றது
உள்ளக விசாரணைக்கு இலங்கை அரசு கேட்காமலே கால அவகாசம் பெற்று கொடுத்தது
போன்றவை தமிழ் இனத்திற்கு இழைத்த பாரிய துரோகமாகும்.
அதுவும் ரணில் அரசுக்கு ஆபத்து எற்பட்டவேளை அவர் காட்டிய அக்கறையையும் அவசரத்தையும் தமிழ் மக்களின் பிரச்சனைகள் மீது காட்டாதது ஏமாற்றம் அளிக்கிறது.
அவர் இவ்வாறு நடந்து கொள்கின்றமைக்கு முக்கிய காரணம்
(1)தேர்தல் பாதை மூலம் தீர்வு பெற முடியும் என நம்புகிறார்.
(2)பேச்சுவார்த்தை மூலம் தீர்வு பெற முடியும் என நம்புகிறார்.
(3)இந்திய அரசு தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுத்தரும் என நம்புகிறார்.
எனவே சுமந்திரனாலோ அல்லது சுமந்திரனின் இத்தகைய நம்பிக்கைகளை கொண்டிருப்பவர்களாலோ ஒருபோதும் தீர்வு பெற முடியாது என்பதற்கான மாற்றுக் கருத்தை முன்வைக்க வேண்டும்.
எனவே
(1)தேர்தல் பாதை மூலம் தீர்வு பெற முடியாது. ஆயதம் எந்திய மக்கள் யுத்தப்பாதை மூலமே தீர்வு பெற முடியும்.
(2)பேச்சுவாhத்தை மூலம் தீர்வு பெற முடியாது. மாறாக போராட்டத்தின் மூலமே தீர்வு பெற முடியும்.
(3) இந்திய அரசை இனியும் நம்பி ஏமாறக்கூடாது.
போன்ற மாற்றுக் கருத்துக்களை முன்வைத்து தமிழ் மக்களை அணி திரட்டுவதன் மூலமே சுமந்திரனையோ அல்லது சுமந்திரன்களையோ அகற்ற முடியும்.
ஏனெனில் சுமந்திரன்களை அகற்ற வேண்டுமெனில் பிரச்சனை சுமந்திரன் அல்ல அவர் நம்பும் கருத்துகளே என்பதை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கடந்த எட்டு நாட்களாக முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்

கடந்த எட்டு நாட்களாக முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்
இப்போது முருகனுடன் நளினியும் இரண்டு நாட்களாக உண்ணாவிரதத்தை தொடர்கிறார்
தாய் தந்தையரின் நிலை தெரியாமல் இவர்களின் மகள் லண்டனில் கவலையில் உள்ளார்.
அதேவேளை அற்புதம்மாள் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் ஏழு தமிழர் விடுதலைக்கு ஆதரவு கேட்டு மக்களை சந்தித்து வருகிறார்.
ஆனால் முடிவு தெரிவிக்க வேண்டிய ஆளுநரோ எவ்வித அக்கறையும் இன்றி மௌனமாக இருக்கிறார்.
கிடுகு பொட்டுக்களால் பெண்கள் குளிப்பதை பார்வையிடும் ஆளுநரின் கண்களுக்கு இவர்கள் உண்ணாவிரதம் இருப்பது தெரியவில்லை.
பேராசிரியை நிர்மலாவின் குரல் கேட்கும் ஆளுநரின் காதுகளுக்கு அற்புதம்மாளின் குரல் கேட்பதில்லை.
ஆளுநரோ ,
உச்ச நீதிமன்றத்தை மதிக்கவில்லை
தமிழக அரசின் மனுவை மதிக்கவில்லை
மொத்தத்தில் தமிழக மக்களையே மதிக்கவில்லை.
ஆனாலும் இதை தட்டிக்கேட்க வேண்டிய கட்சிகளோ தேர்தல் கூட்டில்தான் கவனம் செலுத்துகின்றன.
தமிழக அரசோ ஆளுநருக்கும் பிரதமருக்கும் குனிந்து கிடப்பதையே கடமையாக கருதுகின்றன.
தேர்தலுக்காக விடுதலையை தாமதம் செய்வதாக சிலர் சமாளிக்க முயலுகின்றனகர்.
குறித்து வைத்துக்கொள்ளுங்கள். மக்கள் இந்திய அரசுக்கு எதிராக கிளர்ந்து எழாதவரை இவர்களின் விடுதலை ஒருபோதும் நிகழாது.

இவர்கள் சொல்லுகிறார்கள்

இவர்கள் சொல்லுகிறார்கள்
இந்த சிறுவன் பயங்கரவாதியின் மகன் என்பதால் இவனும் பயங்கரவாதியாம்
ஆனாலும் இவனை இலங்கை ராணுவம் கொல்லவில்லையாம்.
நல்லவேளை இந்த சிறுவன் தன்னைத்தானே சுட்டு இறந்துவிட்டதாக இன்னும் இவர்கள் கூறவில்லை.
ராணுவத்தின் பிடியில் இருந்த போட்டோ பற்றி கேட்டால்
அது பொய் போட்டோவாம். போட்டோசொப்பில் தயாரிக்கப்பட்டதாம்.
இவனுகள் இன்னும் என்னத்தையெல்லாம் சொல்லி தொலைக்கப் போறாங்களோ?
தமிழனைக் கொன்றுவிட்டு தமிழ்நாட்டிலே வந்து தமிழனுக்கு இந்தக் கதை சொல்கிறான்கள் என்றால்
ஒன்றில் இவனுகள் தைரியசாலியாக இருக்க வேண்டும்
இல்லையேல் தமிழன் இளிச்சவாயனாக இருக்க வேண்டும்!

தமிழ் சமூகத்தின் பொருட்டு கொஞ்சம் தூசி துடைக்கப்பட வேண்டியுள்ளது - இந்து ராம்

செய்தி – தமிழ் சமூகத்தின் பொருட்டு கொஞ்சம் தூசி துடைக்கப்பட வேண்டியுள்ளது - இந்து ராம்
அடேய் பார்ப்பான் ராம்
படிந்திருப்பது தூசி இல்லையடா
40 ஆயிரம் தமிழர் சிந்திய குருதியடா
தமிழர் ரத்தம் உனக்கு வெறும் தூசியாக தெரியுதாடா?
நடந்தது இனப்படுகொலை அதற்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது தமிழக சட்டசபை
அதன் அருகில் பத்திரிகை நடத்தும் நீ கூறுகிறாய் “தூசி படிந்திருக்கிறது” என்று
பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விடு பார்ப்பானை அடி என்று பெரியார் ஏன் கூறினார் என்று இப்போது எமக்கு புரியுதடா
உண்மைதான். பாம்பைவிட கொடிய விஷமடா நீ!
நீதான்டா தமிழர் துடைத்தெறியவேண்டிய தூசி