Thursday, February 28, 2019

•மன்னிக்கவும் சுமந்திரனை வாழ்த்த முடியவில்லை

•மன்னிக்கவும்
சுமந்திரனை வாழ்த்த முடியவில்லை
சில வருடங்டகளுக்கு முன்னர் லண்டனில் சுமந்திரனின் கூட்டம் ஒன்று இடம் பெற்றது. அக் கூட்டம் 5 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 5 மணிக்கு இருவர் மட்டுமே வந்திருந்தனர். ஒருவர் உரையாற்றும் சுமந்திரன். இன்னொருவர் உரையை கேட்க சென்ற நான். அப்போது அவர் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதை கண்டு கொண்டேன். இது அவருடைய வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
அடுத்து எம்.பி மாருக்கு ஒதுக்கிய சொகுசு வாகனத்தை பெற்றுக்கொள்ளாத ஒரு சிலரில் அவரும் ஒருவர் என்பதை அறிந்து கொண்டேன். அவர் விரும்பியிருந்தால் அந்த சொகுசு வாகனத்தை பெற்று 5 கோடி ரூபா சம்பாதித்திருக்க முடியும்.
அதைவிட அவர் அரசியலுக்கு வர முன்னர் தனது வழக்கறிஞர் தொழில் மூலம் பல லட்சம் ரூபாய்க்களை சம்பாதித்துக்கொண்டிருந்தார். உண்மையில் அவர் தன் வருமானத்தை இழந்தே அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.
பல தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மீது லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனால் சுமந்திரன் மீது இதுவரை யாரும் இத் தகைய குற்றச்சாட்டுகளை சுமத்தவில்லை.
முக்கியமாக மற்ற அரசியல்வாதிகள் போல் கொழும்பில் ஒன்றும் யாழ்ப்பாணத்தில் இன்னொன்றும் அவர் பேசுவதில்லை. தனது கருத்துகளை தைரியமாக வெளிப்படையாக கூறி வருகிறார்.
இத்தகைய சிறப்பு அம்சங்களை அவர் கொண்டிருந்தாலும் அவரை மனதார பாராட்ட முடியவில்லை. ஏனெனில் அவர் தனது திறமை எல்லாவற்றையும் தமிழ் இனத்திற்கு எதிராகவே பயன்படுத்தி வருகிறார்.
ஒருசிலர் அவரை பாராட்டி வாழ்த்துகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் அவரிடம் உதவி பெற்றவர்கள் அல்லது உதவி கிடைக்கும் என எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்கள்.
அவர்,
நடந்தது இனப் படுகொலை அல்ல போர்க்குற்றம் மட்டுமே என்றது
சர்வதேச விசாரணை தேவையில்லை. உள்ளக விசாரணை போதும் என்றது
உள்ளக விசாரணைக்கு இலங்கை அரசு கேட்காமலே கால அவகாசம் பெற்று கொடுத்தது
போன்றவை தமிழ் இனத்திற்கு இழைத்த பாரிய துரோகமாகும்.
அதுவும் ரணில் அரசுக்கு ஆபத்து எற்பட்டவேளை அவர் காட்டிய அக்கறையையும் அவசரத்தையும் தமிழ் மக்களின் பிரச்சனைகள் மீது காட்டாதது ஏமாற்றம் அளிக்கிறது.
அவர் இவ்வாறு நடந்து கொள்கின்றமைக்கு முக்கிய காரணம்
(1)தேர்தல் பாதை மூலம் தீர்வு பெற முடியும் என நம்புகிறார்.
(2)பேச்சுவார்த்தை மூலம் தீர்வு பெற முடியும் என நம்புகிறார்.
(3)இந்திய அரசு தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுத்தரும் என நம்புகிறார்.
எனவே சுமந்திரனாலோ அல்லது சுமந்திரனின் இத்தகைய நம்பிக்கைகளை கொண்டிருப்பவர்களாலோ ஒருபோதும் தீர்வு பெற முடியாது என்பதற்கான மாற்றுக் கருத்தை முன்வைக்க வேண்டும்.
எனவே
(1)தேர்தல் பாதை மூலம் தீர்வு பெற முடியாது. ஆயதம் எந்திய மக்கள் யுத்தப்பாதை மூலமே தீர்வு பெற முடியும்.
(2)பேச்சுவாhத்தை மூலம் தீர்வு பெற முடியாது. மாறாக போராட்டத்தின் மூலமே தீர்வு பெற முடியும்.
(3) இந்திய அரசை இனியும் நம்பி ஏமாறக்கூடாது.
போன்ற மாற்றுக் கருத்துக்களை முன்வைத்து தமிழ் மக்களை அணி திரட்டுவதன் மூலமே சுமந்திரனையோ அல்லது சுமந்திரன்களையோ அகற்ற முடியும்.
ஏனெனில் சுமந்திரன்களை அகற்ற வேண்டுமெனில் பிரச்சனை சுமந்திரன் அல்ல அவர் நம்பும் கருத்துகளே என்பதை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment