•தேர்தல் பாதை திருடர் பாதை!
திராவிட கட்சிகளுடன் இனி கூட்டு வைக்க மாட்டேன் என்ற மருத்துவர் ராமதாஸ் கொஞ்சம்கூட வெட்கமின்றி அதிமுக வுடன் தேர்தல்கூட்டு வைத்துள்ளார்.
காங்கிரசுடன் இனி ஒருபோதும் கூட்டு வைக்க மாட்டேன் என்று கடந்த தேர்தலின்போது கூறிய ஸ்டாலின் இப்போது அதே காங்கிரசுடன் கூட்டு வைத்து அவர்களுக்கு 10 சீட்டும் கொடுத்துள்ளார்.
தேர்தலுக்காக இவ்வாறு பல சந்தர்ப்பவாத கூட்டணிகள் உருவாகின்றன. எப்படியாவது பதவியை பெற்றுவிட வேண்டுமென்பதற்காக சமரசங்களை மேற்கொள்கிறார்கள்.
அதனால்தான் இவர்களை திருடர்கள் என்றும் இவர்கள் செல்லும் தேர்தல் பாதையை திருடர் பாதை என்றும் புரட்சியாளர்களால் அழைக்கப்படுகிறது.
இதில் வேடிக்கை என்னவெனில் தங்கள் கூட்டணி வென்றால் உடனடியாக ஏழு தமிழரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று பாமக வைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
இப்போது அதிமுக பாஜக ஆட்சிதானே நடைபெறுகிறது. இப்பவே விடுதலை செய்யும்படி பாமக கேட்கலாம்தானே? எதற்கு தேர்தலில் வெல்லும்வரை காத்திருக்க வேண்டும்?
இன்னுமா இந்த திருடர்களை மக்கள் நம்புகிறார்கள்?
No comments:
Post a Comment