சௌந்தர்யா விசாகன் தம்பதிகளுக்கு திருமண வாழ்த்துக்கள்.
ரஜனியின் அரசியல் குறித்து எமக்கு பல்வேறு விமர்சனம் இருந்தாலும் அவர் தனது மகள் சௌந்தர்யாவுக்கு மறுமணம் செய்து வைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது மட்டுமல்ல வரவேற்கத்தக்கது.
அதுவும் ஒரு மகனை கொண்டுள்ள பெண்ணிற்கு வெளிப்படையாக விமர்சையாக மறுமணம் செய்துவைப்பது நிச்சயம் சமூகத்தில் நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.
முன்னர் கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏற வேண்டும் என்ற நிலஇருந்தது. பின்னர் கணவன் இறந்தால் வாழா வெட்டியாக இருக்க வேண்டிய நிலை இருந்தது.
இப்போது கணவன் இறந்தால் பெண் விதவையாகவே இருக்க வேண்டிய நிலை இல்லை. அதுபோல் விவாகரத்து பெற்ற பெண்களும் வாழா வெட்டியாகவே இருக்க வேண்டியதில்லை. அவர்களுக்கு மறுமணம் நடக்கிறது.
ஆனால் இது ஓரளவு வசதி படைத்த சமூகத்தில்தான் நடக்க முடிகிறது. சாதாரண மக்கள் மத்தியிலும் இந்த நிலை வரவேண்டும்.
அண்மையில் கௌசல்யா என்ற பெண் மறுமணம் செய்திருந்தார். அவரது மறுமணத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் விமர்சனங்கள் வந்திருந்தன.
அவரை விமர்சித்த பலர் ரஜனியின் மகள் மறுமணத்தை விமர்சிக்கவில்லை.
கௌசல்யா வசதியான வீட்டு பெண்ணாக இல்லாதது மட்டுமல்ல அவர் பெரியாரியத்தை பின்பற்றுவதாக கூறியதும் அவர் மீதான விமர்சனத்திற்கு காரணமாக இருக்கலாம்.
ஆனால் இப்படியான மறுமணங்களை ஆதரித்து வாழ்த்துவதன் மூலமே சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment