காஷ்மீர் - 45 இந்திய ராணுவத்தினர் பலி
தமிழர்கள் கவனிக்க வேண்டியது என்ன?
தமிழர்கள் கவனிக்க வேண்டியது என்ன?
காஸ்மீரில் பாதி இந்தியா வசம் உள்ளது. மீதி பாகிஸ்தான் வசம் உள்ளது. காஸ்மீர் மக்கள் தமக்கு சுதந்திர காஸ்மீர் வேண்டும் எனக் கோருகிறார்கள்.
இது இன்று நேற்று தொடங்கிய பிரச்சனை அல்ல. மாறாக 70 ஆண்டு காலப் பிரச்சனை.
காஸ்மீரில் மக்கள் கருத்தறிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என இந்தியாவின் நேரு ஜ.நா வில் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இன்னமும் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
காஸ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும்போது பல சலுகைகளும் வாக்குறுதிகளும் வழங்கப்பட்டன. வாக்குறுதிகள் நிறைவேற்றாதது மட்டுமன்றி இப்போது அளிக்கப்பட்ட சலுகைகளும் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகின்றன.
இன்று காஸ்மீரில் பத்து காஸ்மீரிக்கு ஒரு ராணுவம் என்ற விகிதத்தில் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. கடந்த எட்டு மாதமாக மத்திய அரசின் ஆளுநர் ஆட்சியே நடைபெறுகிறது.
கடந்த வாரம்கூட தகவல் கிடைத்தாக கூறி நாலு காஸ்மீர் இளைஞர்கள் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஒரு வாரமாக மூடப்பட்ட வீதியில் அதுவும் 2500 ராணுவத்தினர் வரும் வீதியில் ஒரு தற்கொலைதாரி 350 கிலோ வெடி மருந்துடன் வாகனத்தில் எப்படி வர முடிந்தது?
இத்தனை நாளும் அமைதியாக இருந்த தீவரவாதிகள் தேர்தல் வரும் சமயத்தில் மோடிக்கு ஆதரவான ஒரு பாரிய தாக்குதலை எப்படி நிகழ்த்தினார்கள்?
மோடியின் தேர்தல் வெற்றிக்காக 45 ராணுவ வீரர்கள் பலி கொடுக்கப்பட்டார்களோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
ஏனெனில் மோடியின் கடந்த கால வரலாற்றை பார்க்கும்போது அவர் தனது வெற்றிக்காக எந்த படுகொலையையும் செய்ய தயங்காதவர் என்பதை அறிய முடிகிறது.
கடந்த நவம்பர் மாதம் 3 வயது காஸ்மீர் குழந்தை ஒன்று இந்திய ராணுவத்தின் பெல்லட் குண்டால் சுடப்பட்டது. பெல்லட் குண்டுகள் பாவனையை ஜ.நா தடை செய்த போதும் இந்திய ராணுவம் தொடர்ந்து இதனால் காஸ்மீர் மக்களை சுடுகிறது.
கடந்த வருடம் எட்டு வயதான அசிபா என்ற காஸ்மீர் பெண் குழந்தை நான்கு பேரினால் தொடர்ந்து ஏழு நாட்கள் அதுவும் கோயிலினுள் கட்டி வைத்து பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்யப்பட்டாள்.
இதுவரை 60000 காஸ்மீர் மக்கள் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டிருப்தாக சர்வதேச மன்னிப்புசபை கூறியுள்ளது. 12000 மேற்பட்ட காஸ்மீர் பெண்கள் இந்திய ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்தாகவும் அவ் அறிக்கை தெரிவிக்கிறது.
இது குறித்து போடப்பட்ட பல்லாயிரம் வழக்குகள் காஸ்மீர் நீதிமன்றத்தில் கிடப்பில் இருக்கின்றன. ஒரு வழக்கில்கூட ராணுவம் தண்டிக்கப்பட வில்லை. காஸ்மீர் மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை.
எனவே இனி இந்திய ராணுவமோ அல்லது காஸ்மீர் மக்களோ கொல்லப்படுவதை தவிர்க்க வேண்டுமாயின் இந்திய ராணுவம் காஸ்மீரில் இருந்து வெளியேற வேண்டும். வாக்கெடுப்பு நடத்தி சுதந்திர காஸ்மீர் உருவாக வழி செய்ய வேண்டும்.
சரி. இதில் தமிழர்கள் கவனிக்க என்ன இருக்கிறது?
• இறந்த ராணுவ வீரர்களில் எத்தனை பேர் அரசியல்வாதிகளின் பிள்ளைகள்? எத்தனைபேர் பார்ப்பணர்கள்? எத்தனை பேர் மோடியின் ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள்? ஏன் எப்போதும் தமிழக ராணுவ வீரர்களே இறக்கின்றனர்?
• இறந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு 20 லட்சம் ருபா பணத்தை தமிழக முதல்வர் வழங்கியுள்ளார். சினிமா நடிகர்கள் கிரிக்கட் வீரர்கள் இறந்தவர்களை மாபெரும் தியாகிகள் என்று புகழ்ந்துள்ளார்கள். சரி. அப்படியென்றால் இவர்களோ அல்லது இவர்களது பிள்ளைகளோ ஏன் ராணுவத்திற்கு போவதில்லை? இவர்கள் போய் மடிந்தால் நாம் இவர்களுக்கு 20 கோடி ரூபா வழங்க தயார். போவார்களா?
• குறிப்பாக ஈழத் தமிழர்கள் கவனிக்க வேண்டியது –
இந்திய ராணுவம் எப்படிப்பட்டது என்பதை ஈழத் தமிழர்கள் நன்கு அறிவார்கள். ஆனால் இந்திய ராணுவத்திற்கு எதிராக போராடும் காஸ்மீர் போராளிகளுக்கு பாகிஸ்தானும் சீனாவும் உதவி செய்வதாக இந்தியா கூறுகிறது. அப்படியென்றால் இந்திய ராணுவத்திற்கு எதிராக ஈழத் தமிழர்கள் போராடியபோது ஏன் பாகிஸ்தானும் சீனாவும் உதவி செய்யவில்லை? மாறாக இந்தியாவுடன் சேர்ந்து பாகிஸ்தானும் சீனாவும் இலங்கை அரசுக்குத்தானே உதவி செய்தன. அது ஏன்?
No comments:
Post a Comment