•கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின
இவர் சிங்கள இனத்தை சேர்ந்தவர்
ஆனாலும் கொல்லப்பட்ட ராணுவத்தினர் தனது சிங்கள இனத்தை சேர்ந்தவர்கள் என்று இவர் வீரவணக்கம் செலுத்தியதில்லை.
ஆனாலும் கொல்லப்பட்ட ராணுவத்தினர் தனது சிங்கள இனத்தை சேர்ந்தவர்கள் என்று இவர் வீரவணக்கம் செலுத்தியதில்லை.
இவரும் தேர்தல் பாதையில் பயணிப்பவர்தான்.
ஆனாலும் தேர்தலில் வென்று பதவி பெறுவதற்காக இறந்த சிங்கள ராணுவத்திற்கு இவர் அஞ்சலிகூட செலுத்தியதில்லை.
ஆனாலும் தேர்தலில் வென்று பதவி பெறுவதற்காக இறந்த சிங்கள ராணுவத்திற்கு இவர் அஞ்சலிகூட செலுத்தியதில்லை.
இவர் மட்டும் கொஞ்சம் விட்டுக்கொடுத்திருந்தால் எம்.பி யாகி இருக்க முடியும். அமைச்சு பதவிகூட பெற்றிருக்க முடியும்.
ஆனாலும் இவர் இன்றுவரை தமிழ் மக்களுக்கு உறுதியான ஆதரவை வழங்கி வருகிறார்.
ஆனாலும் இவர் இன்றுவரை தமிழ் மக்களுக்கு உறுதியான ஆதரவை வழங்கி வருகிறார்.
காணமல்போனவர்களின் உறவுகளுக்காக கொழும்பிலேயே சிங்கள மக்களை திரட்டி குரல் கொடுத்து வருகிறார்.
இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்தான். ஆனாலும் சிங்களவர்தான் வந்தேறிகள் என்று தன்னால் நிரூபிக்க முடியுமென தமிழரை வந்தேறிகள் என்று கூறிய பௌத்த பிக்குவிற்கு சவால் விடுத்துள்ளார்.
இவர் இந்த சவாலை இந்தியாவில் இருந்தோ அல்லது வேறு வெளிநாடுகளில் இருந்தோ விடவில்லை. சிங்கள மக்கள் மத்தியில் இருந்துகொண்டே விட்டுள்ளார்.
இவரை தாக்குவதற்கு சிங்கள பேரினவாதிகள் பல முறை முயற்சி செய்தனர். ஆனாலும் உயிராபத்திற்கு மத்தியிலும் இவர் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு ஆதரவு வழங்கி வருகிறார்.
துரதிருஸ்டம் என்னவென்றால் கொழும்பில் உள்ள தமிழர்கள் வாக்களிந்திருந்தால்கூட இவர் தேர்தலில் வென்றிருக்க முடியும். ஆனால் தமிழ்மக்கள் தம்மை கொழும்பில் இருந்து விரட்டிய ஜதேக கட்சிக்கு வாக்களிக்கிறார்களே தவிர இவருக்கு வாக்களிப்பதில்லை.
இவர் ஜ.நா வந்து இலங்கை அரசின் தமிழின படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்க தயாராக இருக்கிறார். ஆனால் எம்மவர்கள் அவருக்குரிய விமான டிக்கட்டைக்கூட வழங்கி உதவுவதற்கு தயாராக இல்லை என்பது வருத்தத்திற்குரிய விடயமே.
No comments:
Post a Comment