Monday, December 30, 2019

நாம் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை

நாம்
என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை
எமது எதிரியே தீர்மானிக்கிறான் !
இந்தியா ஜனநாக நாடு என்கிறார்கள்
இங்கு மக்கள் அகிம்சை வழியில் போராட முடியும் என்கிறார்கள்
ஆனால் அகிம்சை வழியில் போராடிய 15 மக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளார்கள்.
பல நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள்.
என்றுமில்லாதவாறு தனது சொந்த மக்களையே இந்திய அரசு ஈவு இரக்கமின்றி கொல்கிறது.
அரச வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு மக்களின் போராட்டத்தை அடக்க அரசு முயல்கிறது.
சர்வாதிகாரி ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார்
சர்வாதிகாரி முசோலினி மக்களால் கட்டி தொங்கவிடப்பட்டார்
இந்த வரலாற்றை மோடியும் அமித்ஷாவும் நினைவில் கொள்வது நல்லது.

சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தபோது

சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தபோது, ‘வரலாறு முடிவுக்கு வந்துவிட்டது’ என்று கூறி அதனைக் கொண்டாடியவர்கள், இப்போது முதலாளித்துவமே சிறந்த முறை என்று உயர்த்திப்பிடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
முதலாளித்துவ உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவது அதிகரித்து வருவதும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயுள்ள ஏற்றத்தாழ்வுகளும் அதிகரித்து வருவதும், முதலாளித்துவ அமைப்பின் குரூர முகத்தை மிகத் தெளிவாகக் காட்டத் துவங்கியுள்ளன.
நெருக்கடிகள் எற்படும்போது புதிய கண்டு பிடிப்புகள் மூலம் முதலாளித்துவம் தன்னை தக்கவைத்துக் கொள்ளும் என்றார்கள். ஆனால் நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் மிகப் பெரிய வங்கிகளே திவாலாகிக் கொண்டிருக்கின்றன.
இவ் முதலாளித்தவ நெருக்கடிக்கு மாக்சியமே சிறந்த தீர்வை முன்வைக்கிறது என்று உறுதியாக கூறமுடியாது என்பது உண்மைதான். ஆனால் உலகில் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வுகளில் மார்க்சியத்தை விட சிறந்த தீர்வு வேறு எதுவும் இல்லை என்பதும் உண்மையே.
முதலாளித்துவத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் வல்லரசு நாடான பிரிட்டனிலேயே முதலாளித்தவத்தின் நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் அரசு தினறுகிறது.
இனவாதம், மதவாதம் போன்றவற்றை முன்வைத்து மக்களின் கவனத்தை திசை திருப்ப உலகெங்கும் உள்ள பிற்போக்கு அரசுகள் முயலுகின்றன. ஆனால் இதன் மூலம் அதிகரித்துவரும் முதலாளித்துவ நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.

குழந்தை- அப்பா! மிகவும் குளிராக இருக்கிறது

குழந்தை- அப்பா! மிகவும் குளிராக இருக்கிறது
அப்பா- தெரியும். ஆனால் எரிப்பதற்கு நிலக்கரி இல்லையே?
குழந்தை- ஏன் நிலக்கரி இல்லை?
அப்பா- எனக்கு வேலை போய்விட்டது. அதனால் வாங்க முடியவில்லை.
குழந்தை- ஏன் வேலை போய்விட்டது?
அப்பா- நாங்கள் அதிகம் நிலக்கரியை உற்பத்தி செய்துவிட்டோம். அதனால் வேலையைவிட்டு நிறுத்திவிட்டார்கள்.
மிகையான உற்பத்திக் கொள்கையின் முழு அபத்தத்தை இந்த உரையாடல் அம்பலப்படுத்துகின்றது.
இன்று இந்த உரையாடலை பலரும் தங்கள் சொந்த அனுபவங்களினூடாக உணர்ந்து கொள்கின்றனர்.
சமுதாயத்தில் உற்பத்தியாகும் பண்டங்கள் யாவற்றினதும் பெறுமதிக்கு சமமான ஒரு பெறுமதி சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் ஊதியமாகவோ அல்லது வருமானமாகவோ சமத்துவமான முறையில் பங்கிடப்படாதவரை உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையே முரண்பாடு பெருகவே செய்யும்.
இதுவே பொருளியல் நெருக்கடியின் காரணம். இது முதலாளித்துவ சமுதாயத்தில் தவிர்க்க முடியாதது. இந்த நெருக்கடிக்கு முதலாளித்துவத்தில் தீர்வு எதுவும் இல்லை.
பெரும்பான்மையான மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாத காரணத்தால் ஏற்படும் இந்த நெருக்கடியை மக்களினுடைய வாங்கும் சக்தியை பெருக்குவதன் மூலம் தீர்க்க முடியாது.
ஏனெனில் அது முதலாளிகளின் லாபத்தை பாதித்தே அதனை செய்ய முடியும். அதனை அவர்கள் விரும்பமாட்டார்கள். எனெனில் அது அவர்களை தற்கொலை செய்யக் கேட்பதாகும்.
எனவேதான் எவ்வளவு கடுமையாக முயன்றாலும் இப் பிரச்சனைக்க முதலாளியத்தால் தீர்வு காணமுடியாது சோசலிசத்தால் மட்டுமே தீர்வு காண முடியும் என மாக்ஸ் கூறினார்.
உலகில் முதலாளித்துவமா அல்லது சோசலிசமா வெற்றி பெறும் என பலர் வினா எழுப்பிக்கொண்டே இருக்கின்றனர்.
ஆனால் மாக்சிசத்தின் பின்னரான இந்த ஒன்றரை நூற்றாண்டு முதலாளித்துவத்திற்கு ஒரே மாற்று சோசலிசமே என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது.

•கோழிகளால் தன் குஞ்சுகளை

•கோழிகளால் தன் குஞ்சுகளை
எப்படி பாதுகாக்க முடிகிறது?
தன் குஞ்சுகளுக்கு ஆபத்து என்றால் எதிரி எந்தளவு பெரியது என்றாலும் கோழி போராட தயங்குவதில்லை
ஏனென்றால் போராடினால் மட்டுமே உயிர் தப்ப முடியும் என்பதைத் தவிர வேறு எதுவும் அதற்கு தெரியாது.
அதுமட்டுமல்ல,
•குஞ்சுகளைக் காப்பாற்ற போராடுவது பயங்கரவாதம் என்று யாரும் அதற்கு கூறுவதில்லை.
•அகிம்சை வழியில் போராடினால் குஞ்சுகளைக் காப்பாற்றலாம் என யாரும் ஏமாற்றுவதில்லை.
•இதெல்லாம் போன ஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவு என்று யாரும் போதிப்பதில்லை
.
•எல்லாவற்றுக்கும் மேலாக தன்னை அழிப்பது போர்க்குற்றமா? அல்லது இனப்படுகொலையா? என்று ஆராய்ந்து கொண்டிருப்பதில்லை.
கோழிகளால் தம் குஞ்சுகளை போராடி பாதுகாக்க முடிகிறது. ஆனால் தமிழனால் தன் இனத்தை பாதுகாக்க முடியவில்லை.
தமிழனும் ஒருவேளை கோழியாக பிறந்திருந்தால் தன் இனத்தை காக்க போராடியிருப்பானோ?

பெண்களை “சைட்” அடிப்பதற்காகவே

பெண்களை “சைட்” அடிப்பதற்காகவே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக நகைச்சுவை நடிகர் Y.G.மகேந்திரன் கூறியுள்ளார்.
இவர் இந்த நகைச்சுவையை தன் படங்களில் கூறி நடித்திருந்தால் சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற பெயரையாவது பெற்றிருக்கலாம்.
அகதிமுகாமில் இருக்கும் ஈழ அகதிகளை சந்தித்து பேசியதற்காக கம்யுனிஸ்ட் கட்சி மாநில செயலர் கே.பாலகிருஸணன் மீது தமிழக அரசு வழக்கு போட்டுள்ளது.
ஒரு கட்சியின் மாநில செயலரே ஈழ அகதிகளை சந்தித்து பேச முடியாத நிலையிலேதான் ஈழ அகதிகள் இந்தியாவில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த கொடுமைக்கு எதிராக குரல் கொடுக்காத நடிகர் மகேந்திரன் இதற்காக போராடும் மாணவர்களை கொச்சைப்படுத்தி அறிக்கை விடுகிறார்.
கனடாவில் அகதியாக சென்ற ஈழ அகதி ஹரிஆனந்தசங்கரி என்பவர் அந்த நாட்டில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் இந்தியாவில் 30 வருடமாக இருக்கும் ஈழஅகதிகளை ஒரு பாராளுமன்ற கட்சிகூட சந்தித்து பேச முடியாத நிலையில் உள்ளனர்.
இந்த கொடுமைக்கு எதிராக ஒரு தமிழன் என்ற ரீதியில் குரல் எழுப்பாவிட்டாலும் மனிதாபிமான ரீதியிலாவது மகேந்திரன் குரல் கொடுத்திருக்கலாம் அல்லவா?
அவருடைய ரத்தத்தில் இன உணர்வு இல்லாமல் இருக்கலாம். மனிதாபிமான உணர்வுகூடவா இல்லாமல் இருக்கிறது?
சரி. பரவாயில்லை. இந்தியாவில் பாலியல் வழக்கில் தண்டனை பெற்றவர்களில் 60 வீதமானவர்கள் சங்கிகள் என்பதாவது நடிகர் மகேந்திரனுக்கு தெரியுமா?
குறிப்பு - கீழே உள்ள படம் நடிகர் மகேந்திரனின் மாணவர் ஒருவர் காஞ்சிபுரத்தில் கோயிலுக்குள் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்டது.

அவுஸ்ரேலியாவில் இருக்கும் ஈழத் தமிழர் ஒருவர்

அவுஸ்ரேலியாவில் இருக்கும் ஈழத் தமிழர் ஒருவர் எனக்கு போன் செய்து சார்ல்ஸ், துவாரகா, பாலச்சந்திரன் பிறந்து விட்டார்கள் என்றார்.
எனக்கு புரியவில்லை. ஏனெனில் இவைகள் பிரபாகரன் பிள்ளைகளின் பெயர்கள். எனவே அவர்கள் எப்படி பிறக்க முடியும் என நினைத்தேன்.
தான் மருத்துவமனையில் இருந்து பேசுவதாகவும் தமது மனைவி ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்திருப்பதாக கூறினார்.
அவர் எனது உறவினரும் இல்லை. அவர் எனது நண்பரும் இல்லை. ஆனாலும் அவர் எனக்கே முதலில் போன் செய்து கூறியது ஒருபுறம் ஆச்சரியமாக இருந்தது.
மறுபுறம் பிரபாகரனின் குழந்தைகள் பிறந்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் அவர் கூறியது அதைவிட ஆச்சரியமாக இருந்தது.
ஏனெனில் பிரபாகரன் பயங்கரவாதி. ஆகவே அவர் குழந்தைகளும் பயங்கரவாதிகள் என்று கூறி அவர்கள் அனைவரையும் இலங்கை அரசு கொன்றுள்ள நிலையில் ஒரு ஈழத் தமிழர் தமது குடும்பத்தில் அவர்கள் பிறந்து விட்டார்கள் என்று மகிழ்வுடன் நினைக்கிறார் அல்லவா.
இதையும்விட ஆச்சரியம் என்னவெனில் புலிகள் பயங்கரவாத இயக்கம் என்று இந்திய அரசு தொடர்ந்து தடை செய்து வருகிறது.
ஆனால் அதே இந்தியாவில் தமிழ் மக்கள் பிரபாகரன் படத்திற்கு முன்னால் திருமணம் செய்வது, தமது குழந்தைகளுக்கு பிரபாகரன் என்று பெயர் வைப்பது, தமது உடல்களில் பிரபாகரன் படத்தை பச்சை குத்துவது, தமது கடைகளுக்கு பிரபாகரன் பெயர் வைப்பது, தமது வாகனங்களில் பிரபாகரன் படம் வைப்பது என்று அனைத்து வழிகளிலும் பிரபாகரனைக் கொண்டாடி வருகிறார்கள்.

மக்கள் வெள்ளத்தில் மூழ்கிறார்கள்.

மக்கள் வெள்ளத்தில் மூழ்கிறார்கள்.
எமது அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள் என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள்.
மக்களை எப்படி காப்பாற்றுவது என்று அவர்கள் ஆழ்ந்து சிந்திக்கிறார்கள் என்று நம்புவோம்.
ஆனால் எமது புதிய ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஆம். இனி யாரும் சுவர்களில் பிரசுரம் ஒட்டக்கூடாது என்று கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அட பிக்காலிப் பயலே. வெள்ளத்திற்கும் பிரசுரம் ஒட்டாமல் விடுவதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டுவிடாதீர்கள்.
ஏனெனில் இதுதான் இப்ப இலங்கை அரசியல்.