பெண்களை “சைட்” அடிப்பதற்காகவே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக நகைச்சுவை நடிகர் Y.G.மகேந்திரன் கூறியுள்ளார்.
இவர் இந்த நகைச்சுவையை தன் படங்களில் கூறி நடித்திருந்தால் சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற பெயரையாவது பெற்றிருக்கலாம்.
அகதிமுகாமில் இருக்கும் ஈழ அகதிகளை சந்தித்து பேசியதற்காக கம்யுனிஸ்ட் கட்சி மாநில செயலர் கே.பாலகிருஸணன் மீது தமிழக அரசு வழக்கு போட்டுள்ளது.
ஒரு கட்சியின் மாநில செயலரே ஈழ அகதிகளை சந்தித்து பேச முடியாத நிலையிலேதான் ஈழ அகதிகள் இந்தியாவில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த கொடுமைக்கு எதிராக குரல் கொடுக்காத நடிகர் மகேந்திரன் இதற்காக போராடும் மாணவர்களை கொச்சைப்படுத்தி அறிக்கை விடுகிறார்.
கனடாவில் அகதியாக சென்ற ஈழ அகதி ஹரிஆனந்தசங்கரி என்பவர் அந்த நாட்டில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் இந்தியாவில் 30 வருடமாக இருக்கும் ஈழஅகதிகளை ஒரு பாராளுமன்ற கட்சிகூட சந்தித்து பேச முடியாத நிலையில் உள்ளனர்.
இந்த கொடுமைக்கு எதிராக ஒரு தமிழன் என்ற ரீதியில் குரல் எழுப்பாவிட்டாலும் மனிதாபிமான ரீதியிலாவது மகேந்திரன் குரல் கொடுத்திருக்கலாம் அல்லவா?
அவருடைய ரத்தத்தில் இன உணர்வு இல்லாமல் இருக்கலாம். மனிதாபிமான உணர்வுகூடவா இல்லாமல் இருக்கிறது?
சரி. பரவாயில்லை. இந்தியாவில் பாலியல் வழக்கில் தண்டனை பெற்றவர்களில் 60 வீதமானவர்கள் சங்கிகள் என்பதாவது நடிகர் மகேந்திரனுக்கு தெரியுமா?
குறிப்பு - கீழே உள்ள படம் நடிகர் மகேந்திரனின் மாணவர் ஒருவர் காஞ்சிபுரத்தில் கோயிலுக்குள் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment