•அரசியல்வாதிகள் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மக்கள் முன் வந்தால் விரைவில் தேர்தல் வரப் போகிறது என்று அர்த்தம்!
கிளிநொச்சி சந்தியில் தமிழரசுக்கட்சி விசுவாசிகள் இருவர் பேசிக் கொண்டது,
ஒருவர் - சிறீதரனுக்கு மட்டும் ஒரு சொடுக்கில் எதையும் மாற்றும் மந்திர சக்தி இருந்திச்சின்னா உடனடியாக ஒரு சொடக்குப் போட்டு சுமந்திரனை தமிழரசுக்கட்சி தலைவராக்கி விடுவார்.
மற்றவர் - அது ஏன் சுமந்திரனை? அந்த சொடக்கைப் போட்டு அவரே தமிழரசுக்கட்சி தலைவராகலாமே?
ஒருவர் - அந்தளவுக்கு அறிவு இருந்தா அவர் ஏன் சுமந்திரனை கிளிநொச்சிக்கு அழைத்து வாரார்?
மற்றவர் - அதுவும் சரிதான். ஆனால் சுமந்திரன் எப்படி தைரியமாக வந்திருக்கிறார்?
ஓருவர் - வெள்ளத்தில் ஒருவர் காலிலும் செருப்பு இருக்காது அல்லவா? அந்த தைரியம்தான். வேறு என்ன?
குறிப்பு - உரையாடல் கற்பனைதான் ஆனால் இருவரும் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வந்திருப்பது உண்மையே.
No comments:
Post a Comment