ஈழ அகதி கனடாவில் குடியுரிமை பெற்று பாராளுமன்ற உறுப்pனராககூட வர முடியும்
ஈழ அகதி லண்டனில் குடியுரிமை பெற்று கவுன்சிலர்களாகக்கூட வர முடியும்
ஈழ அகதி நோர்வேயில் குடியுரிமை பெற்று நகர மேயராக்ககூட வர முடியும்
ஆனால் தமிழ்நாட்டில் ஈழ அகதி குடியுரிமை பெற முடியாது. உயர் கல்விகூட பெற முடியாது.
பொதுவாக ஒருவர் எந்த நாட்டில் பிறக்கின்றாரோ அந்த நாட்டின் குடியுரிமையை பெற முடியும். ஆனால் தமிழ் நாட்டில் பிறந்தாலும் ஈழ அகதி குடியுரிமை பெற முடியாது
பொதுவாக ஒருவர் தொடர்ந்து 7 வருடங்கள் ஒரு நாட்டில் இருந்தால் அந் நாட்டின் குடியுரிமையை பெற முடியும். ஆனால் 30 வருடம் தொடர்ந்து தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் ஈழ அகதி குடியுரிமை பெற முடியாது
பொதுவாக ஒருவர் இன்னொரு நாட்டவரை திருமணம் செய்தால் அந்நாட்டில் குடியுரிமை பெறலாம். ஆனால் தமிழக தமிழரை திருமணம் செய்தாலும் ஈழ அகதி குடியுரிமை பெற முடியாது.
ஏன் இந்த அவல நிலை? ஏன் ஈழ அகதிகளின் வலியை இந்திய அரசால் உணர முடியவில்லை?
இதோ ஒரு ஈழ அகதி தன்னைக் கருணைக் கொலை செய்து விடுங்கள் என மனுக் கொடுத்துள்ளார்.
இவருக்கு இந்திய அரசு என்ன பதில் அளிக்கப் போகிறது?
No comments:
Post a Comment