ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் தமிழ்நாட்டில் யாருக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கும் அதிகாரம் தமிழ் மக்களிடமே இருக்க வேண்டும்.
தாய் தமிழகத்தில் தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை இல்லை என்பதை கைபர் கணவாய் ஊடாக திருட்டுத்தனமாக வந்தவர்கள் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது.
இந்தியர் என்ற போர்வையில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் தமிழ்நாட்டுக்குள் வந்து குடியேறிவிட்டனர். ஆனால் வெறும் அறுபதாயிரம் ஈழத் தமிழ் அகதிகளுக்கு தமிழ்நாட்டில் குடியுரிமை வழங்க முடியாது என்கிறார்கள்.
300 வருடமாகத்தான் இந்தியா இருக்கிறது. ஆனால் மூவாயிரம் வருடமாக தமிழ்நாடு இருக்கிறது.
தமிழ்நாட்டில் தமிழனுக்கு இடம் இல்லை என்றுகூற இந்தியாவுக்கு என்ன அருகதை இருக்கு?
சேர சோழ பாண்டிய மன்னர் காலத்தில்கூட “உன் நாடு எதுவென்றால் தமிழ்நாடு என்று கூறு” என்றே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வரலாறு அறிந்த காலம் முதல் தன் நிலத்திற்கு “தமிழ்நாடு” என்று பெயரிட்டு அழைத்து வந்த இனம் தமிழ் இனம்.
அந்த இனத்திற்கு தன் நிலத்தில் யார் குடியேற வேண்டும் தீர்மானிக்கும் உரிமை இல்லையா?
No comments:
Post a Comment