•நாம் பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை!
செய்தி - என் பிணத்தை தாண்டித்தான் மேற்கு வங்கத்தில் குடியுரிமைச் சட்டத்தை செயல்படுத்த முடியும் - முதல்வர் மம்தா பானர்ஜி
அவர் உயிரோடு இருக்கும் முதலமைச்சர். அதனால்தான் தன் பிணத்தை தாண்டித்தான் வர முடியும் என்று அவரால் சவால் விட முடிகிறது.
ஆனால் தமிழ்நாட்டில் இரண்டு பிணங்கள் அல்லவா முதல்வராகவும் துணை முதல்வராகவும் இருக்கின்றன.
அதனால்தானோ தங்கள் பிணத்தை தாண்டித்தான் வர முடியும் என இவர்களால் சவால் முடியவில்லை போலும்.
என்ன செய்வது? நமக்கு வந்து வாய்ச்சது இவ்வளவுதான் என்று பெரு மூச்சு விடுவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.
தமது தலைவி சாப்பிட்ட ஒன்னரை இட்லிக்கு 3 கோடி ரூபா பில் போட்டவர்களிடம் தமிழ் மக்களுக்காக சவால் விடுங்கள் என்று எதிர்பார்பது கொஞ்சம் ஓவர்தான்.
இதுகூடப் பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு ஈழத்தில் எமக்கு ஒரு தலைவர் வாய்ச்சு இருக்கிறார்.
ஈழ அகதிகள் தங்களை கடலில் தள்ளி விடுங்கள் என்று இந்திய அரசிடம் கூறுகிறார்கள். ஆனால் இந்த தலைவர் சம்பந்தர் “ இந்திய அரசை சந்தேகிக்கக்கூடாது” என்று அறிக்கை விடுகிறார்.
எந்த சுவரில் போய் இதுக்கு நாம் தலையை முட்டுவது?
No comments:
Post a Comment