•நாய் குரைத்து சந்திரன் தேய்வதில்லை
நான் பாலச் சந்திரன் தேய்ந்து விடுவேனா?
நான் பாலச் சந்திரன் தேய்ந்து விடுவேனா?
நாய்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று வீட்டு நாய். இன்னொன்று ரோட்டு நாய்.
வீட்டு நாய் திருடனைப் பார்த்து குரைக்கும். எனவே அதில் நாம் கவனம் எடுக்க வேண்டும்.
ஆனால் தெருநாய் ரோட்டில் போவோர் வருவோர் எல்லோருக்கும் குரைத்துக் கொண்டிருக்கும்.
குரைப்பது கடி நாயாக இருந்தால் உதைத்து விரட்டலாம். விசர் நாயாக இருந்தால் நாம்தான் விலத்தி போக வேண்டும்.
ஏனெனில் குரைக்கும் நாய் ஒவ்வொன்றுக்கும் நின்று பதில் சொல்லிக் கொண்டிருந்தால் எமது பயணம்தான் தடைப்படும்.
அண்மையில் பிரிட்டன் தேர்தலில் பழமைவாதக்கட்சி வென்றவுடன் மலேசியாவில் இருக்கும் சுமந்திரனின் விசுவாசி ஒருவர் “ மானஸ்தன் தோழர் பாலன் இப்பவும் லண்டனில் இருக்கிறாரா? அல்லது வெளியேறி விட்டாரா?” என்று எழுதியுள்ளார்.
பாவம் அந்த விசுவாசிக்கு கடந்த 9 வருடங்களாக லண்டனில் பழமைவாதக்கட்சிதான் ஆட்சியில் இருக்கிறது என்பதுகூடத் தெரியவில்லை.
சரி. பரவாயில்லை. முதலாளித்தவ நாட்டில் புரட்சியாளர்கள் இருக்கக்கூடாது என்ற அவரது கருத்தாவது சரியானதா என்பதை கொஞ்சம் பார்ப்போம்.
(1) முதலாளித்துவம்தான் தன்னை அழித்தொழிக்கும் தொழிலாளி வர்க்கத்தை உருவாக்கிறது.
(2) புரட்சி என்பது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை தூக்கி எறியும் பலாத்கார நிகழ்வு.
(3) பிரசவம் எங்கு நடைபெறுகிறதோ அங்குதான் அதற்குரிய மருத்துவச்சி இருக்க வேண்டும். அதுபோல் புரட்சி எங்கு நடைபெற வேண்டுமோ அங்குதான் அதனைப் பிரசவிக்கும் புரட்சியாளர்கள் இருப்பார்கள்.
(4) புரட்சியை போதித்த ஆசான்களான மார்க்கஸ், எங்கெல்ஸ் எல்லாம் முதலாளித்துவத்தின் தொட்டில் என அழைக்கப்பட்ட லண்டனில்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.
மேற்கண்ட விடயங்கள் அந்த சுமந்திரன் விசுவாசிக்கு தெரிந்திருக்காது. தெரிந்திருந்தாலும் நிச்சயமாய் புரிந்திருக்காது.
அதனால்தான் “லண்டனில் தோழர் இருக்கலாமா?” என முட்டாள்தனமாக கேட்கிறார்.
இப்போது எனது கவலை என்னவென்றால் இந்த பதிவை படித்துவிட்டு அந்த சுமந்திரன் விசுவாசி “என் தலைவன் சுமந்திரனைவிட கார்ல் மாக்ஸ் சிறந்த சிந்தனையாளாரா?” என்று கேட்டால் நான் என்ன செய்வது?
நான் எந்த பதவியிலும் இல்லை. நான் எந்தக் கட்சியிலும் இல்லை. இருந்தும் சுமந்திரன் விசுவாசிகள் சிலர் என்மீது ஏன் விமர்சனம் செய்கின்றனர்?
நான் ரிவி, ரேடியோ, பேப்பர்கள் எதிலும் பேசவில்லை. எழுதவில்லை. எனது முகநூலில் மட்டுமே எழுதுகிறேன். இருந்தும் அந்த சுமந்திரன் விசுவாசிகள் என் மீது ஏன் அவதூறு செய்கின்றனர்?
ஏனெனில் நான் சரியான கருத்துகளை சொல்வது மட்டுமல்ல எனது இக் கருத்துகள் பல்லாயிரம் பேரை சென்றடைகிறது.
அதனால்தான் எனது கருத்துகளுக்கு உரிய பதிலை சொல்ல முடியாமல் ஆதாரமற்ற அவதூறுகளை செய்கின்றனர்.
தாராளமாக குரைக்கட்டும். எனது பயணம் தொடரும். இது உறுதி.
No comments:
Post a Comment