•அன்று நாம் இருந்த மதவில்
இன்று இந்த இளைஞர்கள்
இன்று இந்த இளைஞர்கள்
இருக்கும் இளைஞர்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள்
ஆனால் அந்த மதவு மட்டும் அப்படியே இருக்கிறது
மதவில் மந்தி மாதிரி குந்தி இருந்துகொண்டு
போற வாற பெட்டைகளுக்கு பகிடி விடுகிறான்கள் என்றுதான்
பொதுவாக மதவில் இருக்கும் இளைஞர்களை கூறுவார்கள்
போற வாற பெட்டைகளுக்கு பகிடி விடுகிறான்கள் என்றுதான்
பொதுவாக மதவில் இருக்கும் இளைஞர்களை கூறுவார்கள்
ஆனால் கரவெட்டியில் இருக்கும் இந்த மதவு
அந்த கருத்தை மாற்றி அமைத்தது
அந்த கருத்தை மாற்றி அமைத்தது
அன்று நாம் இந்த மதவில் அமர்ந்திருந்துதான்
கரவை இளைஞர் ஒன்றியம் அமைத்து இயங்கினோம்
கரவை இளைஞர் ஒன்றியம் அமைத்து இயங்கினோம்
இன்று இந்த இளைஞர்கள் இந்த மதவில் அமர்ந்து
ஊரைச் சுத்தம் செய்வது பற்றி உரையாடுகிறார்கள்
ஊரைச் சுத்தம் செய்வது பற்றி உரையாடுகிறார்கள்
நாம் இருந்ததால்தான் இந்த மதவு பெருமை பெறுகிறது என இதுவரை நினைத்திருந்தேன்
ஆனால் அது தவறு என்பதை இப்போது உணர்ந்து கொள்கிறேன்.
ஆம். இந்த மதவில் இருந்ததால்தான் நாம் பெருமை பெறுகிறோம் என்பதே சரியாகும்.
கரவெட்டியில் இந்த மதவு
இளைஞர்கள் மனங்களில்
அன்றும் இருந்தது
இன்றும் இருக்கிறது
இனியும் இருக்கப் போகிறது !
இளைஞர்கள் மனங்களில்
அன்றும் இருந்தது
இன்றும் இருக்கிறது
இனியும் இருக்கப் போகிறது !
No comments:
Post a Comment