Monday, October 26, 2020
இன்று சர்வதேச சிறுவர்கள் தினம்
•இன்று சர்வதேச சிறுவர்கள் தினம்
சரணடைய சொன்னார்கள்
சரணடைந்தேன்
பெஞ்சில் உட்காரச் சொன்னார்கள்
உட்கார்ந்தேன்
சாப்பிட பிஸ்கட் தந்தார்கள்
சாப்பிட்டேன்
அப்புறம் பார்த்தா சுட்டுக் கொன்றார்கள்
இறந்துவிட்டேன்.
பரவாயில்லை. ஆனால் ஒரு கேள்வி
என்னை ஏன் சுட்டுக் கொன்றார்கள் ?
ஏனென்றால் என் அப்பா பயங்கரவாதியாம்.
எனவே நானும் பயங்கரவாதி என்கிறார்கள்
சரி. அப்படியென்றால் ,
ஜேவிபி விஜேயவீராவை பயங்கரவாதி என்று கொன்றீர்கள்
ஆனால் அவர் பிள்ளைகளை பயங்கரவாதி என்று ஏன் கொல்லவில்லை?
ஏனென்றால் அவர் சிங்களவர்
இப்போது புரிகிறதா ?
நடந்தது இனப்படுகொலை என்று!
குறிப்பு - இவ்வாறு இனப்படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களுக்குரிய நீதியை எப்போது, எப்படி பெற்றுக் கொடுக்கப் போகிறோம்?
பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்யப்பட்ட
பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்யப்பட்ட உயிரிழந்த மனிஷா வால்மிகி குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தியும், பிரியங்காவும் இன்று சென்றுள்ளனர்
ஆனால் யமுனா துரித சாலையில் அவர்களது வாகனங்கள் உத்திரபிரதேச போலிசாரில் தடுத்து நிறுத்தப்பட்டு , வாகனப்பயணம் தொடர அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் இருவரும் 100 கி.மீ தொலைவிற்கு நடந்தே செல்ல முடிவெடுத்து கால்நடையாக பயணத்தை தொடர்ந்தனர்.
அப்போது உத்திரபிரதேச போலிசார் தன்னை கீழே தள்ளி , லத்தியால் அடித்ததாக ராகுல் குற்றம் சாட்டியுள்ளார் .
அதேவேளை நடந்து செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு, ராகுலும் , பிரியங்காவும் இப்போது உத்திரபிரதேச போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலித் தலைவர்களே வெறுமனே அஞ்சலி அறிக்கை விட்டிட்டு மௌனமாக இருக்கும்போது ராகுல்; ஒரு தலித் பெண்ணிற்காக இந்தளவு தூரம் வந்திருப்பது பாராட்டப்பட வேண்டியது.
ராகுலும் பிரியங்காவும் உண்மையில் பாதிக்கப்பட்ட பெண்ணில் இரக்கம்கொண்டு சென்றிருந்தால் தம் தந்தை அனுப்பிய இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் பெண்களின் வலியையும் இப்போது அவர்களால் உணர்ந்திருக்க முடியும் என நம்புகிறேன்.
மகிந்தவுக்கு வந்துள்ள “நோய்” எது?
•மகிந்தவுக்கு வந்துள்ள “நோய்” எது?
இந்திய பிரதமர் மோடியுடன் பேசிய விடயங்கள் தனக்கு ஞாபகம் இல்லை என்று பிரதமர் மகிந்த ராஜபக்சா கூறியுள்ளார்.
நான்கு நாட்களுக்கு முன்னர் அதுவும் அயல் நாட்டு பிரதமருடன் பேசிய விடயம் ஞாபகம் இல்லை என்றால் நிச்சயம் இது ஒரு நோயாக இருக்கவே வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் நோய் மிக மோசமாக முற்றவில்லை என்பது ஒரு ஆறுதல். ஏனெனில் அவர் இந்திய பிரதமருடன் தான் பேச வில்லை என்று கூறவில்லை அல்லவா?
இNதுபோன்று கொலை வழக்கு விசாரணையின்போது இவருடைய மனைவி தனக்கு சிங்கள மொழியே மறந்து போய்விட்டது என்று கூறியிருக்கிறார்.
இவர்களுக்கு வந்திருக்கும் இது என்ன நோய் என்று யாராவது மருத்துவர்கள் விபரமாக கூறினால் மக்களுக்கு பிரயோசனமாய் இருக்கும்.
குறிப்பு - ஞாபகம் இல்லை என்று கூறியதன் மூலம் தான் தப்பித்துவிட்டதாக மகிந்த கருதலாம். ஆனால் அவர் எந்த இனவாதத்தின் மூலம் பதவிக்கு வந்தாரோ அந்த இனவாதமே அவரை பதவியில் இருந்து விரட்டப் போகிறது.
110
எல்லா நாடுகளிலும் குழந்தையைக் காணவில்லை
எல்லா நாடுகளிலும் குழந்தையைக் காணவில்லை என்று அப்பா தேடுவார்.
ஆனால் இலங்கையில் மட்டுமே அப்பாவைக் காணவில்லை என்று குழந்தை தேடும் நிலை இருக்கிறது.
அதுவும் போர் முடிந்து பதினொரு வருடம் கழிந்த பின்பும்கூட அப்பாவைத் தேடும் அவலநிலை தமிழ் இன குழந்தைகளுக்கு மட்டுமே இருக்கிறது.
சமர் பல கண்ட களத்தை மறந்தோம்
அதில் எமக்காக மாண்டவர்களை மறந்தோம்
நிலத்தை மறந்தோம். இனத்தை மறந்தோம்.
எதிரி விட்டெறியும் எலும்புத் துண்டிற்காக
குழந்தைகள் துயர் துடைக்க மறந்தோமே
இந்தளவு கேவலமான இனமா இது?
குறிப்பு – சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வு.
முதியோர் தின வாழ்த்துகள்!
முதியோர் தின வாழ்த்துகள்!
203
You, கமலா பாலன், Santhulaki Eelapriyan and 200 others
26 comme
கலைஞர் ஆட்சியில் இருந்தபோது
கலைஞர் ஆட்சியில் இருந்தபோது அவர் கார்க்கதவை திறந்து சலூயுட் அடித்த அதே பொலிஸ்தான் “என்னைக் கொல்றாங்க” “என்னை கொல்றாங்க” என்று அவர் கத்தக் கத்த இழுத்துச் சென்று சிறையில் அடைத்தது.
காங்கிரஸ் ஆட்சியில் ராகுல் காந்திக்கு சலூயுட் அடித்த அதே பொலிஸ்தான் இன்று அவரை சட்டையில் பிடித்து தள்ளி வீழ்த்தியிருக்கிறது.
ஏனெனில் பொலிஸ் என்பது அரசின் ஏவல்நாய். அதனை அரசு ஏவினால் அது யாரை வேண்டுமானாலும் கடித்து குதறும்.
இதுவே உண்மை. ஆனால் பொலிஸ் மக்களின் நண்பன் என்று கூறி ஏமாற்றுகிறார்கள்.
துருக்கிய மொழியில் தோழர் சண் நூல்!
•துருக்கிய மொழியில் தோழர் சண் நூல்!
தமிழ் சிங்கள முஸ்லிம் மூவின மக்கள் மத்தியில் மதிப்பு பெற்ற தமிழ் தலைவர்களில் தோழர் சண்முகதாசனும் ஒருவர்.
அவர் இலங்கையில் மட்டுமன்றி சர்வதேசரீதியிலும் மதிப்பு மிக்க ஒரு தமிழ் தலைவர் ஆவார்.
அவர் எழுதிய “ஒரு கம்யுனிஸ்டின் அரசியல் நினைவுகள்” நூல் முதலில் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் வெளிவந்தது.
பின்னர் அதன் தமிழ் பதிப்பு நூலை 1990ல் தமிழகத்தில் நான் வெளியிட்டிருந்தேன்.
அதன் பின்னர் விடியல் பதிப்பகம் அதனை மீள்பதிப்பு வெளியிட்டது. அதன்பின்னர் மார்க்சிச கற்கைக்கான நிலையம் இலங்கையில் வெளியிட்டது.
இப்போது இதன் துருக்கிய மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டிருக்கிறது என்ற செய்தியை பத்மநாபன் ஐயர் இன்று எனக்கு தெரிவித்தார்.
அவர் அந்த துருக்கிய மொழிபெயர்ப்பு நூலை வாங்கி வைத்திருப்பதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
“துருக்கிய மொழி தெரியாத நீங்கள் எதற்காக அவ் நூலை வாங்கி வைத்திருக்கிறீர்கள்?” என்று அவரிடம் கேட்டேன்.
அதற்கு அவர் “ ஒரு ஈழத் தமிழரின் நூல் துருக்கிய மொழியில் வெளியிடப்பட்டிருப்பது எமக்கு பெருமை அல்லவா. எனவேதான் அதனை வாங்கி பாதுகாத்து வைத்திருக்கிறேன்”என்றார்.
பத்மநாபன் ஐயர் ஒரு நடமாடும் நூலகம் என்று கூறலாம். அவரிடம் ஈழத்து எழுத்தாளர்கள் பற்றியோ அவர்களது நூல்கள் பற்றியோ விபரங்கள் பெறலாம்.
அவர் கம்யுனிஸ்ட் எழுத்துக்கள் மீதும் ஆர்வம் கொண்டவர் என்பது பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
நான் அவரை வீட்டில் சந்திக்கும்போதெல்லாம் தனது புத்தக குவியலில் இருந்து அரிய கம்யுனிஸட் புத்தகங்களை தேடி எடுத்து அன்பளிப்பாக தருவார்.
அவருக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பு - இந்தியாவில் நக்சலைட் எழுச்சி ஆரம்பமானவேளை அதுகுறித்து தோழர் சண் அவர்கள் எழதிய அறிக்கை யாரிடமாவது இருந்தால் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)