Monday, October 26, 2020
பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்யப்பட்ட
பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்யப்பட்ட உயிரிழந்த மனிஷா வால்மிகி குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தியும், பிரியங்காவும் இன்று சென்றுள்ளனர்
ஆனால் யமுனா துரித சாலையில் அவர்களது வாகனங்கள் உத்திரபிரதேச போலிசாரில் தடுத்து நிறுத்தப்பட்டு , வாகனப்பயணம் தொடர அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் இருவரும் 100 கி.மீ தொலைவிற்கு நடந்தே செல்ல முடிவெடுத்து கால்நடையாக பயணத்தை தொடர்ந்தனர்.
அப்போது உத்திரபிரதேச போலிசார் தன்னை கீழே தள்ளி , லத்தியால் அடித்ததாக ராகுல் குற்றம் சாட்டியுள்ளார் .
அதேவேளை நடந்து செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு, ராகுலும் , பிரியங்காவும் இப்போது உத்திரபிரதேச போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலித் தலைவர்களே வெறுமனே அஞ்சலி அறிக்கை விட்டிட்டு மௌனமாக இருக்கும்போது ராகுல்; ஒரு தலித் பெண்ணிற்காக இந்தளவு தூரம் வந்திருப்பது பாராட்டப்பட வேண்டியது.
ராகுலும் பிரியங்காவும் உண்மையில் பாதிக்கப்பட்ட பெண்ணில் இரக்கம்கொண்டு சென்றிருந்தால் தம் தந்தை அனுப்பிய இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் பெண்களின் வலியையும் இப்போது அவர்களால் உணர்ந்திருக்க முடியும் என நம்புகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment