Monday, October 26, 2020
க/பெ.ரணசிங்கம் - சிறு குறிப்பு
•க/பெ.ரணசிங்கம் - சிறு குறிப்பு
வெளிநாட்டில் இறந்த தன் கணவனின் உடலைப் பெறுவதற்காக ஒரு பெண் அரசோடும் அதிகாரிகளோடும் போராடும் கதை இது.
இது ஈழத் தமிழருக்கும் பரிட்சயமான கதைதான். ஆனால் இந்திய அரசோடு ஒப்பிடும்போது இலங்கை அரசு பரவாயில்லை என்றே தோன்றுகிறது.
ஏனெனில் இலங்கை அரசு எடுத்த எடுப்பிலே முகத்தில் அடித்தாற்போல் தன்னால் முடியாது என்று கூறிவிடும். எனவே தமிழ் மக்கள் இலங்கை அரசை நம்பி ஏமாறும் நிலை இல்லை என்று கூறலாம்.
இந்த படத்தை மேலோட்டமாக பார்க்கும்போது மோடி அரசையும் அதன் ஜஏஎஸ் அதிகாரிகளையும் நல்லவர்கள் போல் காட்டுவதாக தோன்றும்.
ஆனால் கொஞ்சம் ஆழமாக பார்க்கும்போதுதான் பிரதமர் உட்பட மொத்த ஆளும் வர்க்கமும் எப்படி ஒரு ஏழைப் பெண்ணை ஏமாற்றுகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
அதுவும் வெளிநாட்டில் இறந்த நடிகை சிறீதேவியின் உடலை உடன் பெற்றுக்கொடுத்த அரசானது ஏழை மக்களின் உடலை பெறுவதற்கு காட்டும் அசிரத்தை நன்கு காட்டப்பட்டுள்ளது.
வியாபாரத்திற்காக விஜய் சேதுபதியை இணைத்து பின்னர் அவருக்காகவே சில காட்சிகளையும் இணைத்ததால் படம் சற்று நீண்டு விட்டது.
இதை தவிர்த்து மோடி அரசு எதிர்ப்பையும் தெளிவாக காட்டியிருந்தால் மிகச் சிறந்த படமாக வந்திருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment