Monday, October 26, 2020
ஜல்லிக்கட்டு மாட்டுக்காக போராடுபவர்கள்
ஜல்லிக்கட்டு மாட்டுக்காக போராடுபவர்கள் ஏன் தண்ணிக்காகப் போராடவில்லை என்று அன்று கேட்டவர்கள்
முரளி படத்திற்கு எதிராக குரல் கொடுப்போர் ஏன் பல்கலைக்கழகத்திற்காக குரல் கொடுக்கவில்லை என்று இன்று கேட்கிறார்கள்.
அதுவும் இன்னும் சிலர் தமிழ்தேசியவாதிகள் “பாசிசவாதிகள்” “சங்கிகளைவிட பயங்கரமானவர்கள்” என்றெல்லாம் என்னென்னவோ கூறுகிறார்கள்.
இவர்கள் எல்லாம் மலையில் ஒரு சிறிய கல்லை தமிழ் மக்கள் உடைத்துக்கொண்டு இருப்பதாக எண்ணுகிறார்கள்.
ஆனால் தமிழ் மக்கள் ஒன்றல்ல (இலங்கை இந்தியா ) இரண்டு பெரிய மலைகளை உடைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளவில்லை.
ஆம். அதனால்தான், ஒரு படத்தை தமிழ் மக்கள் எதிர்ப்பதாக தெரிந்த இவர்கள் கண்களுக்கு இதற்காக தமிழ் மக்கள் ஒன்று சேருகிறார்கள் என்ற உண்மையை தெரிந்துகொள்ள முடியவில்லை.
தான் தமிழனாக பிறந்தது குற்றமா என கேட்டு அறிக்கைவிட்ட முரளிதரன் இரண்டுநாளில் தன் படத்தில் இருந்து விஜய்சேதுபதியை விலகும்படி அறிக்கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்த நிலையை வெறும் பேஸபுக் மற்றும் டிவிட்டரை வைத்து தமிழ் மக்கள் ஏற்படுதியிருக்கிறார்கள்.
முரளி படம் எடுக்க முடியவில்லை என்பதை பெரிய தோல்வியாக எதிரிகள் கருத மாட்டார்கள்.
மாறாக, ஒன்று சேர்ந்து ஒருமித்து பங்களித்தல் என்ற அடுத்த கட்டநிலைக்கு உலகத் தமிழினம் நகருகின்றது என்ற உண்மையே அவர்களுக்கு மிகப்பெரிய அச்சத்தைக் கொடுக்கும்.
290
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment