Monday, October 26, 2020
தோழர் பல்வீந்தர் சிங் கொலை
•தோழர் பல்வீந்தர் சிங் கொலை
நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன?
1985ல் கேரள நக்சலைட் இயக்க தலைவர் தோழர் வேணு அவர்களுடன் உரையாடும்போது பஞ்சாபில் “தோழர்” என்றால் “துரோகி” என்று அர்த்தம் என்றார்.
இதைக் கேட்டதும் நான் ஆச்சரியம் அடைந்தேன். அப்போது இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இப்போது புரிந்துகொள்ள முடிகிறது.
பஞ்சாபில் தோழர் பல்வீந்தர் சிங் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் கம்யுனிஸ் கட்சி வாலிபர் சங்க தலைவராகவும் மாநில கமிட்டி உறுப்பினராகவும் இருந்தவேளை அரசுடன் சேர்ந்து பல சீக்கிய மக்களை கொன்றுள்ளார்.
காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடுவதாக கூறிக்கொண்டு அரசுடன் சேர்ந்து பல படுகொலைகளை இவர் செய்துள்ளார்.
இதனால் இவருக்கும் மனைவிக்கும் மற்றும் தம்பி மற்றும் தம்பி மனைவி என நான்கு பேருக்கும் சௌர்யா சக்ர விருது வழங்கி அரசு கௌரவித்துள்ளது.
பொதுவாக இவ் விருது ராணுவத்தினருக்கே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் ராணுவம் அல்லாதவர்கள் இவ் விருதைப் பெற்றது இவர்கள் மட்டுமே.
இவர் மீது 42 தடவைகளுக்குமேல் கொலை முயற்சி நடைபெற்றது.
இவருக்கு பாதுகாப்பு அளித்துவந்த அரசு கடந்த வருடம் பாதுகாப்பை நீக்கிவிட்டது.
இப்போது இவர் கொல்லப்பட்டுள்ளார். இவர் கொலை எமக்கு புரியவைப்பது என்னவெனில்,
(1)கம்யுனிஸ்டுகள் அரசுடன் சேர்ந்து காட்டிக்கொடுத்து செயற்பட்டதால் பஞ்சாப் மக்கள் “தோழர்” என்றால் “துரோகி” என்று கருதுகிறார்கள்.
(2)சுமார் 40 வருடம் சென்றாலும் துரோகிகள் மன்னிக்கவோ மறக்கப்படவோவில்லை. தண்டிக்கப்படுகிறார்கள்.
(3)அரசு தமது தேவைக்கு கறிவேப்பிலைபோல் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடும்.
(4)கேரளா, மேற்குவங்கம் மட்டுமன்றி பஞ்சாபிலும் கம்யுனிஸ்டுகள் அரச பயங்கரவாதத்துடன் சேர்ந்து பங்காளிகளாக செயற்பட்டுள்னர்.
(5)தமிழ்நாட்டில் அரச பயங்கரவாதத்தை கண்டிக்கும் கம்யுனிஸ்டுகள் தமது இத் தோழர்களின் பயங்கரவாத்தை முதலில் கண்டிக்க வேண்டும். செய்வார்களா?
140
You, கமலா பாலன், Gulasinganathan
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment