Monday, October 26, 2020
கனிமொழியின் கண்டனம் பாராட்டுக்குரியது!
•கனிமொழியின் கண்டனம் பாராட்டுக்குரியது!
விஜய் சேதுபதியின் மகளுக்கு வக்கிர மிரட்டல் விடுத்தவர் மீது கடும் நடிவடிக்கை எடுக்குமாறு கனிமொழி கோரியிருப்பது பாராட்டுக்குரியது.
விஜய் சேதுபதி பிரச்சனை பற்றி இதுநாள் வரை எந்த கருத்தும் கூறாமல் மௌனம் காத்த கனிமொழி இப்போது இதற்கு கருத்து கூறியிருப்பது பாராட்டுக்குரியது.
ஆனால் முகநூலில் யாரோ ஒருவர் மிரட்டல் விட்டதற்கே இந்தளவு சீற்றம் கொண்ட கனிமொழி உண்மையிலேயே தமிழ் சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த மகிந்த ராஜபக்சாவுடன் எப்படி கைகுலுக்கி பரிசில்கள் பெற முடிந்தது?
கனிமொழி அவர்களே!
“அகதி நாயே! உன் அம்மாவை அனுப்பு ……….” என்று முகநூலில் எழுதும் உங்கள் உடன்பிறப்புகளையாவது உங்களால் கண்டிக்க முடியுமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment